2026 சட்டமன்ற ஏற்பாடுகளை மேற்கொள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சென்னை வருகிறார்.
2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு, தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளன. தேர்தல் முன்னேற்பாடு குறித்து ஆய்வு செய்ய பிப்ரவரி 26,27 இல் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தமிழ்நாடு வருகிறாா்.

இந்த இருநாள் பயணத்தின் போது, அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளின் பிரதிநிதிகளுடன் அவர் ஆலோசனை நடத்தவுள்ளாா். தேர்தல் நடைமுறைகள், வாக்காளர் பட்டியல் திருத்தம், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக கருத்துக்களை கேட்டு ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை கண்காணிப்பாளர்கள், வருமான வரி, அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தப்பட உள்ளது. தேர்தல் காலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை, பணப் பரிவர்த்தனை கண்காணிப்பு, மற்றும் தேர்தல் செலவுக் கட்டுப்பாடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு முன், துணை தேர்தல் ஆணையர் தமிழ்நாட்டில் 3 நாட்கள் முகாமிட்டு, மாவட்ட நிர்வாக அதிகாரிகளுடன் தொடக்கநிலை ஆலோசனைகள் மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மார்ச் மத்தியல் தமிழ்நாடு, புதுச்செரி, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
”தலைவரை தேர்ந்தெடுங்கள்- ஸ்டாலினா, மம்தாவா?” – உத்தவ் சிவசேனா வலியுறுத்தல்


