Homeசெய்திகள்மாவட்டம்பெயின்ட் வருகையால் சுண்ணாம்பு தொழில் பாதிப்பு – நெல்லையில் உரிமையாளர்கள், தொழிலாளிகள் வேதனை

பெயின்ட் வருகையால் சுண்ணாம்பு தொழில் பாதிப்பு – நெல்லையில் உரிமையாளர்கள், தொழிலாளிகள் வேதனை

-

- Advertisement -

நெல்லை மாவட்டத்தில்  பாரம்பரியமாக நடைபெற்று வரும் சுண்ணாம்பு உற்பத்தி தொழில், பெயின்ட் பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக கடுமையான நலிவை சந்தித்து வருகிறது. இதனால், தொழில் நடத்த முடியாமல் உரிமையாளர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.பெயின்ட் வருகையால் சுண்ணாம்பு தொழில் பாதிப்பு – நெல்லையில் உரிமையாளர்கள், தொழிலாளிகள் வேதனைமுன்னர் வீடுகள், கட்டிடங்களில் பரவலாக பயன்படுத்தப்பட்ட சுண்ணாம்பு, தற்போது பெயின்ட் பயன்பாடு அதிகரித்ததால் சந்தையில் தனது முக்கியத்துவத்தை இழந்து வருகிறது. இதன் விளைவாக, சுண்ணாம்பு ஆலைகள் அருகி, தொழில் வாய்ப்பும் குறைந்துள்ளதாக தொழிலாளர்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும், சுண்ணாம்பு ஆலைகள் இயங்கும் பகுதிகளில் சொத்து வரி உயர்வு செய்யப்பட்டிருப்பதும், தொழில் நலிவுக்கு மேலும் ஒரு காரணமாக அமைந்துள்ளதாக ஆலை உரிமையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதிகரித்த சொத்து வரி சுமை காரணமாக, ஆலைகளை தொடர்ந்து நடத்துவது கடினமாகி வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.

we-r-hiring

இந்த நிலையில், சொத்து வரி உயர்வை குறைத்து, சுண்ணாம்பு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சுண்ணாம்பு ஆலை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாரம்பரிய தொழில்களை காக்க அரசு தலையிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

எஸ்.ஐ.ஆர். பணிகளில் நேர்மை தேவை – உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்…

MUST READ