spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமுதல்வரின் நல்லாட்சிக்கு பல்லடத்தில் கூடியுள்ள மகளிர் கடலே சாட்சி -துணை முதல்வர் புகழாரம்

முதல்வரின் நல்லாட்சிக்கு பல்லடத்தில் கூடியுள்ள மகளிர் கடலே சாட்சி -துணை முதல்வர் புகழாரம்

-

- Advertisement -

திமுக மகளிா் அணி சாா்பில் ”வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாநாடு  பல்லடத்தில் தொடங்கியது.முதல்வரின் நல்லாட்சிக்கு பல்லடத்தில் கூடியுள்ள மகளிா் கடலே சாட்சி -துணை முதல்வர் புகழாரம்திருப்பூரிலுள்ள பல்லடத்தில் திமுக மகளிா் அணி சாா்பில் ”வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாநாடு தொடங்கியது. பெண்கள் இருசக்கரவாகனத்தில் பேரணியாக முதல்வரை வரவேற்றனா். ஒன்றரை லட்சம் பெண்கள் பங்கேற்று அரங்கமே நிறம்பியது. மாநாட்டு திடலுக்கு திறந்த வேனில் நின்று கை அசைத்தப்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை புரிந்தாா். முதல்வருக்கு தொண்டா்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனா். அதன்பின்னா் முதல்வர் பெரியாா், அண்ணா, கலைஞா் படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.முதல்வரின் நல்லாட்சிக்கு பல்லடத்தில் கூடியுள்ள மகளிா் கடலே சாட்சி -துணை முதல்வர் புகழாரம்திருப்பூரிலுள்ள பல்லடத்தில்”வெல்லும் தமிழ்ப் பெண்கள்” திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாட்டில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கலந்துக் கொண்டு உரையாற்றினாா். அதில் “திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாட்டில் 39 சட்டமன்ற தொகுதிகளை சோ்ந்த 1.5 இலட்சம் மகளிா் பங்கேற்றனா். திமுக இளைஞரணி மாநாட்டினை கண்டு சங்கி கூட்டம் 10 நாள் புலம்பிக் கொண்டே இருந்தது. அவா்களுக்கு தூக்கமும் வராது. இந்தியாவில் உள்ள அனைத்து மகளிருக்கான உரிமை குரலாக ஸ்டாலனின் குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. மொழி மாநிலம் பெண் உரிமை என்றால் காஷ்மீரில் இருப்பவா்களுக்கே நினைவில் வருவது நாம் தான். திமுக ஆட்சிக்கும் முதலமைச்சா் மு.க.ஸ்டாலனின் நல்லாட்சிக்கும் பல்லடத்தில் கூடியுள்ள மகளிா் கடலே சாட்சி. தனது ஆட்சியில் முதலில் போட்ட கையெழுத்து மகளிா் விடியல் பயண திட்டத்துக்குத் தான். தமிழ்நாடு எப்பொழுதும் டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் தான்” என்று கூறினாா்.

எஸ்.ஐ.ஆர். – கடந்த 2 நாட்களில் 5.43 லட்சம் பேர் விண்ணப்பம்…

MUST READ