spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைபாஜகவை பதறவைத்த சந்திரபாபு நாயுடு! செப்.17 தீபாவளி பரிசு! ஜீவசகாப்தன் நேர்காணல்!

பாஜகவை பதறவைத்த சந்திரபாபு நாயுடு! செப்.17 தீபாவளி பரிசு! ஜீவசகாப்தன் நேர்காணல்!

-

- Advertisement -

தமிழ்நாட்டை பின்பற்றி ஆந்திராவில் இலவச பேருந்து பயணம் திட்டத்தை முதலமைச்சர் சந்திரபாபு தொடங்கி வைத்துள்ளது குறித்து, அதன் கூட்டணி கட்சியான பாஜக கேள்வி எழுப்பாதது ஏன்? என்று ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

we-r-hiring

சந்திரபாபு நாயுடு, ராகுல் காந்தியுடன் ரகசியமாக பேசுவதாக ஜெகன் மோகன் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளது குறித்து ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:- ஆந்திராவில் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டத்தை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்துள்ளார். பெண்கள் இலவச பேருந்தில் பயணிப்பதை ஊக்குவிக்கும் விதமாக முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் பெண்களுடன் பயணம் மேற்கொண்டு உள்ளனர். அந்த பேருந்தை நடிகரும், எம்எல்ஏவுமான பாலகிருஷ்ணா ஓட்டியுள்ளார். ஆந்திராவில் இதுபோன்ற நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுவது வரவேற்கத் தக்கதாகும். அந்த வகையில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை பாராட்டலாம். தமிழ்நாட்டில் இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபோது, இதனை வரவேற்றார்கள். பெண்கள் வெளியே போகக்கூடாது என்கிற குரலை அடித்து நொறுக்குகிற விதமாக முதலமைச்சரின் அந்த அறிவிப்பு இருந்தது.

பொதுவாக சனாதன, ஆணாதிக்க சக்திகளுக்கு பெண்கள் படிப்பது, வேலைக்கு செல்வது, ஆண்களை விட அதிகமாக சம்பளம் வாங்குவது பிடிக்காது. அதனுடைய வெளிப்படையாக துக்ளக் குருமூர்த்தி, அதை இழிவுபடுத்தி பேசினார். பொதுவாக பேருந்துகளில் செல்வது உழைக்கும் பெண்கள், நடுத்தர வர்க்கத்து பெண்கள் தான். அப்படிபட்ட பெண்களை இழிபடுத்துகிற விதமாக, இந்த திட்டத்தை அவமதிக்கும் விதமாக துக்ளக் வகையறாக்கள் பேசினார்கள். தற்போது பாஜக கூட்டணி ஆட்சி செய்யும் ஆந்திராவில் இந்த திட்டத்தை செயல்படுத்துகிறார்கள்.

ஆந்திர அரசு ஏற்கனவே அம்மா உணவக திட்டம் உள்ளிட்ட தமிழ்நாட்டை பின்பற்றி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளனர். அதேபோல், தென்னிந்தியா முழுவதும் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதேபோல், வடஇந்தியாவில் பாஜக அரசுகளே தமிழ்நாடு அரசின் திட்டங்களை பின்பற்றி தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர். ஆனால் இங்குள்ள வலதுசாரிகள், பாஜகவினர் தமிழ்நாட்டில் திட்டங்களை கொண்டு வரும்போது அதை அவமானப் படுத்துகிறார்கள். சலுகை கொடுக்கிறார்கள். மானியம் கொடுக்கிறார்கள். இடஒதுக்கீடு கொடுக்கிறார்கள் என்று அதை கேவலப்படுத்துகிற விதமாக பேசினார்கள். தற்போது பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திராவில் திராவிட மாடல் அரசை பின்பற்றி இலவச பேருந்து திட்டத்தை கொண்டுவந்துள்ளது ஏன் என்று கேள்வி எழுப்ப வேண்டியதுதானே? இதை நாங்கள் ஏற்க மறுக்கிறோம். ஏன் ஆந்திர பெண்களுக்கு இன உணர்ச்சி இல்லையா? ஏன் அவர்கள் காசு கொடுத்து பேருந்தில் செல்ல மாட்டார்களா என்று கேட்கவில்லை. அதை பாஜகவின் தீவிர ஆதரவாளரான பவன் கல்யாணும் கேட்கவில்லை.  இதுபோன்ற விஷயங்கள் எதை காட்டுகிறது என்றால்? இதுதான் இயற்கை. பெரியாரிய கருத்துக்கள். அனைத்து தரப்பு மக்களுக்குமான வளர்ச்சி என்று அன்றைக்கு பேரறிஞர் அண்ணா சொன்னார். அதுதான் உண்மையான வளர்ச்சி. அதுதான் மக்கள்நல அரசு. அந்த வகையில் ஆந்திரா இந்த திட்டத்தை பின்பற்றியுள்ளது.

சந்திரபாபு நாயுடு வெற்றி ; ஜெகன் மோகன் ராஜினாமா

சந்திரபாபு நாயுடு சமீபகாலமாக ஆஃப் மோடில் தான் இருக்கிறார். ஜெகன்மோகன் ரெட்டி,  சந்திரபாபு நாயுடுவே போலி வாக்காளர்களை சேர்த்து, திருட்டுத்தனமாக தான் வெற்றி பெற்றார். பல லட்சம் போலி வாக்காளர்கள் மூலமாகவும், வாக்குகள் திருடப்பட்டதன் மூலமாகதான் அவர் வெற்றி பெற்றார் என்கிறார். ராகுல்காந்தி, கர்நாடாக, மகாராஷ்டிரா, பீகார் குறித்து மட்டும் பேசுகிறார். ஏன் ஆந்திரா குறித்து பேசவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் சந்திரபாபு நாயுடுவும், ராகுலும் சந்தித்து பேசி கொண்டிருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். இது உறுதிபடுத்தப்படாத செய்தியாகும்.

அப்போது சந்திரபாபு நாயுடுவும், ராகுலும் தொடர்பில் உள்ளனர் என்று மோடியிடம் போட்டுக்கொடுக்கிறாரா? அல்லது ராகுலுக்கு இவரே சிக்னல் கொடுக்கிறாரா? என்று தெரியவில்லை. ஜெகன்மோகன் ரெட்டிக்கு தற்போது கூட மோடியை பார்த்து கேள்வி கேட்கவில்லை. அதற்கு காரணம் அவரும் மோடியை பகைத்துக்கொள்ளக் கூடாது என்று நினைக்கிறார். இப்போது நாம் கவனிக்க வேண்டியது சந்திரபாபு நாயுடுவும், ராகுலும் டீலிங்கில் உள்ளனரா? என்பதுதான். சந்திரபாபு நாயுடு சைலண்ட மோடில் போனதன் அர்த்தம் என்ன? தமிழ்நாடு அரசை போன்று சமூக நீதி அரசாக செயல்பட வேண்டியதன் அவசியம் என்ன?

திருப்பதி லட்டு விவகாரம், வக்பு விவகாரம் போன்றவற்றை வைத்து பார்க்கிறபோது, சந்திரபாபு நாயுடு, பாஜக கூட்டணியில் பிளெக்சிபிளாக இல்லை. திருப்பதி விவகாரத்தில் சந்திரபாபுவை விட, பவன் கல்யாண் தான் பெரிய அளவில் இறங்கினார். சந்திரபாபு நாயுடுவதால் முழு வலதுசாரி மனநிலையோடு செயல்பட முடியவில்லை. அதற்கு காரணம் தென்னிந்தியாவை சேர்ந்த குணம் அவருக்கு உண்டு. ஆந்திராவில் பாஜக கால்பதிக்க முயன்றாலும், அங்கு ஜாதி, மதம் போன்றவறறை வைத்து அரசியல் செய்ய முடியாது. சந்திரபாபு நாயுடு,  ஆந்திராவின் வளர்ச்சி, சிறப்பு நிதி போன்றவற்றை சொல்லித்தான் ஆட்சிக்கு வந்தாரே தவிர, பாஜகவின் மதவாத அரசியலை செய்து வரவில்லை. வக்பு விவகாரத்தில் கூட அவர் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதனால் பவன் கல்யாணை வைத்து, சந்திரபாபு நாயுடுவுக்கு செக் வைத்துக் கொண்டே இருந்தார்கள். பவன் கல்யாண் பாஜகவின் ஆளாகவே மாறி வந்துகொண்டிருந்தார். திருப்பதி விவகாரத்தில் நடிகர் சந்தானத்தை மிரட்டியது. திருப்பதி குறித்து எப்படி பேசலாம் என்று சூர்யா, கார்த்தியை மிரட்டியது போன்ற வேலைகளையும் அவர் செய்தார். அவரை வைத்து தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கு மொழிபேசும் மக்களின் வாக்குகளை பெற பார்த்தார்கள். ஆனால் எதுவும் எடுபடவில்லை. அதனால் தற்போது ஜெகன் மோகன் சந்திரபாவு நாயுடுவை, ராகுலுடைய ஆள் என்று சொல்கிறார்.

இது ஒரு முக்கியமான அரசியல் திருப்பு முனையாக பார்க்கிறேன். செப்டம்பர் 17 மோடியின் பிறந்தநாளாகும். மோடிக்கு 75 வயது ஆன உடன் அவரை பிரதமர் பொறுப்பில் இருந்தும், அரசியலில் இருந்தும்  நீக்கியாக வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர்களும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் உள்ளது. நாக்பூர் லாபியை மீறிய ஒரு குஜராத் லாபி நடைபெறுகிறது என்கிற அச்சம் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு இருக்கிறது. இந்தநிலையில்தான் சந்திரபாபு நாயுடு, தமிழ்நாட்டு மாடலை அடிப்படையாக கொண்ட அரசியலை செய்கிறார். அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அவர் சற்று பின்னடைவை சந்தித்துள்ளார். பீகாரிலும் பாஜக கூட்டணியில் உள்ள நிதிஷ்குமாருக்கும், சிராக் பாஸ்வானுக்கும் பிரச்சினைகள் வந்துகொண்டுதான் இருக்கிறது. அதேவேளையில் நிதிஷை காலி செய்கிற வேளையிலும் பாஜக ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட விவகாரம் வெளிவந்தால் பாஜக – நிதிஷுக்கு தான் நெருக்கடி. நீதிமன்றம் அதை நோக்கிதான் சென்று கொண்டிருக்கிறது. நீக்கப்பட்டவர்களை ஆதாரை வைத்து சேர்க்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பாஜகவுக்கு பின்னடைவாகும். ஆந்திராவிலும், தமிழ்நாடு அரசின் திட்டத்தை செயல்படுத்துகிறார். எனவே இன்றைக்கு பாலகிருஷ்ணா தொடங்கிய பேருந்து பயணம் என்பது நாக்பூரை நோக்கி போகுமா? அல்லது ஆந்திராவின் வளர்ச்சியை நோக்கி போகுமா? என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது. எப்பாடியாக இருந்தாலும் செப்டம்பர் 15க்கு பிறகு அரசியலில் ஒரு சலசலப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பார்ப்போம் எங்கே அரசியல் பூகம்பம் வெடிக்கப் போகிறது என்று, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ