spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஒரு ஓட்டுக்கு ரூ.10,000 தரும் மோடி! நிதிஷ் கட்சி சோலி இதோட காலி! பத்திரிகையாளர் ஆர்.மணி...

ஒரு ஓட்டுக்கு ரூ.10,000 தரும் மோடி! நிதிஷ் கட்சி சோலி இதோட காலி! பத்திரிகையாளர் ஆர்.மணி பேட்டி!

-

- Advertisement -

பீகாரில் நிதிஷ்குமார் அரசு புதிய திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 25 லட்சம் பெண்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கியிருப்பது, அம்மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரிய கேம் சேஞ்சராக இருக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் ஆர். மணி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

பீகார் தேர்தல் நிலவரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- பீகார் மாநில நிதிஷ்குமார் அரசு ஒரு கோடியே 25 லட்சம் குடும்ப பெண்களுக்கு தலா ரூ.10,000 வழங்கி இருக்கிறது. பிரதமர் ரோஸ்கர் யோஜனா என்கிற திட்டத்தின் கீழ் முதல் தவணையாக ரூ.10,000 வழங்கியுள்ளனர். பாஜக- ஜேடியு கூட்டணி வெற்றி பெற்றால், தொழில் தொடங்க ரூ.2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். ஒருவேளை பெண்களுக்கு தொழில் தொடங்க விருப்பம் இல்லாவிட்டால் அவர்கள் அந்த ரூ.10,000 பணத்தை வைத்துக் கொள்ளலாம்.

இது அப்பட்டமாக வாக்கு அளிப்பதற்கான லஞ்சப் பணமாகும். அரசாங்கமே இணைய வழியில் அனுப்புகிறது. தேர்தல் ஆணையம் இதில் தலையிட்டு திட்டத்தை தடுத்து இருக்க வேண்டும். 1.25 கோடி பெண்களுக்கு பணம் வழங்கியதன் மூலம் கிட்டத்தட்ட 4 கோடி வாக்காளர்களை அவரகள் கவர்ந்துவிட்டனர். இது கேம் சேஞ்சராக இருக்கும் என்பது உண்மைதான். எதிர்வரும் தேர்தலில் என்டிஏ வெற்றி பெற்றால் முதல் 6 மாதங்கள் நிதிஷ் முதல்வராக இருக்கலாம். ஆனால் பிறகு பாஜக முதலமைச்சர் ஆகிவிடும்.

நிதிஷ்குமார் தலைமையில் தேர்தலை சந்திப்போம் என்று அமித்ஷா சொல்கிறார். மோடி, நிதிஷ்குமார் தலைமையில் வரலாறு படைப்போம் என்கிறார்கள். ஆனால் யாரும் நிதிஷ்குமார் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று சொல்லவில்லை. இம்முறை என்டிஏ வெற்றி பெற்றுவிட்டால், நிதிஷ் நிச்சயமாக முதலமைச்சர் ஆக முடியாது. காரணம் ஒரு இந்தி பேசுகிற மாநிலத்தில் பாஜக முதலமைச்சராக இல்லாமல் இருப்பது பீகாரில் மட்டும்தான். பெண்கள் தான் நிதிஷ்குமாரின், பிராதன வாக்கு வங்கி. 2025 நாடாளுமன்றத் தேர்தலில் நிதிஷ், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டு பின்னர் மீண்டும் வந்தார். அப்படி இருந்தபோதும் அவர்கள் கணிசமான வெற்றியை பெற்றனர்.

அதற்கு காரணம் மதுவிலக்கு தடை, உள்ளிட்ட திட்டங்கள் தான். அதனுடன் தற்போது ரூ.10,000 வழங்கும் திட்டமும் உள்ளது. இது ஒரு கேம் சேஞ்சராக மாறியுள்ளது. பீகாரில் உள்ள பொருளாதார நிலைக்கு ரூ.10,000 என்பது மிகப்பெரிய தொகையாகும். ஜே.டி.யுவில் உள்ள 12 எம்.பிக்களின் ஆதரவுடன் தான் மோடியின் அரசு நடைபெறுகிறது. ஆனால் நிதிஷை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்காததை, அக்கட்சி எம்.பிக்கள் யாரும் எதிர்க்கவில்லை.

நிதிஷ்குமாரை, குஜராத்தில் இருந்து வந்த 2 பேர் கடத்திவிட்டதாக தேஜஸ்வி யாதவ் விமர்சனம் செய்கிறார். அது ஏற்புடையது அல்ல. நிதிஷ்குமாரின் 20 ஆண்டுகால ஆட்சி குறித்தும், அமித்ஷா, மோடி மீது குற்றச்சாட்டுகள் குறித்தும் பேசலாம். சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஏன் சட்டப் பாதுகாப்பு வழங்கவில்லை என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. எனவே எதிர்வரும் தேர்தலில் சாதி விவகாரம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.பாஜக பீகாரை சேர்ந்த சீதாராம் கேசரியை, காங்கிரஸ் அவமதிப்பு செய்ததாக குற்றம்சாட்டுகிறது. ஆனால் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி போன்றவர்களை இவர்கள் ஓரம் கட்டினார்கள். நிதிஷ்குமாரின் 20 ஆண்டு கால ஆட்சி குறித்து பேச அவர்களிடம் எதுவும் இல்லை. அதனால் பழைய கதைகளை பேசுகிறார்கள்.

பீகாரில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது 50 லட்சம் பேருக்கு தலா ரூ.10,000 வழங்க தேர்தல் ஆணையம் எப்படி அனுமதி வழங்கியது. இதேபோல், தமிழ்நாட்டில் ஒரு திட்டம் கொண்டுவந்து நிதி வழங்கினால் தேர்தல் ஆணையம் இனி எதிர்க்க முடியாது அல்லவா? எனவே மோடி – நிதிஷ் அரசு ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி உள்ளது. பீகார் தேர்தல் இந்திய ஜனநாயகத்திற்கு அளித்த பங்களிப்பு என்பது? புதிய திட்டங்களின் பெயரில் மாநில அரசின் நிதியை வெளிப்படையாக வாக்களர்களுக்கு லஞ்சம் வழங்குவதாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ