spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்SIR சட்ட பூர்வமானது அல்ல…அரசியல் சாசனத்துக்கு எதிரானது – வழக்கறிஞர் கபில் சிபல்

SIR சட்ட பூர்வமானது அல்ல…அரசியல் சாசனத்துக்கு எதிரானது – வழக்கறிஞர் கபில் சிபல்

-

- Advertisement -

வாக்காளர் பட்டியல் (SIR) சட்ட பூர்வமானது அல்ல இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தெரிவித்துள்ளாா்.SIR சட்ட பூர்வமானது அல்ல…அரசியல் சாசனத்துக்கு எதிரானது – வழக்கறிஞர் கபில் சிபல்

வாக்காளர் பட்டியல் Special Intensive Revision (S.I.R) நடைமுறையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் விசாரணை தலைமை நீதிபதி அமர்வில் இன்று தொடங்கியது.

we-r-hiring

மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் SIR சட்ட பூர்வமானது அல்ல என்று தனது வாதங்களை தொடங்கினார். ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் மீண்டும் ஏன் குடியுரிமை ஆவணங்களை வழங்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பினாா்.

வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் மீண்டும் குடியுரிமை ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இது தேவையற்ற நடைமுறை என்று வாதிட்டாா். பலருக்கு தற்போதைய  வாக்காளர்கள் விண்ணப்பங்களை நிரப்புவதில் பல  சிக்கல்களை சந்திக்கிறார்கள். பின்தங்கிய இடங்களில் உள்ள மக்களின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. SIR நடைமுறையின் காரணமாக அதிகாரிகளே உயிரிழக்கும் நிலை உருவாகியுள்ளது என்றும், தேர்தல் வரலாற்றில் இது போன்று நடந்ததில்லை என அவர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

தொடர்ந்து அவர், தேர்தல் ஆணையம் செயல்படுத்தும் நடைமுறை சரியானது அல்ல. ஆதார் அட்டை இருக்கும் போது அதனை ஏற்க மறுக்கிறார்கள். ஒரு நபரின் குடியுரிமையை தேர்தல் ஆணையம் முடிவு செய்ய முடியாது. அதனை மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

மேலும், கபில் சிபல் தனது வாதத்தில், ஆதார் அட்டை போன்ற அரசு அங்கீகரித்த ஆவணங்களை ஏற்க மறுப்பது தவறு எனவும், போலி வாக்காளர்களை கண்டறிய மேம்பட்ட மென்பொருட்கள் பயன்படுத்தலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அப்போது வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், நாடு முழுவதும் SIR செயல்படுத்தப்பட்டாலும், அசாம் மாநிலத்தில் மட்டும் SIR நடைமுறை இல்லை என நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

எஸ்.ஐ.ஆர் எதிர்ப்பு தரப்பு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ”கடந்த 1950 ஆம் ஆண்டுக்கு பின் பிறந்தவர்கள் அனைவரும் இந்தியர்கள்தான். இதில் தேர்தல் ஆணையத்துக்கு என்ன சந்தேகம்? எனவேதான் நடப்பு SIR அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று மீண்டும் வலியுறுத்தினாா். இவ்வாறு இரு தரப்பினரும் வாதங்கள் தொடர்ந்த நிலையில், உச்சநீதிமன்றம் வழக்கை நாளைய தினத்துக்கு ஒத்திவைத்தது.

தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக இடதுசாரி கட்சிகள், வி.சி.க முன் வர வேண்டும் – ஆதவ் அர்ஜூனா வலியுறுத்தல்

MUST READ