spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிபட்டாபிராமில் ஏர்டெல் நெட்வர்க் செயலிழந்ததால் மக்கள் அவதி!

பட்டாபிராமில் ஏர்டெல் நெட்வர்க் செயலிழந்ததால் மக்கள் அவதி!

-

- Advertisement -

திருவள்ளுர் மாவட்டம் பட்டாபிராம் பகுதியில் இன்று காலையில் இருந்து ஏர்டெல் நெட்வர்க் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதி !

ஏர்டெல் என்ற காற்றலை நிறுவனம் திடீர் என்று தொழில் நுட்பம் காரணமாக சிக்னல் இல்லாமல் போனதால் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்தனர்.

we-r-hiring

திருவள்ளுர் மாவட்டம் பட்டாபிராம் பகுதியில் இன்று காலையில் இருந்து ஏர்டெல் நெட்வர்க் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதி

இதனால் பள்ளி மற்றும் கல்லுரி செல்லும் மாணவர்கள், வாகன ஓட்டுனர்களுடன் தொடர்பு கொள்ள இயலாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதே போன்று கார்ப்ரேட்களில் பணியாற்றுபவர்கள் தங்களுடைய கம்பெணி செயலிகளை கொண்டு அவர்களது பயணத்தை மேற் கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதை போன்று கார்ப்ரேட் மற்றும் தனியார் துறைகளில் இல்லத்திலிருந்து பணியாற்றுபவர்கள் தங்களது ஏர்டெல் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் பணிகனை மேற் கொள்ள முடியாமல் அவதிப்பட்டுள்ளனர்.

அவர்களை போன்று பிற தொழில்களில் தகவல் தொடர்பை சார்ந்து தொழில் புரிந்து வரும் வணிகர்கள் , மருத்துவமனைகள், இ – சேவை மையங்கள், வங்கிகள் , பள்ளி மற்றும் கல்லூரிகள் , பொது மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொழில்களில் தகவல் தொடர்பை சார்ந்து தொழில் புரிந்து வரும் வணிகர்கள் , மருத்துவ மனைகள், இ – சேவை மையங்கள், வங்கிகள் , பள்ளி மற்றும் கல்லூரிகள் , பொது மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை பற்றி சமூக ஆர்வளர் சடகோபன் கூறியதாவது, இன்று தகவல் தொடர்பு முன்னறிவுப்பு இல்லாமல் துண்டிக்கப்பட்டுள்ளதால் இணையதள பரிவர்தனை செய்ய இயலாமல் தடைபட்டது. இப்படி திடீர் என தகவல் தொடர்பு சேவை துண்டிக்கப் பட்டால் இதனையே சார்ந்து வாழும் மூத்த குடி மக்கள் மற்றும் அனைத்து பொது மக்களும் ஸ்தம்பித்த நிலையில் தள்ள படுகிறார்கள்.

பொதுவாக சேவை வழங்குநர், தகவல் துண்டிப்பதை நுகர்வோருக்கு குருஞ்செய்தி மூலம் அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவிப்பு இல்லாததால் பயன்படுத்தும் கைபேசி தொழில்நுட்ப கோளாறா அல்லது நெட்வர்க் சரி இல்லா நிலையா என சந்தேகம் ஏற்படுகிறது.

சமூக ஆர்வளர் சடகோபன்

 

ஏர்டெல் நெட்வர்கின் உட்புர சிக்னல் சில மாதமாகவே மிகவும் மோசமாக உள்ளது. இந்நிறுவனம் டவர்களை அவ்வப்போது பாராமறிப்பதில்லை என்பது தெறியவருகிறது.

தற்போது அனைத்து தரப்பு மக்களும் கை பேசியுடன் ஒன்றி வாழும் நிலையில் இப்படி எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் தகவல் தொடர்பை துண்டிப்பது என்பது மக்களை பெரும் அவதியில் ஆழ்த்துகிறது.

MUST READ