Homeசெய்திகள்தேர்தல் 2026அசாம் தேர்தல் பிரச்சாரம் - ராகுல் காந்தியின் அதிரடி குற்றச்சாட்டுகள்

அசாம் தேர்தல் பிரச்சாரம் – ராகுல் காந்தியின் அதிரடி குற்றச்சாட்டுகள்

-

- Advertisement -

அசாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பொகாஜன் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரத்தன் எங்டிக்கு ஆதரவாகப் பேசிய ராகுல் காந்தி, பாஜக அரசு மீது பல்வேறு புகார்களை கூறியுள்ளார்.அசாம் தேர்தல் பிரச்சாரம் - ராகுல் காந்தியின் அதிரடி குற்றச்சாட்டுகள்இந்தியாவின் மிகவும் ஊழல் நிறைந்த முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா என்றும், அவரது குடும்பம் ஊழலில் முதலிடத்தில் உள்ளது என்றும் ராகுல் காந்தி சாடினார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது தற்பெருமை பேசும் அவர், அதன் பிறகு முற்றிலும் மௌனமாகிவிடுவார் என்று கூறினார்.

​ஊழல் புகார்கள் காரணமாக முதல்வர் சர்மா, பிரதமர் மோடியின் முழு கட்டுப்பாட்டில் இருப்பதாக ராகுல் குற்றம் சாட்டினார்.

we-r-hiring

​​பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் ஹிமந்த பிஸ்வா சர்மா ஆகியோர் இணைந்து அசாமில் ஒரு “நில ஏடிஎம்” நடத்தி வருவதாக ராகுல் காந்தி கூறினார். ​பொதுமக்களிடமிருந்து நிலத்தைப் பறித்து பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்குவதே இவர்களின் வேலை என அவர் குற்றம் சாட்டினார். ​அசாமில் சுமார் 98,400 பிகா நிலம் மூன்று பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

​​கடந்த ஆண்டு சிங்கப்பூரில் காலமான அசாமின் புகழ்பெற்ற பாடகர் ஜுபீன் கார்க் மரணத்தில் நீதி வழங்கப்படும் என்று ராகுல் உறுதியளித்தார். ​காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் அவரது மரணம் குறித்த உண்மைகள் கண்டறியப்பட்டு நீதி நிலைநாட்டப்படும் என்று அவர் கூறினார். ​​இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து ராகுல் காந்தி சில அதிரடி கருத்துக்களைத் தெரிவித்தார்.

எப்ஸ்டீன் கோப்புகள் மற்றும் அதானி குறித்த தகவல்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிற்குத் தெரியும் என்பதால், அவர் பிரதமர் மோடியைக் கட்டுப்படுத்துவதாக ராகுல் கூறினார். இந்த ஒப்பந்தத்தால் இந்தியச் சந்தை அமெரிக்க நிறுவனங்களுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் சிறு குறு தொழில்களும், விவசாயத் துறையும் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றார். ​பிரதமர் மோடி இந்தியர்களின் தரவுகளை (Data) ட்ரம்ப்பிடம் ஒப்படைத்துவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

​அசாம் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி, “ ஒவ்வொரு பெண்ணின் வங்கிக் கணக்கிலும் நிபந்தனையற்ற மாத உதவித்தொகை மற்றும் தொழில் தொடங்க ரூ.50,000 நிதியுதவி.

​அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.25 லட்சம் மதிப்பிலான பணமில்லா (Cashless) மருத்துவக் காப்பீடு.

​ 10 லட்சம் பூர்வகுடி மக்களுக்கு நிரந்தர நிலப் பட்டா வழங்கப்படும்.

​ முதியவர்களுக்கு மாதம் ரூ.1,250 உதவித்தொகை மற்றும் அவர்களுக்கென தனித் துறை உருவாக்கம்.

அரசியலமைப்பின் 244(A) பிரிவை முழுமையாக அமல்படுத்தி, உள்ளூர் மக்களுக்கே அதிகாரம் வழங்கப்படுதல்” போன்ற  தோ்தல் வாக்குறுதிகளை வழங்கினாா்.

தேர்தல் அட்டவணை

​மொத்த இடங்கள்: 126 (அசாம் சட்டப்பேரவை)

​வாக்குப்பதிவு: ஏப்ரல் 9, 2026

​முடிவுகள்: மே 4, 2026

​அசாம் மாநிலத்தை டெல்லியிலிருந்து இயக்க பாஜக முயல்வதாகவும், ஆனால் காங்கிரஸ் அதிகாரத்தை உள்ளூர் மக்களிடம் வழங்க விரும்புவதாகவும் ராகுல் காந்தி தனது உரையில் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.

”மோடி அரசிடம் வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளன” – ராகுல் காந்தி விமர்சனம்

 

MUST READ