Homeசெய்திகள்தமிழ்நாடுராமதாஸ் - அன்புமணி சந்திப்பு… “இனி நல்லது நடக்கும்” என நம்பிக்கை தெரிவித்த அன்புமணி

ராமதாஸ் – அன்புமணி சந்திப்பு… “இனி நல்லது நடக்கும்” என நம்பிக்கை தெரிவித்த அன்புமணி

-

- Advertisement -

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே நீண்ட காலமாக நிலவி வந்த கருத்து வேறுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடைபெற்ற சந்திப்பு, பாமக தொண்டர்கள் மத்தியில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமதாஸ் - அன்புமணி சந்திப்பு… “இனி நல்லது நடக்கும்” என நம்பிக்கை தெரிவித்த அன்புமணி

we-r-hiring

ராமதாஸ் மற்றும் அன்புமணி தரப்பினருக்கு இடையே கடந்த சில ஆண்டுகளாக கட்சியின் நிர்வாகம் மற்றும் அரசியல் முடிவுகள் தொடர்பாக கருத்து மோதல்கள் நிலவி வந்தன. இந்த விவகாரம் வெளிப்படையாகவும் எதிரொலித்ததால், இரு தரப்பினரும் தனித்தனியாக செயல்படுவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. இதற்கிடையில், சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அன்புமணி தலைமையிலான பாமக, கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டது. மறுபுறம், ராமதாஸ் வேறு அரசியல் அணிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்தார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இரு தரப்பினருக்கும் இடையிலான இடைவெளி தொடர்ந்தது.

இந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் அன்புமணி ராமதாஸ் வசிக்கும் தைலாபுரம் இல்லத்திற்குச் சென்று அவரை நேரில் சந்தித்தார். தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் சென்ற அவர், பெற்றோரின் திருமண நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து ஆசீர்வாதம் பெற்றார். இந்த சந்திப்பின்போது, நீண்ட நாட்களுக்குப் பிறகு தந்தை – மகன் இருவரும் மனம் திறந்து பேசியதாக கூறப்படுகிறது. அன்புமணியை சந்தித்த ராமதாஸ் உணர்ச்சிவசப்பட்டு அவரை ஆரத்தழுவிய காட்சிகள் பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, “இன்று என் தந்தை, தாயாரின் திருமண நாள். குடும்பத்தினருடன் வந்து அவர்களது ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டோம். இனி நல்லது நடக்கும்” என்று தெரிவித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வந்துவிட்டதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கும், “இனி நல்லது நடக்கும்” என்றே அன்புமணி பதிலளித்தார்.

கல்விக் கட்டண விவகாரம் – தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு…

MUST READ