spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா‘சிறப்பு விசாரணை குழு’அமைக்க வேண்டும்… உச்சநீதிமன்றத்தில் மனு

‘சிறப்பு விசாரணை குழு’அமைக்க வேண்டும்… உச்சநீதிமன்றத்தில் மனு

-

- Advertisement -

ராகுல் காந்தியின் “வாக்காளர் முறைகேடு” என்ற குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு  நடத்த வேண்டும் என உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது!‘சிறப்பு விசாரணை குழு’அமைக்க வேண்டும்… உச்சநீதிமன்றத்தில் மனு

கர்நாடகா, மராட்டிய மாநில உள்ளிட்ட சட்டமன்றத் தேர்தல்களில் வாக்காளர் முறைகேடு நடைபெற்றதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆதாரங்களுடன் டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குற்றம் சாட்டினார். ஆனால் தேர்தல் ஆணையம் குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு, இது குறித்து 7 நாட்களில் ராகுல் காந்தி அவரிடம் உள்ள ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்! இல்லையென்றால் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்திருந்தது.

we-r-hiring

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு குறித்து ‘சிறப்பு விசாரணை குழு’ விசாரிக்க உத்தரவிட கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ரோஹித் பாண்டே  என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், வாக்காளர் பட்டியலில் வெளிப்படைத்தன்மை, பொறுப்பு மற்றும் நேர்மை உள்ளிட்டவற்றை உறுதி செய்யக் கூடிய வகையில் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உரிய வழிகாட்டுதலை வழங்குவதோடு, விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரிக்கையை வைத்துள்ளார். இம்மனு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘கூலி’ ஓவர்… அடுத்தது ‘ஜெயிலர் 2’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

MUST READ