த வெ கவின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.
தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் மகாபலிபுரத்திலுள்ள நட்சத்திர ஹோட்டலில் தொடங்கியது. இக்கூட்டத்திற்கு 2000-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றுள்ளனா். கரூரில் தவெக நடத்திய பிரச்சாரத்தில் 41 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவத்தால் விஜயும், அந்தக் கட்சியின் நிா்வாகிகளும் கடந்த ஒரு மாதத்திற்கு மேல் முடங்கி போய் இருந்தனா். கடந்த மாதம் 27-ம் தேதி கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரையும் மகாபலிபுரத்திற்கு நேரில் வரவழைத்து விஜய் ஆறுதல் தெரிவித்தாா்.
அதன் பின்னா் நடக்கின்ற முதல் பொதுக்குழு கூட்டத்தில் விஜய் தற்பொழுது கலந்துக் கொண்டுள்ளாா். இந்தக் கூட்டத்தில் த வெ க வேறு கூட்டணியில் இடம் பெறுமா? அல்லது தனித்து த வெ க தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிடுவா்களா? என்பதைக் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், கரூர் துயரத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தவெக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல், மீனவர்கள் கைது, SIR-க்கு எதிராகவும், நெல் கொள்முதல் செய்ததை கண்டித்தும், தொழில் முதலீடு, வேலை வாய்ப்புகள் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியும், மக்கள் சந்திப்பில் விஜய் மற்றும் மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட செயலாளர் மதியழகனை கட்டி அணைத்து தீர்மானத்தை விஜய் வாசிக்க அனுப்பினாா்.
தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள் குறித்த விவிரங்கள்:
தீர்மானம் 1
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம்.
கரூரில் திட்டமிட்டு பாதுகாப்பு குறைபாடுடன், குறைபாடுகளை ஏற்படுத்தி அசம்பாவிதம் நடந்தது.
கூட்ட நெரிசலில் இறந்த தியாகிகளுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
தீர்மானம் 2
பெண்கள் பாதுகாப்பு தீர்மானம்
தீர்மானம் 3
தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 35 மீனவர்களை இலங்கை அரசு கைது செய்ததை கண்டித்து தீர்மானம்.
இதனை கண்டிக்க தவறிய பாஜக அரசு கண்டிக்கப்பட்டது. மீனவர்களை மீட்கவும் படகுகளை மீட்கவும் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீனவர்கள் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீர்மானம் 4
தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கையை நிறுத்த கோரும் தீர்மானம்.
தீர்மானம் 5
டெல்டா மாவட்டங்களில் நெல் மற்றும் தானியங்கள் முறையாக கொள்முதல் மேற்கொள்ளாத விவசாயிகளின் விரோத ஆட்சிக்கு எதிரான கண்டனம்.
தீர்மானம் 6
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடிகால் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.
தீர்மானம் 7
பாதுகாக்கப்பட்ட ராம் சார் சதுப்பு நிலத்தில் கட்டுமானம் கட்ட தனியார் நிறுவனத்திற்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம்.
தீர்மானம் 8
மக்கள் சந்திப்பு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் கட்சி தலைவருக்கும், பொதுமக்களுக்கும் தமிழக அரசு முழுமையான பாதுகாப்பினை வழங்க வேண்டும்.
தீர்மானம் 9
கட்சி மீதும் கட்சி நிர்வாகிகள் மீதும் அவதூறு பரப்பும் ஆளும் கட்சி கைகூலிகளுக்கு கண்டனம்.
தீர்மானம் 10
தமிழ்நாட்டில் தொழில்துறை குறித்தும், வேலை வாய்ப்புகள் குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டி தீர்மானம்.
தீர்மானம் 11
தமிழ்நாட்டில் ஜனநாயக அடிப்படையில் பொது பிரச்சனைகளுக்கு கருத்து தெரிவிப்பவர்களை கைது செய்வதற்கு கண்டனம்.
தீர்மானம் 12
தேர்தல் கூட்டணி குறித்து முழு அதிகாரத்தை தலைவர் விஜய்க்கு வழங்கி முழு ஒப்புதல் வழங்கி தீர்மானம்.
தமிழக வெற்றிக் கழகத்தில் மொத்தமாக 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தடாலடியாக குறைந்த தங்கம்!!நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி…


