தீவிரவாதிகள் தாக்குதலில் திருத்தணி சேர்ந்த ராணுவ வீரா் உயிரிழந்தாா். அவரது உடல் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம் சத்திரஞ்ஜெயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னிவேல் மகன் சக்திவேல்(30). இவர், கடந்த, 2018-ஆம் ஆண்டு, இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி வந்தார். தற்போது சக்திவேல், இந்திய காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.
கடந்த 4-ம் தேதி காலை வழக்கம் போல் பாதுகாப்பு பணியில் சக்திவேல் இருந்த போது, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் குண்டு அடிப்பட்டு சக்திவேல் சம்பவ இடத்திலேயே இறந்ததாக ராணுவ அதிகாரிகள் சக்திவேல் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். அவரது உடல் நேற்று இரவு தனிவிமானம் மூலம் டெல்லிக்கு வந்தது. அங்கிருந்து இன்று காலை சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து அரசு மரியாதையுடன் தனி ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் திருத்தணி அடுத்த சத்திரஞ்ஜெயபுரம் கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது. பின் பொதுமக்கள் அவரது உறவினர்கள்அஞ்சலி செலுத்தினர். இதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பிரதாப் மற்றும் மாவட்ட எஸ்.பி., விவேகானந்த சுக்லா தலைமையில் ராணுவ வீரர்கள் உயிர் இருந்த ராணுவ வீரர் சக்திவேலுக்கு மலர் அஞ்சலி செலுத்த உள்ளார். இன்று மாலை ராணுவ வீரர் சக்திவேல் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது.
துரை வைகோ இன்னும் அரசியலில் எல்கேஜியாகவே இருக்கிறார் – மல்லை சத்யா விமர்சனம்



