டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான விஜயிடம் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூரில் 41 பேர் பலியான வழக்கு தொடர்பாக விஜய்யிடம் 2 மணி நேரத்திற்கும் மேலாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் போது, கரூர் பிரச்சாரத்துக்கு தாமதாமாக வந்தது ஏன்?, பிரச்சாரத்தில் சிலர் மயங்கியபோது தவெக தரப்பில் எதுவும் செய்யாதது ஏன்? என்பது உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விளை சிபிஐ அதிகாரிகள் ஏழுப்பியுள்ளனர்.

மேலும், வழக்கு தொடர்பாக விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் கடுமையான கேள்விகளை முன்வைத்து வருகின்றனர். இதில் விஜயிடம் எழுப்பப்படும் 56 கேள்விகளுக்கு அவரது பதில்களை எழுத்துப்பூர்வமாக பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக ஏற்கனவே தவெக நிர்வாகிகளிடம் 3 நாட்களாக விசாரணை நடத்தப்பட்டது. மேலும், இந்த விசாரணை இன்று மாலை வரை தொடரும் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.
ஜனநாயகம் தணிக்கை விவகாரம்…உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு மனுவுக்கு எண்கள் ஒதுக்கீடு…


