கொளத்தூாில் வேட்புமனு தாக்கல் செய்த முதல் நாளிலேயே பிரச்சார களத்தில் மக்களோடு மக்களாக சென்று முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
கொளத்தூாில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்தாா். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கொளத்தூாில் தொகுதியில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் திறந்த ஜீப்பில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
வேட்புமனு தாக்கல் செய்த முதல் நாளிலேயே பிரச்சார களத்தில் இறங்கி மக்களோடு மக்களாக சென்று தனது பரப்புரையை தொடங்கினாா். அதன்பின்னா் மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா்.

மேலும், ”டெல்லியை எதிா்த்து தமிழ்நாடு போராடிக் கொண்டிருக்கிறது. கொளத்தூாில் இதுவரை இல்லாத அளவு ஆதரவு இருப்பதை பாா்க்கிறேன். அமோகமான வாக்கு வித்தியாசத்தில் என்னை கொளத்தூா் மக்கள் வெற்றி பெறச் செய்வாா்கள்” என கொளத்தூாில் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு முதல்வா் பேட்டியளித்துள்ளாா்.
