- Advertisement -
விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதிக்குட்பட்ட கோட்டக்குப்பத்தில் போலீசார் தடியடி நடத்தியதால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சுடுகாட்டை சிலர் ஆக்கிரமித்துள்ளதாக கூறி அம்பேத்கர் நகர் மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், வாக்குப்பதிவு நேரம் நிறைவடைய உள்ளதால் போலீசாரின் அறிவுறுத்தலில் பேரில் சிலர் வாக்களிக்க சென்றனர். இதனால், ஆத்திரமடைந்த ஒருதரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போலீஸார் தடியடி நடத்தியதால் இங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
2026 தேர்தல் – அடிப்படை வசதிகள் நிறைவேற்றாததால் தேர்தலை புறக்கணித்த கிராமங்கள்…
