spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதவெக மாநாட்டில் தூக்கிவீசப்பட்ட இளைஞர்! விஜயிடம் உண்மை இல்லை! விளாசும் தாமோதரன் பிரகாஷ்!

தவெக மாநாட்டில் தூக்கிவீசப்பட்ட இளைஞர்! விஜயிடம் உண்மை இல்லை! விளாசும் தாமோதரன் பிரகாஷ்!

-

- Advertisement -

தவெக மாநாட்டில் பவுன்சரால் இளைஞர் தூக்கிவீசப்பட்ட சம்பவம் சர்ச்சையான நிலையில், அவரை போன்றே மற்றொரு போலியான நபரை தயார் செய்து பேட்டி அளிக்க வைக்கின்றனர். இதன் மூலம் விஜய் உண்மைத் தன்மையுடன் இல்லை என்பது தெரிகிறது என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில் இளைஞர்  மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் யூடியுப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- மதுரையில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்று முடிந்துள்ளது. மாநாடுகளில் சிறப்பு அம்சமாக இருப்பது பேச்சு தான். இந்த மாநாட்டில் ஒருவர் கூட சரியாக பேசவில்லை. அதற்கு பிறகு விஜயின் ரேம்ப் வாக். அதுதான் இன்றைக்கு பெரிய பிரச்சினையாகி உள்ளது. ரேம்ப் வாக்கின்போது பாய்ந்த இளைஞர்கள். அவர்களை பவுன்சர்கள் கையாண்ட விதம் ஆகியவை விவாதப் பொருளாகி இருக்கின்றன. பெரம்பலூர் மாவட்டம் மூங்கில்பாடியை சேர்ந்த சரத்குமார் என்கிற இளைஞரை மேடையில் இருந்து தூக்கி வீசினார்கள். 15 அடி உயரத்தில் இருந்து தூக்கி வீசுகிறபோது அவருக்கு பலத்த அடி பட்டிருக்கும். நல்வாய்ப்பாக அவர் கம்பியை  பிடித்து தொடங்கிவிட்டார். இதில் முக்கியமான விஷயம் என்ன என்றால் சரத்குமாரை போன்று மற்றொரு போலியான நபரை தயார் செய்துவிட்டனர்.

சரத்குமாரின் அம்மா ஊடகங்களை பார்த்து கதறிவிட்டார். விஜய் பெரிய நடிகராக இருக்கலாம். ஆனால் அவரின் அம்மாவுக்கு அவர் பிள்ளை இல்லையா? சரத்குமாரின் தயார் தகறல் பெரிதாகியதால், சரத்குமார் போன்றே உடை, நடை, பாவனையுடன் ஒரு நபரை செட் செய்து பேட்டி அளிக்க வைத்து விட்டனர். சரத்குமார் புகார் அளிக்க விரும்பவில்லை. ஆனால் போலியான நபரை எல்லாம் தயார் செய்ததால், அவர் காவல்துறையில் புகார் அளித்துவிட்டார். அதன் பேரில் நடிகர் விஜய் மற்றும் பவுன்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது கைது நடவடிக்கை வரை செல்லும் அபாயம் உள்ளது. அதனால்தான் போலியான நபரை தயார் செய்தார்கள்.

சரத்குமாரை, பவுன்சர்கள் தூக்கி வீசியபோது விஜய் அவர் மீது கோபப்பட்டார். ஆனால் கம்பியில் தொங்கிய சரத்குமாரை கண்டுகொள்ளாமல் போய்விட்டார். ஒருவேளை சரத்குமாரை மேலே தூக்கி அவரிடம் இதுபோல் செய்யக்கூடாது என்று சொல்லி இருந்தார் என்றால், அவருடைய இமேஜும் மாறி இருக்கும். இவ்வளவு பிரச்சினையும் ஏற்பட்டிருக்காது. இந்த விவகாரத்திற்கு பிறகு பெரம்பலூர் மாவட்ட செயலாளரை வைத்து பேரம் பேசினார்கள். ஆனால் அவர்கள் ஊடகங்களை சந்திக்க தயார் ஆனதால் வேறு ஒரு நபரை வைத்து பேட்டி கொடுத்தனர். அவர்தான் விழுந்த இளைஞர் என்பதற்கு புகைப்படங்கள் எல்லாம் தயார் செய்தார்கள். இதன் மூலம் விஜயிடம் உண்மைத்தன்மை இல்லை என்பது தெரிகிறது. தவெக மாநாட்டில் குடிநீர், சாப்பாடு உள்ளிட்டவை இல்லாமல் 128 பேர் உயிருக்கு போராடி உள்ளனர். மாநாட்டிற்கு வந்தவர்களில் பெரும்பாலானோர் அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர்தான்.

தவெக மாநாட்டிற்கு வந்த கூட்டம் வாக்குகளாக மாறுகிற வாய்ப்பு உள்ளது. மொத்தம் 5 லட்சம் பேர் வந்திருந்தார்கள் என்று வைத்துக்கொண்டால் கூட ஒரு தொகுதிக்கு ஆயிரம் வாக்குகள் தான் வரும். மாநாட்டில் பேசிய விஜய், அங்கிள்  வெரி ராங் அங்கிள் என்று ஸ்டாலினை கண்டித்து பேசுகிறார். மேலும் வழக்கமாக அரசியல் கட்சிகள் சொல்வது போல தான் ஆட்சிக்கு வந்தால் பல்வேறு திட்டங்களை செயல்படுவத்துவதாக சொல்கிறார். அதே திட்டங்களை திமுக அரசு செயல்படுத்துகிற போது இவர்கள் எதற்காக? என்கிற கேள்வி எழுகிறது. புதிதாக எந்த திட்டத்தையும் அவர் சொல்லவில்லை. மத்திய அரசை விமர்சிப்பதாக இருந்தால் வாக்குத் திருட்டு, பதவி பறிப்பு மசோதா போன்றவை குறித்து பேசியிருக்க வேண்டும். ஆனால் அதுகுறித்து பேசாமல் கச்சத்தீவை மீட்டுத்தர வேண்டும். நீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று சொல்கிறார்.

என்ன இதுக்காக கட்சி தொடங்கினேன் என்று விஜய் சொல்கிறார். அப்போது என்ன இதுக்காக நீங்கள் கட்சி தொடங்கினீர்கள்? என்ன இதுக்காக இவ்வளவு பேரை கூப்பிட்டீர்கள்? சென்னையில் விமான சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழந்தனர். அதற்கு விஜய் கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில், தவெக மாநாட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 28 பேர் மரணத்தை நெருங்கிவிட்டார்கள். பிறகு எதற்கு இந்த மாநாட்டை நடத்துகிறீர்கள்? கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக என்று விஜய் சொல்கிறார். இது இரண்டுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது. கொள்கை இல்லாமல் அரசியல் இருக்க  முடியுமா? இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ