தமிழ்நாடு செவிலியர்கள் சங்கம் சார்பில் கடந்த 18.12.25 முதல் 24.12.25 வரை ஏழு நாட்கள் நடந்த தொடர் போராட்டங்களையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தந்த தமிழ்நாடு அரசுக்கு செவிலியர்கள் சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர். இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது.
அப்போது பேசிய தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்க பொதுச் செயலாளர் சுபின், ஏழு நாட்களாக நடைபெற்ற தொடர் போராட்டங்களையடுத்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றிய தமிழ்நாடு அரசுக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார். தொகுப்பூதிய செவிலியர்கள் ஆயிரம் பேரை முதற்கட்டமாக பணி நிரந்தரம் செய்தது, தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ஆறு மாதம் மகப்பேறு விடுப்பு வழங்கியது, ஊதிய உயர்வு பெறாமல் இருந்த சுமார் 1000 செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கியது, கொரோனா காலத்தில் மட்டும் பணி செய்யவைத்து வீட்டுக்கு அனுப்பப்பட்ட செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்கியது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
அதேபோல சமீபத்தில் 41,000 தொகுப்பூதிய மருத்துவ ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கியதில் செவிலியர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்பட்டதற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும், மீதமுள்ள தொகுப்பூதிய செவிலியர்களை நிரந்தரமாக பணியமர்த்த வேண்டுமென்றும், தேசிய சுகாதார குழுமத்தின் கொள்கையான மருத்துவத்துறையில் ஒப்பந்த ஊழியர்களை மட்டுமே எடுக்க வேண்டும் என்பதை கடந்து நிரந்தர பணியாளர்களை மட்டுமே மருத்துவத்துறையில் தமிழ்நாடு அரசு பணியமர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடி உயர்வு: இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
