spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமாநிலங்களை தண்டித்தால் இந்தியா முன்னேற முடியாது – முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்

மாநிலங்களை தண்டித்தால் இந்தியா முன்னேற முடியாது – முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்

-

- Advertisement -

தம் மக்களுக்காக முன்நிற்கும் மாநில அரசுகளைத் தண்டிப்பதன் வழியாக இந்தியா வளர்ச்சி பெற முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.மாநிலங்களை தண்டித்தால் இந்தியா முன்னேற முடியாது – முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய அரசின் சமீபத்திய ஜிஎஸ்டி மறுசீரமைப்பை குறித்து தனது இணையதளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில்” “ஜி.எஸ்.டி. வரிக்குறைப்பாலும் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பை உயர்த்தியதாலும் இந்தியர்கள் 2.5 லட்சம் கோடி ரூபாயைச் சேமிக்கலாம்” என மாண்புமிகு பிரதமர் கூறியுள்ளார். இதைத்தானே தொடக்கத்தில் இருந்தே எதிர்க்கட்சிகளான நாங்கள் வலியுறுத்தி வந்தோம். “இந்த நடவடிக்கைகள் எட்டு ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்டிருந்தால், இந்தியக் குடும்பங்கள் ஏராளமான தொகையை முன்னரே சேமித்திருக்கக் கூடும்” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும்,வரிக்குறைப்பில் மாநில அரசுகளின் பங்களிப்பு பெரிதாக உள்ளதையும், ஆனால் ஒன்றிய அரசு அதனை வெளிப்படுத்தவில்லை என்றும் குறிப்பிட்டார். இதுகுறித்து அவர், “இந்த உண்மையை சுட்டிக்காட்டுவது எனது கடமையாகிறது” என தெரிவித்தார்.

we-r-hiring

மற்றொரு புறம், ஒன்றிய பா.ஜ.க. அரசு மாநிலங்களுக்கு நியாயமாகச் சேர வேண்டிய நிதியைத் தர மறுத்து வருகிறது. இந்தித் திணிப்பை ஏற்க மறுக்கும் ஒரே காரணத்துக்காக, ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதி மறுக்கப்படுகிறது. இந்த அநீதி எப்போது முடிவுக்கு வரும்?

தங்கள் உரிமைகளைப் பாதுகாத்து, தம் மக்களுக்காக முன்நிற்கும் மாநில அரசுகளைத் தண்டிப்பதன் வழியாக இந்தியா வளர்ச்சி பெற முடியாது. கூட்டாட்சிக் கருத்தியலுக்கு மதிப்பளியுங்கள், உரிய நிதியை விடுவியுங்கள், மக்களுக்கு நியாயமாகச் சேர வேண்டியதைத் தந்து அவர்களைப் பயனடைய விடுங்கள்” எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

கார்த்தி – லோகேஷின் ‘கைதி 2’ படம் ட்ராப்…. உண்மை காரணம் இதுதானா?

MUST READ