spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஉலகத் தமிழர்களின் மனங்களை முதலீடாக்கும் முதல்வர்

உலகத் தமிழர்களின் மனங்களை முதலீடாக்கும் முதல்வர்

-

- Advertisement -

முனைவர் டி.ஆர்.பி.ராஜா

உலகத் தமிழர்களின் மனங்களை முதலீடாக்கும் முதல்வர்

ஒரே நூற்றாண்டில் பல ஆயிரம் கால அடிமைத்தனத்தை தகர்த்தெறிந்து, சுய மரியாதை மிக்க தமிழினத்தை உருவாக்கியது தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம். அதன் நூற்றாண்டை உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கொண்டாடவும், பெரியாரின் படத்தைத் திறந்து வைத்து, சுயமரியாதை இயக்கம் தொடர்பான ஆய்வு நூல்களை வெளியிடவும், இங்கிலாந்து ஜெர்மனி நாடுகளுக்கு பயணம் செய்து, தமிழ்நாட்டிற்கான தொழில்முதலீடுகளை ஈர்த்து, தமிழ் மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் புறப்பட்ட நமது முதலமைச்சர் சென்னை பன்னாட்டு விமான முனையத்தில் ஊடகத்தினரை சந்தித்தார்.

we-r-hiring

“2021ல் திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு 922 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, 10,62,752 கோடி ரூபாய் முதலீடாக ஈரக்கப்பட்டிருப்பதுடன், இதன் மூலம் 32,81,032 இலட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன” என்ற புள்ளிவிவரத்தை வழங்கிவிட்டு, தன்னுடைய முந்தைய வெளிநாட்டுப் பயணங்களால் ஏற்பட்ட பயன்களையும் விளக்கிவிட்டே, ஐரோப் பிய நாடுகளுக்கானப் பயணத்தைத் தொடங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.

நம் திராவிட நாயகர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதலில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணம் ஐக்கிய அரபு நாடுகளுக்குத்தான். 2022ல் மேற்கொண்ட அந்தப் பயணத்தின் மூலமாக 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, 6,100 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. 2023ஆம் ஆண்டில் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகப் பயணங்களை மேற்கொண்டார். சிங்கப்பூரில் ஒரு முக்கியமான ஒப்பந்தம், அதன் முலம் 312கோடி ரூபாய் முதலீடுகளுக்கு கையெழுத்திடப்பட்டது. ஜப்பான் நாட்டில் மேற்கொண்ட பயணத்தில் 7 ஒப்பந்தங்கள் 1030 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கும் வகையில் போடப்பட்டன.

உலகத் தமிழர்களின் மனங்களை முதலீடாக்கும் முதல்வர்2024ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டிற்கு மேற்கொண்ட பயணத்தில் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 3,440 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கும் வகையில் போடப்பட்டன. அதே ஆண்டு செப்டம்பரில் அமெரிக்காவுக்கு மேற்கொண்ட பயணத்தில் 19 ஒப்பந்தங்கள் போடப்பட்டன. முதலீட்டு ஈர்ப்பு 7,616 கோடி ரூபாய். மொத்தம் 36 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டதில், 12 பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. 11 பன்னாட்டு நிறுவனங்கள் தனது கட்டமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதுமட்டுமின்றி, சென்னையில் 2024 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் பன்னாட்டு நிறுவனங்களுடன் போடப்பட்ட 631 ஒப்பந்தங்களில் ஓராண்டிலேயே 522 ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்து, அதில் பல நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியைத் தொடங்கி, வேலைவாய்ப்புகளையும் வழங்கி வருகின்றன.

முதலமைச்சர் அவர்களைப் பொறுத்தவரை, எவ்வளவு முதலீடு என்பதைவிட, எந்த இடத்தில் தொழிற்சாலை அமையும், எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும்? என்பதுதான் முதன்மையான கேள்வியாக இருக்கும்.தூத்துக்குடியில் தொடங்கப்பட்டுள்ள வின்ஃபாஸ்ட் மின்வாகன உற்பத்தி நிறுவனத்தினரிடம், உள்ளூர் இளைஞர்கள் பெண்களுக்கு வேலை அளிக்க வேண்டும் என்பதை முதலமைச்சரின் அறிவுறுத்தல்படி தெரிவித்தேன். உள்ளூரில் அவ்வளவு தொழில்நுட்ப ஆட்கள் எப்படி கிடைப்பார்கள்? என்று நிறுவனத்தினர் சந்தேகத்துடன் கேட்டார்கள். “இது தமிழ்நாடு, மற்ற மாநிலங்கள் போல கிடையாது. உங்கள் நிறுவனத்திற்குத் தேவையான அனைத்து தொழில்நுட்பத்திற்கும் தேவையான இளையதலைமுறை இன்ஜினியரிங் டிகிரி, டிப்ளமோ ஆட்கள் இங்கேயே உண்டு” என்று அவர்களிடம் தெரிவித்ததுடன், அதே மாவட்டத்தில் பாலிடெக்னிக் படித்தவர்களில் 386 பேரைத் தேர்வு செய்து, மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் செயல்படும் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் திறன்மேம்பாட்டு பயிற்சி அளித் தோம். அவர்களுக்கு நேர்காணல் நடத்தி, 200 பேரை வேலைக்கு எடுத்திருக்கிறது வின் ஃபாஸ்ட் நிறுவனம்.

உலகத் தமிழர்களின் மனங்களை முதலீடாக்கும் முதல்வர்சிமென்ட் ஆலைகள் நிறைந்த அரியலூரை மட்டுமே வேலைக்காக நம்பியிருந்த ஜெயங் கொண்டம் தொகுதி மக்களுக்காக முதன் முறையாக ஜெயங்கொண்டத்தில் அமைக்கப்படுகிற தோல் அல்லாத காலணித் தொழிற்சாலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படித்த பெண்கள்கூட வேலைக்குச் சென்று சுயமாக சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளது. அத்திய நேரடி முதலீடுகளால் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை, அதனையொட்டியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் மட்டுமின்றி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, மதுரை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி போன்ற தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சியும் வேலைவாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.

தொழில்வாய்ப்பு அதிகமில்லாத மாவட்டங்களான நாகை, தஞ்சை, கன்னியாகுமரி மாவட்டங்களில் டைடல் நியோ பூங்காக்கள் மூலம் அங்குள்ள சாஃப்டவோ துறை சார்ந்த ஆண்களும் பெண்களும் சொந்த மாவட்டத்திலேயே வேலை வாய்ப்புகளைப் பெறுகின்றனர். தென்காசி மாவட்டத்தின் வளர்ச்சியைக் கருத்திற் கொண்டு அங்கு சிப்காட் உருவாக்கப்பட்டுள்ளது. திண்டிவனம் முதல் திருநெல்வேலி வரை அந்தந்தப் பகுதி மக்களுக்கான வேலைவாய்ப்புகளை திராவிட மாடல் அரசின் முதல்வர் உருவாக்கிக் கொடுத் திருக்கிறார்.

நம் முதலமைச்சரின் ஜெர்மனி பயணத்தின் போது நார்தரைன் வெஸ்ட்பாலியா மாகாணத்தின் தலைமை அமைச்சர் (மினிஸ்டர் பிரசிடென்ட்) ஹென்ட்ரிக் வுஸ்ட் ஒரு நாட்டின் தலைவரை வரவேற்பதைப் போல தனது ஒட்டுமொத்த கான்வாயை அனுப்பி, நமது முதலமைச்சரை வரவேற்ற விதம், நமது முதலமைச்சர் மீதும் தமிழ்நாடு மீதும் அவர் வைத்திருக்கும் மதிப்பைக் காட்டியது. உலக அரங்கில் திராவிட மாடல் அரசின் செயல்பாடுகள் எந்தளவுக்கு கவனம் பெற்றிருக் கின்றன என்பதற்கு இது ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

தொழில்நிறுவனங்களுடனான சந்திப்பின் போது, ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் நேரடியாகப் பங்கேற்று, மாநிலத்தின் தொழில் கட்டமைப்புகள், அரசாங்கம் அளிக்கும் உதவிகள், மனிதவள ஆற்றல், தொழில்நுட்ப வசதிகள் ஆகியவற்றை விளக்கும்போது தொழில் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். அதுவும் தங்கள் மாகாண தலைமை அமைச்சரின் சிறப்பு விருந்தினராக கெளரவிக்கப்பட்ட ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் என்பது கூடுதல் நம்பிக்கை தரக்கூடியதாகும்.

உலகத் தமிழர்களின் மனங்களை முதலீடாக்கும் முதல்வர்

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் எப்போதும் நம்பிக்கைக்குரியதாகவே அமைகின்றன. இந்தியாவில் தமிழ்நாடு கடந்த 4 ஆண்டுகளில் அடைந்துள்ள பொருளாதார வளர்ச்சியும், தொழில்துறை சார்ந்த முன்னேற்றமும், அதில் உருவாகியுள்ள வேலைவாய்ப்புகளும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் துறைகள் வெளியிடும் புள்ளிவிவரங்கள் மூலமாகவே உறுதி செய்யப் படுவதால், முதலீட்டாளர்களின் முதல் முகவரி என்ற நிலையைத் தமிழ்நாடு அடைந்துள்ளது. முதலமைச்சரே நேரில் வந்து விளக்கி, ஒப்பந்தம் போடும்போது பன்னாட்டு நிறுவனங்கள் தாராளமாக முதலீடு செய்ய முன்வருகின்றன.

ஜெர்மனியைப் போலவே இங்கிலாத்திலும் நமது முதலமைச்சருக்கு அங்குள்ள தொழில்நிறுவனங்கள் பெரும் வரவேற்பளித்தன. இரு நாடுகளில் மேற்கொண்ட பயணங்களால் பி.எம்.டபிள்யூ, ரோல்ஸ்ராய்ஸ் போன்ற கார் உற்பத்தி ஜாம்பவான்கள் முதலமைச்சரை சந்தித்து நம்பிக்கை தெரிவித்தனர். இரு நாடுகளிலும் போடப்பட்ட ஒப்பந்தங்கள் மூலமாக மட்டும் 15,516 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்க்கப்படுவதுடன், 17,673 வேலைவாய்ப்புகள் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செயல்வடிவம் ஆக்குவதில் நமது முதலமைச்சரின் முனைப்பும் அக்கறையும் ஈடு இணையில்லாதது, பயணம் முடிந்த அடுத்த நாளே, அல்லது வெளிநாடுகளிலிருந்து தாய்த்தமிழ்நாட்டிற்கு விமானத்தில் திரும்பும்போதே ஆலோசனைகள் வழங்கத் தொடங்கிவிடுவார். அமைச்சர் பொறுப்பில் அவரால் அமரவைக்கப்பட்டிருக்கிற என்னிடமும், தொழில்துறை சார்ந்த உயரதிகாரிகளிடமும் நிலவரங்களைக் கேட்டறிவார். விரைந்து முடித்திட வலியுறுத்துவார், அதனால்தான், இந்தியத் தொழில்துறை வரலாற்றில் இதுவரை எந்த மாநிலத்திலும் எப்போதும் நடத்திராத வகையில் தமிழ்நாடு அரசுடன் கையழுத்திடப்பட்ட மொத்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 77% அளவுக்கு செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

எந்த நாட்டிற்கு சென்றாலும் மாண்புமிகு முதலமைச்சரின் மனதும் கண்களும் தமிழர்களைத்தான் தேடும். உலகெங்கும் வாழும் தமிழர்களின் நலனில் அவருக்குத் தனிப்பட்ட அக்கறை உண்டு, “கடல் நம்மைப் பிரித்தாலும் தமிழ் நம்மை இணைக்கிறது” என்று அவர் சொல்வது, உள்ளத்திலிருந்து வருகிற வார்த் தைகள்.உலகத் தமிழர்களின் மனங்களை முதலீடாக்கும் முதல்வர்

தமிழ்நாட்டில் பிறந்து வெளிநாடுகளில் நல்ல நிலையில் வாழ்கிறவர்களின் கல்விக்கான அடித்தளத்தை இங்கே அமைத்துக் கொடுத்தது திராவிட இயக்கம். சுயமரியாதை இயக்க மாநாடுகளில் நிறைவேற்றிய தீர்மானங்களை ஆட்சிசெய்யும் வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் சட்டமாக்கியது திராவிட முன்னேற்றக் கழகம். இந்த மாபெரும் இயக்கத்தின் தலைவருக்கு நம் தமிழர்கள் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் உயர்ந்த பொறுப்புகளில் இருப்பதைப் பார்க்கும்போது இயல்பாகவே மகிழ்ச்சி ஏற்படும்.

அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் இருந்த உலகப்புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனங்களுக்கு நேரில் சென்றபோது, ஒவ்வொரு நிறுவனத்திலும் அதன் ஒவ்வொரு துறையிலும் தமிழர்கள் உயர்ந்த பொறுப்பில் இருந்தார்கள். அவர்களைப் பார்த்தபோது முதலமைச்சருக்கு எந்தளவு மகிழ்ச்சி ஏற்பட்டதோ, அதுபோலவே. முதலமைச்சரைப் பார்த்தபோது அவர்களுக்கும் அத்தனை மகிழ்ச்சி, அதே மகிழ்ச்சியைத்தான் ஜெர்மனி, இங்கிலாந்து, சிங்கப்பூர், துபாய், ஸ்பெயின், ஜப்பான் போன்ற நாடுகளிலும் பார்க்க முடிந்தது.

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியும். திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றப்படும் திட்டங்களும் உலகளாவிய ஊடகங்களிலும் வெளியாவதால், அதைப் பார்க்கும் அங்கு வாழும் தமிழர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. தங்களுடன் பணியாற்றும் அந்த நாட்டவர்களிடம் அந்த செய்திகளை சுட்டிக்காட்டி, ”இவர்தான் எங்கள் முதலமைச்சர்” என்று பெருமையுடன் தெரிவிக்கிறார்கள்.உலகத் தமிழர்களின் மனங்களை முதலீடாக்கும் முதல்வர்

ஒவ்வொரு நாட்டிலும் வாழும் தமிழர் களுடனான முதலமைச்சரின் சந்திப்பு என்பது குடும்ப உறவுகளை சந்திப்பது போன்ற உணர்வைத் தருவது இயல்பாக உள்ளது. ஐக்கிய அரபு நாடுகளுக்கான பயணத்தின்போது, நான் அமைச்சர் பொறுப்பில் இல்லாவிட்டாலும், தி.மு.க. அயலக அணி செயலாளராக, தலைவர் அவர்களின் சந்திப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் பொறுப்பு எனக்கு கிடைத்தது. நான்காயிரம் பேர் அளவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பத்தாயிரம் பேருக்கு மேல் திரண்டு, சாலையிலும் ஆரவாரத்துடன் நின்ற காட்சியே நம் முதலமைச்சர் மீதான வெளிநாடு வாழ் தமிழ்மக்களின் பேரன்புக்கு சாட்சி. அவருடன் கைக்குலுக்கவும், படம் எடுக்கவும் அப்படியொரு ஆர்வம் காட்டினர்.

அதே ஆர்வத்தை சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்த நிகழ்விலும் பார்க்க முடிந்தது. ஜப்பான் சென்றபோதும், முதன்முறையாகத் தமிழர்களை சந்திக்கும் முதலமைச்சர் என்ற ஆர்வமும் அன்பும் கலந்த வரவேற்பு கிடைத்தது. அங்கிருக்கும் பெரியார் பற்றாளர்கள் ஜப்பான் மொழியில் வெளியாகியுள்ள திராவிட சித்தாந்தப் புத்தகங்களை பரிசாக வழங்கியதும், ஜப்பான் தமிழ்க் குடும்பத்தினர் நம் மண் மணத்துடன் தினமும் உணவு தயாரித்து கொடுத்ததும் நெஞ்சை விட்டு நீங்காத நினைவுகள்.உலகத் தமிழர்களின் மனங்களை முதலீடாக்கும் முதல்வர்

அமெரிக்காவின் சிகாகோவில் நடந்த சந்திப்பில் பல மாகாணங்களிலிருந்தும் தமிழர்கள் குடும்பம் குடும்பமாகத் திரண்டு வந்தனர். முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையுடன் இந்த நிகழ்வுகளில் பங்கேற்பதால் அங்குள்ள தமிழர்களுக்கு தங்கள் சொந்த மண்ணுக்கு வந்தது போன்ற உணர்வு. ஆயிரக்கணக்கானத் தமிழர்களை ஒரே இடத்தில் சந்திப்பதால், தமிழ்நாட்டில் இருப்பது போன்ற உணர்வைப் பெறுகிறார் தம் முதலமைச்சர்.

ஜெர்மனியிலும் இங்கிலாந்திலும் வாழும் தமிழர்களுடன் நடந்த சந்திப்பின்போது ஐரோப்பாவின் பகுதிகளிலிருந்தும் வந்து தங்களை முதலமைச்சரிடம் அறிமுகப் படுத்திக்கொண்டு படம் எடுத்து மகிழ்ந்தனர். ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் நடந்த சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவும், அதில் பெரியார் படத்தைத் திறந்து வைத்ததும் முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணத்தில் வரலாற்றுத் தடமாகும்.உலகத் தமிழர்களின் மனங்களை முதலீடாக்கும் முதல்வர்

ஒவ்வொரு முறையும் வெளிநாடு செல்லும் போதும் தமிழ்நாட்டுக்கான தொழில் முதலீடுகளை அதிகளவில் ஈர்ப்பதுடன், அந்தந்த நாடுகளில் வாழும் தமிழர்களின் மனங்களையும் முதலீடாக ஈர்த்து வருகிறார் நம் திராவிட நாயகன் மாண்புமிகு முதலமைச்சர்.

கார்த்தியின் ‘மார்ஷல்’ பட கதை இதுதானா?

MUST READ