Homeசெய்திகள்தேர்தல் 2026”அதிமுக – பாஜக” கூட்டணி தேர்தல் ஆதாயத்திற்காக உருவானது – தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு

”அதிமுக – பாஜக” கூட்டணி தேர்தல் ஆதாயத்திற்காக உருவானது – தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு

-

- Advertisement -

அதிமுக–பாஜக கூட்டணி  தேர்தல் ஆதாயத்திற்காக மட்டுமே உருவானது எனக் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனத் தலைவைர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளாா்.”அதிமுக – பாஜக” கூட்டணி தேர்தல் ஆதாயத்திற்காக உருவானது – தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டுதிண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்றாா். காமராஜபுரம் பகுதியில் வேனில் இருந்து மக்களைச் சந்தித்து உரையாற்றிய அவர், திமுக கூட்டணி உறுதியான அரசியல் அடிப்படையில் இயங்குகிறது என்றும், இந்தத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

செந்தில்குமார் ஆயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் எனக் கூறிய திருமாவளவன், அவர் மக்களின் உணர்வுகளை சட்டமன்றத்தில் வலியுறுத்தக் கூடியவர் என்றும் பாராட்டினார். அவரின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் தான் திண்டுக்கலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

we-r-hiring

திமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி கடந்த 25–30 ஆண்டுகளாக இணைந்து பயணித்து வருவதாகவும், பெரியார், அண்ணா போன்ற தலைவர்களின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த கூட்டணி உருவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அரசியல், கொள்கை மற்றும் கோட்பாடு ஆகிய மூன்றிலும் பொருத்தம் உள்ளதால் தான் இந்த கூட்டணி நீண்ட காலமாக நீடித்து வருவதாகவும் அவர் விளக்கினார்.

இந்தத் தேர்தலை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியிலிருந்து விலகும் என்ற வதந்திகள் பரப்பப்பட்டதாகக் கூறிய அவர், தங்களைப் பிரித்து கூட்டணியை பலவீனப்படுத்த முயற்சிகள் நடந்ததாகவும் தெரிவித்தார். ஆனால், பெரியார், அம்பேத்கர் மற்றும் மார்க்ஸ் சிந்தனைகளில் நம்பிக்கை கொண்ட தாங்கள், சனாதன மற்றும் மதவாத அரசியலுக்கு இடமளிக்க மாட்டோம் எனத் தெளிவுபடுத்தினார்.

அதிமுக–பாஜக கூட்டணியை கடுமையாக விமர்சித்த திருமாவளவன், அது தேர்தல் ஆதாயத்திற்காக மட்டுமே உருவான கூட்டணி எனக் குற்றம் சாட்டினார். முன்பு ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்த தலைவர்கள் தற்போது ஒரே கூட்டணியில் இணைந்திருப்பது அரசியல் முரண்பாட்டின் வெளிப்பாடு என அவர் கூறினார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூட பாஜகவுடன் கூட்டணி அமைத்ததை பின்னர் தவறாக ஏற்றுக்கொண்டதை நினைவூட்டிய அவர், தற்போதைய கூட்டணிக்கு எந்த கொள்கை அடிப்படையும் இல்லை என்றார்.

பாஜக கடந்த 25 ஆண்டுகளாக முயன்றும் தமிழகத்தில் வலுவாக நிலைநிறுத்த முடியாததற்கு கலைஞர் மற்றும் ஜெயலலிதா போன்ற தலைவர்களின் அரசியல் பாதைதான் காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், திமுக கூட்டணி 2016 முதல் இன்று வரை உடைந்துபோகாமல் தொடர்வது அதன் அரசியல் உறுதியை காட்டுவதாகவும், தற்போது பல புதிய கட்சிகள் இந்த கூட்டணியில் இணைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இறுதியாக, திமுக கூட்டணி இந்தத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என திமுக தலைவர் கூறியுள்ளதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன என திருமாவளவன் விளக்கினார். கூட்டணியின் பலம், அரசின் சாதனைகள் மற்றும் தேர்தல் அறிக்கை ஆகியவை இந்த வெற்றிக்கு அடிப்படையாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியாவின் சிறந்த திட்டம் ”இல்லம் தேடி கல்வி” –  பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெருமை…

MUST READ