Homeசெய்திகள்தேர்தல் 2026திமுக கூட்டணிக்கு 100 சதவீதம் மக்கள் வெற்றியை தர வேண்டும் – முதல்வர்

திமுக கூட்டணிக்கு 100 சதவீதம் மக்கள் வெற்றியை தர வேண்டும் – முதல்வர்

-

- Advertisement -

இந்த முறையும் திருச்சியில் திமுக கூட்டணிக்கு 100 சதவீதம் மக்கள் வெற்றியை தர வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திமுக கூட்டணிக்கு 100 சதவீதம் மக்கள் வெற்றியை தர வேண்டும் – முதல்வர் திருச்சியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் பிரச்சாரம் மேற்கொண்டார். திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி தொகுதி, மண்ணச்சநல்லூர், திருவரங்கம், மணப்பாறை, துறையூர், முசிறி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.

தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; 3 வாரத்துக்கு முன்புதான் திருச்சிக்கு மாபெரும் மாநில மாநாட்டுக்கு வந்தேன். மீண்டும் மீண்டும் நான் திருச்சிக்கு வருவதுபோல் திராவிட மாடல் ஆட்சியும் மீண்டும் மீண்டும் வர வேண்டும். 2021 தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் மக்கள் வெற்றியை தந்தார்கள். 2021 தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் முழு வெற்றியை தந்து 2 அமைச்சர்களை பெற்று தந்தீர்கள். இந்த முறையும் திருச்சியில் திமுக கூட்டணிக்கு 100 சதவீதம் மக்கள் வெற்றியை தர வேண்டும்.

புதிய வியூகத்தில் திமுக…இடம் மாறுகிறதா அதிமுக கோட்டை?

we-r-hiring

MUST READ