spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் - சளைக்காமல் செயல்படுங்கள் - ரயன் ஹாலிடே

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – சளைக்காமல் செயல்படுங்கள் – ரயன் ஹாலிடே

-

- Advertisement -

வெளியே செல்வதற்கான வழி எப்போதும் அதனூடாகத்தான் என்று அவன் கூறுகிறான். அதனோடு நான் உடன்படுகிறேன். அது இல்லாமல் வேறு எந்த வழியும் என் கண்களுக்குத் தெரியவில்லை” – ராபர்ட் ஃபிராஸ்ட்தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் - சளைக்காமல் செயல்படுங்கள் - ரயன் ஹாலிடேஜெனரல் யுலிசீஸ் கிரான்ட், விக்ஸ்பர்க் என்ற நகரின் முற்றுகையை உடைக்கப் படாதபாடு பட்டுக் கொண்டிருந்தார். அந்நகர் மிசிசிபி ஆற்றின் அருகே ஒரு சிறு குன்றின் மேல் இருந்தது. அது கான்பெடரேட் இராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்தது. யுலிசீஸ் முதலில் நேருக்கு நேர் மோதிப் பார்த்தார். பின்னர் அவர் அந்நகரைச் சுற்றி வளைக்க முயன்றார். அந்த ஆற்றின் அருகே வேறு ஒரு கால்வாயை வெட்டி அதன் நீரின் போக்கைத் திருப்பப் பல மாதங்களாக அவர் முயன்று பார்த்தார். ஆற்றங்கரையை உடைத்து அதிலிருந்து வெளியேறிய நீரின் வெள்ளப் பெருக்கில் படகுகள் மூலம் அந்த நகரை அடையவும் அவர் முயன்றார்.

ஆனால் எதுவுமே வேலை செய்யவில்லை. அவருக்கு மாற்றாக ஒரு படைத்தளபதியை ஆபிரகாம் லிங்கன் நியமித்தார். அவர் அங்கு செல்வதற்காகக் காத்துக் கொண்டிருந்தார். ஆனால் இது எதையும் கண்டு யுலிசீஸ் அரண்டு போகவில்லை. அவர் தன்னுடைய முயற்சியை நிறுத்தவுமில்லை, எதற்கும் அவசரப்படவுமில்லை. எதிரிக்கு எங்கோ ஒரு பலவீனம் கண்டிப்பாக இருக்கும் என்று அவர் உறுதியாக நம்பினார். அதைக் கண்டுபிடிப்பதென்று அவர் உறுதி பூண்டார்.

we-r-hiring

அதற்கு அடுத்து அவா் மேற்கொண்ட செயல் பொதுவாகக் கடைபிடிக்கப்பட்டு வருகின்ற இராணுவ நடைமுறைகளுக்கு நேரெதிராக இருந்தது. ஆற்றைப் பாதுகாத்துக் கொண்டிருந்த எதிரி பீரங்கிகளைக் கடந்து தங்களுடைய படகுகளில் ஆற்றின் போக்கோடு செல்வதுதான் அவருடைய திட்டமாக இருந்தது. அது ஆபத்தான திட்டம் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் ஒரு முறை அந்த இடத்தைக் கடந்து சென்றுவிட்டால், மீண்டும் அவர்களால் தங்களுடைய முந்தைய இடத்திற்குத் திரும்ப முடியாது அவர் தன்னுடைய படையினரில் ஒரு பகுதியைப் படகுகளில் அழைத்துச் சென்றார். கடும் சண்டைக்கு நடுவிலும் அவருடைய படகுகள் அந்த இடத்தை வெற்றிகரமாக கடந்துவிட்டன. ஒரு சில நாட்களுக்குப் பிறகு முப்பது மைல்களுக்கு அப்பால் அவர் ஆற்றிலிருந்து கரையேறினார்.

யுலிசினின் திட்டம் துணிகரமானதாக இருந்தது. பின்னர் அவர் மறுபடியும் விக்ஸ்பர் நோக்கி நிலத்தின் வழியாகத் தன் படையுடன் முன்னேறத் தொடங்கினார். நடுவிலிருந்த கிராமங்களை ஒவ்வொன்றாக வென்று கொண்டே வந்து இறுதியில் விக்ஸ்பர்கை நெருங்கி, அதன் அரண்களை உடைத்து அவர் அதைக் கைப்பற்றினார். அவருடைய வெற்றிக்கு அவர் பெரும் விலை கொடுக்க வேண்டியிருந்தபோதிலும் இறுதியில் அதை அவா் சாதித்துக் காட்டினார்.

தடைகளை எதிர்கொள்கின்றபோது நாமும் இதைத்தான் செய்ய வேண்டும். தோல்வியால் துவளக்கூடாது. கவனச்சிதறலுக்கு ஆட்படக்கூடாது. மூட்டுக்கட்டைகளைச் சிறிது சிறிதாகச் செதுக்கி இறுதியில் அவற்றை வெற்றி கொள்ள வேண்டும்.

விக்ஸ்பர்க்கில் யுலிசீஸ் இரண்டு விஷயங்களைக் சுற்றுக் கொண்டார். முதவாவது, விடாமுயற்சியும் பிடிவாதமும் மிகச் சிறந்த சொத்துகள் என்பது. ஒரு தலைவர் என்ற முறையில் அவை அவருடைய மிக முக்கியமான சொத்துகளாக விளங்கின. இரண்டாவது, பாரம்பரியமான அனைத்து முயற்சிகளும் தீர்ந்து போகும்போது புதிய வழிகளைக் கண்டுபிடிக்கத் தான் நிர்ப்பந்திக்கப்படுவோம் என்பது. அத்தகைய ஒரு புதிய வழிதான் இறுதியில் அவருக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தது.

யுலிசீஸின் கதை ஒரு விதிவிலக்கு அல்ல. அதுதான் விதி. அப்படித்தான் புதுமைகள் பிறக்கின்றன.

1878ல் மின்விளக்குகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது தாமஸ் ஆல்வா எடிசன் ஒருவர் மட்டும் அல்ல. ஆனால் அவர் ஒருவர் மட்டும்தான் ஆறாயிரம் விதவிதமான பொருட்களை அந்த விளக்கின் இழைகளாகப் பரிசோதித்தார். அவற்றில் அவருடைய குழுவிலிருந்த ஒருவருடைய தாடி முடிகூட அடங்கும்! இப்படி, அவர் அங்குலம் அங்குலமாகத் தன்னுடைய வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார்.

இறுதியில் அவர் அதில் வெற்றியும் பெற்றுவிட்டார். மேதமை என்பது மாறுவேடம் தரித்துள்ள விடாமுயற்சிதான் என்பதை அவர் நிரூபித்தார். தன்னுடைய விடாமுயற்சியின் மூலமாகத்தான் அவரால் தன்னுடைய போட்டியாளர்களைத் தோற்கடிக்க முடிந்தது.தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் - சளைக்காமல் செயல்படுங்கள் - ரயன் ஹாலிடேஎடிசனின் இந்தச் சோதனை முயற்சியின்போது ஓராண்டு அவருடன் இருந்த நிக்கோலா டெஸ்லா, எடிசனைப் பற்றி இவ்வாறு கூறியிருக்கிறார்: “ஒரு வைக்கோல் குவியலில் ஓர் ஊசியைத் தேட வேண்டுமென்றால், எடிசன் உடனடியாகக் காரியத்தில் குதித்து ஒவ்வொரு வைக்கோலாக அலச ஆரம்பித்துவிடுவார். அந்த ஊசி கிடைக்கும்வரை அவர் தன்னுடைய முயற்சியை நிறுத்த மாட்டார். சில நேரங்களில் அது சரியான முறையாக விளங்கக்கூடும்.”

 

முட்டுக்கட்டைகளைச் சந்திக்கின்றபோது, நாம் யுலிசீஸையும் எடிசனையும் நினைவுபடுத்திக் கொள்வது உதவிகரமானதாக இருக்கும். அவர்கள் இருவருமே தங்களுடைய முயற்சியைக் கைவிட மறுத்தனர். தடைகளை மீற இருந்த அனைத்து வாய்ப்புகளையும் உற்சாகத்துடன் அவர்கள் தங்கள் மனத்தில் அசை போட்டனர். இறுதியில் கண்டிப்பாக ஏதாவது ஒன்று வேலை செய்தாக வேண்டும் என்று அவர்கள் நம்பினர்.

உங்கள் வழியை அடைத்துக் கொண்டு நின்று கொண்டிருப்பது அதுவாகவே அந்த இடத்தைவிட்டு எங்கும் போகப் போவதில்லை. நீங்கள் உலகத்தையே மாற்றப் போகின்ற ஓர் அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தி அப்பிரச்சனையைத் தீர்க்கப் போவதில்லை. எடிசன் போன்றவர்களின் கண்டுபிடிப்புகள் திடீரென்று தோன்றிய ஒரு யோசனையால் உருவானவை என்று நிறையப் பேர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அந்தக் கண்டுபிடிப்பாளர்கள் தங்களுடைய பிரச்சனைகளுக்குத் தங்களுடைய மேதமையால் தீர்வு கண்டுவிட்டதாக மக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். பல கோணங்களிலிருந்து அலசப்பட்டு, பல வழிகள் நிராகரிக்கப்பட்டு, மெதுவாகத்தான் அவர்களுடைய தீர்வுகள் மேலெழுந்து வந்தன. அவர்கள் தங்களுடைய இலக்கிலிருந்து தங்களுடைய பார்வையை அகற்றாமல் இருந்தது, சந்தேகங்களுக்குச் செவி சாய்க்காமல் இருந்தது. தீர்வு கிடைக்கும்வரை தங்கள் முயற்சியைத் தொடர்ந்து கொண்டிருந்தது ஆகியவற்றில்தான் அவர்களுடைய மேதமை இருந்தது.

இது “அறிவியல்பூர்வமாக இல்லையே!” என்று சிலர் கூறக்கூடும். அறிவியல்பூர்வமாக இல்லாவிட்டால் என்ன? இது வேலை செய்கிறது என்பதுதான் இங்கு முக்கியம்.

வாழ்வில் நாம் சந்திக்கின்ற பல பிரச்சனைகளைப் பொறுத்தவரை, நாம் அவற்றைக் கையாளத் தேவையான திறனைப் பெற்றுள்ளோம். ஆனால், நம்முடைய யோசனையை மெருகேற்றுவதற்கான பொறுமை நமக்கு இருப்பதில்லை. நம்முடைய ஆதரவாளர்களை அல்லது நம்முடைய திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புபவர்களைக் கண்டுபிடிப்பதற்காக, ஏராளமான கதவுகளைத் தட்ட நாம் தயாராக இருப்பதில்லை. ஒரு குழுவினரோடு சேர்ந்து வேலை செய்கின்றபோது ஏற்படுகின்ற சில அசௌகரியங்களைப் பொறுத்துக் கொண்டு முன்னேறிச் செல்கின்ற விடாப்பிடித்தன்மை நம்மிடம் இல்லை.

நீங்கள் ஒரு முட்டுக்கட்டையைத் தாக்க துணிந்துவிட்டால், பின்வாங்குவது என்ற பேச்சுக்கே அங்கு இடமில்லை. அந்த நினைப்பே உங்களுக்கு வரக்கூடாது.

அப்போது எபிக்டெட்டஸின் இந்த வார்த்தைகளை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்: “விடாமுயற்சியோடு விட இருங்கள். எதிர்த்து நில்லுங்கள்.” அதாவது, நீங்கள் மேற்கொள்கின்ற காரியங்களில் விடாமுயற்சியோடு இருங்கள்; கவனச்சிதறல்கள், ஊக்கமிழப்பு மற்றும் ஒழுங்கின்மையை எதிர்த்து நில்லுங்கள் என்று அதற்குப் பொருள்.

இது குறித்து அலட்டிக் கொள்ள வேண்டாம். என்னவாகுமோ என்று சஞ்சலம் கொள்ளவும் தேவையில்லை. நீங்கள் எங்கும் போகப் போவதில்லை. இது உடனடியாகவும் முடியப் போவதில்லை.

நீங்கள் இறுதிவரை விளையாடப் போகிறீர்கள் என்பதால், கடிகாரத்தைக் குறித்துக் கவலைப்பட வேண்டியதில்லை.ஆட்டத்தை முடிக்காமல் நீங்கள் அங்கிருந்து நகரப் போவதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். அதனால் தற்காலிகமான பின்னடைவுகள் உங்களை ஊக்கமிழக்கச் செய்யாது. அவை உங்களுடைய நீண்ட பயணத்தில் உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகின்ற, சாலையிலுள்ள குண்டு குழிகள் மட்டுமே.தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் - சளைக்காமல் செயல்படுங்கள் - ரயன் ஹாலிடேபுதிய விஷயங்களைச் செய்வது என்பதே முட்டுக்கட்டைகளுக்கு நீங்கள் விடுக்கின்ற ஓர் அழைப்புதான். விடாமுயற்சியும் பொறுமையும் இருந்தால் மட்டுமே ஒரு புதிய பாதையில் உங்களால் பயணிக்க முடியும்.

 

ஊக்கமிழப்பது மன்னிக்கப்படக்கூடியதுதான். ஆனால் விட்டு விலகுவது ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது. நீங்கள் ஆட்டத்திலிருந்து கழன்று கொள்ள விரும்புகிறீர்கள் என்பதை உணர்ந்திருந்தும், உங்கள் காலைத் திடமாகத் தரையில் ஊன்றி, முறியடிக்கப்பட முடியாத ஒரு கோட்டையாக உங்கள் முன் உருவெடுத்திருக்கின்ற முட்டுக்கட்டையை நோக்கி அங்குலம் அங்குலமாக முன்னேறுவதற்குப் பெயர்தான் விடாமுயற்சி.

கண்டுபிடிப்புகளைப் பற்றி எடிசன் ஒரு முறை இவ்வாறு கூறியிருந்தார்: “முதலில் வருவது ஓர் உள்ளுணர்வு, அது சடாரென்று வரும். அதற்குப் பின் பிரச்சனைகள் உதயமாகும்”. பிற கண்டுபிடிப்பாளர்களிடமிருந்து எடிசனைப் பிரித்து வைத்திருந்தது, பிரச்சனைகள் குறித்து அவர் கொண்டிருந்த சகிப்புத்தன்மையும், அப்பிரச்சனைகளுக்குத் தீர்வு காண அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்பும்தான்.

இதை வேறு வார்த்தைகளில் கூற வேண்டுமென்றால், அது சுடினமானதாகத்தான் இருந்தாக வேண்டும். உங்களுடைய முதல் சில முயற்சிகள் வேலை செய்யாதுதான். அவை உங்களிடமிருந்து ஏராளமான ஆற்றலை உறிஞ்சிக் கொள்ளும்தான். ஆனால் ஆற்றல் என்பது புதுப்பித்துக் கொள்ளப்படக்கூடிய ஒரு வளமாகும். ஓர் அசரீரிக்காகக் காத்துக் கொண்டிருக்காதீர்கள், உங்கள் முட்டுக்கட்டையின் பலவீனத்தைக் காண முயற்சி செய்யத் தொடங்குகள். தேவதூதர்களைத் தேடிக் கொண்டிருக்காதீர்கள், ஒரு புதுமையான கோணத்தில் பிரச்சனையை அணுகுங்கள். நீண்டகாலம் ஆகலாம் என்பதை ஏற்றுக் கொண்டு, ஒவ்வொரு சாத்தியக்கூற்றையும் முயற்சி செய்யுங்கள். அப்போது நீங்கள் உங்களுடைய இலக்கைக் கண்டிப்பாக அடைவீர்கள்.

நீங்கள் எந்தக் கட்டத்தில் இருக்கிறீர்கள். தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறர்கள், நிலைமை எப்படி இருக்கிறது என்று மக்கள் உங்களிடம் கேட்டால், “நான் அதில் முழுமூச்சாக இறங்கியிருக்கிறேன். என்னுடைய இலக்கை நெருங்கிக் கொண்டிருக்கிறேன்”. என்று நீங்கள் தெள்ளத் தெளிவாக பதிலளிக்க வேண்டும். முட்டுக்கட்டைகள் வரும்போது, முன்னைவிட இரண்டு மடங்கு கடினமாக உழைத்து அவற்றுக்கு நாம் பதிலடி கொடுக்க வேண்டும்.

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – தொடர்ந்து முன்னோக்கிச் செல்லுங்கள் – ரயன் ஹாலிடே

MUST READ