spot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!! ஒரு மாத ஆண் குழந்தை விற்பனை!!

சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!! ஒரு மாத ஆண் குழந்தை விற்பனை!!

-

- Advertisement -

ஒரு மாத ஆண் குழந்தையை 3.80 லட்ச ரூபாய் பணத்திற்காக விற்பனை செய்த தம்பதி உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனா்.சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!!  ஒரு மாத ஆண் குழந்தை விற்பனை!!சென்னை காசிமேடு பவர் குப்பம் இரண்டாவது பிளாக்கை சேர்ந்த திலகவதி (25) இவரது கணவர் சகாயராஜ் இவர்களுக்கு திருமணம் ஆகி சர்வேஷ்(10),  பிரியா (7)  கிருத்திவிக்(2) என  மூன்று குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் நான்காம் தேதி வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவில் உள்ள அரசு மருத்துவமனையில் திலகவதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் பிறந்த குழந்தையை விற்பனை செய்து விடலாம் என முடிவெடுத்து, தண்டையார்பேட்டை YMCA குப்பம் முதல் தெருவை சேர்ந்த பிரதீபாவிடம் கூறியுள்ளார்.

இதனை அடுத்து காசிமேடு காசிபுரம் பத்தாவது தெருவை சேர்ந்த வெண்ணிலா, புது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கௌசல்யா, பிரதீபா ஆகிய மூவரும் குழந்தையை விற்பனை செய்வதற்கு ஏற்பாடுகள் செய்தனர். பிரதீபா, வெண்ணிலா, கௌசல்யா ஆகிய மூன்று பேரும்  4 மாதத்திற்கு முன்பு சேலத்தில் உள்ள முத்துமலை முருகன் கோயிலுக்கு சென்ற பொழுது கவிதா என்ற பெண் ஒருவர் தனக்கு வளர்த்துக் கொள்ள குழந்தை இருந்தால் கூறவும் எனக் கூறியதாகவும், அதனால் 14.12.25ம் தேதி திலகவதி (எ) குட்டிமா, இவரது கணவர் சகாயராஜ், வெண்ணிலா, கெளசல்யா ஆகிய 4 பேரும் காசிமேட்டிலிருந்து கவிதா ஏற்பாடு செய்த கார் மூலமாக சென்று ஆண் குழந்தையை மூன்று லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ததாகவும், அந்த குழந்தையின் அம்மா திலகவதியிடம் 3 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு, பிரதீபா 20 ஆயிரம் ரூபாய் வெண்ணிலா கௌசல்யா ஆகிய இருவரும் தலா  முப்பதாயிரம் ரூபாய் பணத்தையே பிரித்துக் கொண்டுள்ளனர்.

we-r-hiring

சம்பவம் குறித்து காசிமேடு காவல் ஆய்வாளர் வசந்தகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் நான்கு பேரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு வரவழைத்து உண்மைத்தன்மை குறித்து, விசாரணைக்காக குழந்தைகள் நல பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். கடந்த 19ஆம் தேதி முதல் பத்து நாட்கள் நடந்த விசாரணைக்கு பிறகு, புரசைவாக்கம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் முரளி கொடுத்த புகாரில் வழக்கு பதிவு செய்து குழந்தையை மீட்டு அரசினர் குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், குழந்தையை விற்பனை செய்த குழந்தையின் தந்தை சகாயராஜ், குழந்தையின் தாய் திலகவதி, குழந்தையை விற்பனை செய்ய உதவிய வெண்ணிலா, கௌசல்யா, பிரதீபா, குழந்தையை வாங்கிய தம்பதிகளான அரசு பள்ளியில் காவலராக பணிபுரியும் ராமன், ஆலப்பட்டி V A O  உதவியாளராக பணியாற்றும் மாதம்மாள் மற்றும் குழந்தையை வாங்குவதற்கு உதவியவர்கள் கவிதா, ஜெயலட்சுமி ஆகிய 9 பேரில் கௌசல்யாவை தவிர்த்து எட்டு பேரை கைது நீதிமன்ற காவலுக்கு  போலீசாா் அனுப்பி வைத்தனா். மேலும் குழந்தை நுங்கம்பாக்கத்தில் உள்ள மொட்டுகள் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பேச்சு

MUST READ