Homeசெய்திகள்இந்தியாநடுக்கடலில் விசைப்படகு மூழ்கி விபத்து: தத்தளித்த 8 சென்னை மீனவர்கள் நல்வாய்ப்பாக மீட்பு!

நடுக்கடலில் விசைப்படகு மூழ்கி விபத்து: தத்தளித்த 8 சென்னை மீனவர்கள் நல்வாய்ப்பாக மீட்பு!

-

- Advertisement -

ஆந்திரா அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, விசைப்படகு பழுது ஏற்பட்டு கடலில் மூழ்கிய பரபரப்பான சம்பவம் அரங்கேறியுள்ளது. படகில் இருந்த 8 மீனவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளனர்.

மீனவர்கள், விசைப்படகு

we-r-hiring

ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்கள்
​சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த ஜெயவேல் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், கடந்த 4-ஆம் தேதி இரவு சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 8 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர்.

​நடுக்கடலில் நேர்ந்த விபத்து
​அவர்கள் நேற்று முன்தினம் ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபட்டினம் துறைமுகம் அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக விசைப்படகில் திடீரென பழுது ஏற்பட்டு பலத்த சத்தம் கேட்டுள்ளது. தொடர்ந்து படகிற்குள் கடல் நீர் வேகமாகப் புகத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள், உடனடியாக அருகில் இருந்த சக மீனவர்களுக்கு வயர்லெஸ் (Wireless) மூலமாகத் தகவல் கொடுத்து உதவி கோரினர்.

படகைக் மீட்கும் போது நேர்ந்த விபரீதம்
​தகவலறிந்து விரைந்து வந்த சக மீனவர்கள், பழுதடைந்த விசைப்படகை கயிறு கட்டி மீட்டு வர முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக விசைப்படகு திடீரென கடலில் மூழ்கியது. இதனால் படகில் இருந்த மீனவர்கள் அனைவரும் கடலில் குதித்து தத்தளித்தனர்.

சாமர்த்தியமான மீட்பு:
கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 8 மீனவர்களையும், அருகில் இருந்த சக மீனவர்கள் உடனடியாகச் செயல்பட்டு பத்திரமாக மீட்டனர். இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து விசைப்படகின் உரிமையாளர் ஜெயவேல் மீன்வளத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, பழுதடைந்த விசைப்படகு கடலில் மூழ்கும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

MUST READ