spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரை200 சீட் வெல்லும் திமுக! புதிய கருத்துக்கணிப்பில் தகவல்! விஜய்க்கு மூன்றாவது இடம்!

200 சீட் வெல்லும் திமுக! புதிய கருத்துக்கணிப்பில் தகவல்! விஜய்க்கு மூன்றாவது இடம்!

-

- Advertisement -

இந்தியா டுடே – சீஓட்டர் நிறுவனம் கருத்துக்கணிப்பில் திமுக கடந்த 2024ல் பெற்ற வாக்குகளை விட கூடுதலாக பெற்றுள்ளது. இதன் மூலம் திமுக அரசுக்கு எதிரான பெரிய ஆன்டி இன்கம்பன்சி பெரிய அளவில் இல்லை என்பது தெரிவதாக மூத்த பத்திரிகையாளர் நாதன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

இந்தியா டுடே – சீஓட்டர் நிறுவனம் கருத்துக்கணிப்பு முடிவுகள் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் நாதன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- இந்தியா டுடே – சீ ஓட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதில் வடமாநிலங்களில் பாஜக கூட்டணிக்கு ஆதரவாக கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் எடுத்தபோது வந்ததை விட குறைவாகவே பாஜகவுக்கு கிடைத்திருக்கிறது.  பாஜக தனித்து 260 இடங்களையும், என்.டி.ஏ கூட்டணியாக 324 இடங்களை பிடிக்கிறது. பாஜகவின் வாக்கு சதவீதம் 46.7 சதவீதம். இந்தியா கூட்டணியின் வாக்கு சதவீதம் 40.9 சதவீதம். அப்போது  இரு கட்சிகளுக்கும் இடையிலான வாக்கு சதவீதம் 6 ஆக உள்ளது. இதன் மூலம் இந்தியா கூட்டணி உறுதியாக கட்சிகளை சேர்த்து போட்டியிடும்பட்சத்தில் பாஜக வெல்லப்பட முடியாத கட்சி இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது சீ ஓட்டர் சிஇஓ இந்தியா டுடேவின் நேரலையில் அழுதார். உ.பி., மகாராஷ்டிராவில் தாங்கள் கணித்தது வரவில்லை என்று அழுதார். பாஜகவுக்கு 353 -383 இடங்கள் வரை கிடைக்கும் என்று சொல்லி இருந்தார். ஆனால் 240 இடங்கள்தான் கிடைத்தது. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு நாம் இந்த கருத்துக்கணிப்புகளை பார்க்கலாம். தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகள் அம்பலமாகும்போது, எதிர்க்கட்சிகள் என்னதான் சொன்னாலும் பாஜகதான் வெற்றி பெறும் என்று நேரட்டிவை மாற்றுகிறார்கள்.

பிரதமராக யார் வர வேண்டும் என்கிற கேள்விக்கு மோடி பிரதமராக வரக்கூடாது என்று 53 சதவீதம் பேர் வாக்களித்து உள்ளனர். மோடி வேண்டும் என்று 47 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் நாட்டின் பெரும்பான்மை மக்கள் மோடி வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர். ராகுல்காந்திக்கு 24 சதவீதம் வாக்குகள் அளித்துள்ளனர். இது கடந்த பிப்ரவரி மாதம் எடுத்த வாக்கு சதவீதத்தை விட கூடுதலாகும். மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், அகிலேஷ் ஆகியோரை சேர்த்தோம் என்றால் 29 சதவீதம் வாக்குகள் உள்ளன. ஒட்டுமொத்தமாக 53 சதவீதம் பேர் மோடி வேண்டாம் என்று சொல்லியுள்ளனர். இந்தியா கூட்டணி தொடர வேண்டும் என்று சொல்லியுள்ளனர். இது ஒரு நல்ல அறிகுறியாகும். அப்போது இந்தியா கூட்டணியில் எவ்வளவு முரண்பாடுகள் இருந்தாலும்,  பாஜகவை எதிர்த்து போட்டியிட வலுவான ஒரு கூட்டணி வேண்டும் என்பது மக்களுடைய கருத்தாக உள்ளது.

சென்னை நந்தனத்தில் 75ம் ஆண்டு திமுக பவள விழா கொண்டாட்டம்

தமிழ்நாட்டை பொருத்த வரை 2024 திமுக கூட்டணி 47 சதவீத வாக்குகளை வாங்கி இருந்தது. தற்போதைய கருத்துக்கணிப்பின்படி 48 சதவீத வாக்குகளை வாங்கியுள்ளது. அதிமுகவுக்கு 3 இடங்கள் கிடைக்கும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2024 தேர்தலில் அதிமுக – பாஜக சேர்ந்து 41 சதவீத வாக்குகள் வாங்கி இருந்தனர். தற்போது அவர்களுக்கு 39 சதவீதம் வாக்குகள் தான் கிடைத்துள்ளது. இதுவே வருமா? என்பது சந்தேகம்தான். சீட் கன்வர்ஷன் பார்க்கிறபோது 36 தொகுதிகள் திமுக கூட்டணிக்கும், 3 தொகுதிகள் என்டிஏ கூட்டணிக்கும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர். யார் முதலமைச்சர் ஆக வர வேண்டும் என்கிற கேள்விக்கு, ஸ்டாலினுக்கு 27 சதவீதம் பேர் ஆதரவாக தெரிவித்துள்ளனர். விஜய்க்கு 18 சதவீதம், எடப்பாடி பழனிசாமிக்கு 10 சதவீதம், அண்ணாமலைக்கு 9 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன. இதில் முக்கிய பிரச்சினை எடப்பாடி 3வது இடத்திற்கு சென்றுவிட்டார் என்பது முரண்பாடாக உள்ளது. எடப்பாடி – அண்ணாமலை ஆகியோர் கட்சி என்று பார்க்கிறபோது அதிக வாக்குகளை பெறுகிறார்கள். ஆனால் முதல்வர் வேட்பாளர் என்று வரும்போது குறைவாக பெறுகிறார்கள். விஜய் கட்சி குறைவாக பெறுகிற நிலையில், அவர் முதலமைச்சர் வேட்பாளராக அதிக வாக்குகளை பெறுகிறார்.

விஜய், கணிசமான அளவு அதிமுக வாக்குகளை பிரிக்க வாய்ப்பு உள்ளது. அதற்கு காரணம் தமிழ்நாட்டில் 4 முனை போட்டி நிலவுகிற நிலையில், 3 எதிர்க்கட்சிகளும் திமுகவை எதிர்த்துதான் பேச வேண்டும். திமுகவை யார் அதிதீவிரமாக எதிர்க்கிறார்கள் என்பதுதான் அவர்களுக்குள் இருக்கும் போட்டி. அப்போது திமுக எதிர்ப்பு வாக்குகள் ஒரு கட்சிக்கோ, ஒரு கூட்டணிக்கோ செல்வது சாத்தியம் இல்லை. எனவே திமுக எதிர்ப்பு வாக்குகள் அதிமுக, விஜய், சீமான் என 3 கட்சிகளுக்கும் போக வாய்ப்பு உள்ளது. அதில் அதிக பங்குகளை யார் எடுப்பார் என்பதுதான் போட்டி. தற்போது துக்ளக், சாணக்கியா போன்ற நிறுவனங்களின் கருத்துக்கணிப்புகள் விஜய்க்கு பெரும்பாலான வாக்குகள் கிடைக்கும் என்று சொல்கின்றன. என்னை பொருத்தவரை இது மிகைப்படுத்தப்பட்ட வாக்குகள் தான். துக்ளக் போன்றவை உருவாக்கும் நேரட்டிவ் என்பது நாளைக்கு எதிர்க்கட்சிகள் பிரிந்து நின்றால் திமுக எளிதாக வெற்றி பெற்றுவிடும். சேர்ந்து நின்றால் திமுகவை வீட்டிற்கு அனுப்பலாம் என்று விஜயை ஒரு வழிக்கு கொண்டுவர முயற்சிப்பார்கள்.

இந்த கருத்துக்கணிப்பில் திமுகவின் எதிர்ப்பு வாக்குகள் பிரிகின்ற அதே சமயம், திமுக ஆதரவு வாக்குகள் 2024ல் 47 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 48 சதவீதமாக அதிகரித்துள்ளது. அப்போது திமுக அரசுக்கு எதிராக பெரிய ஆன்டி இன்கம்பன்சி என்பது இல்லை என்பதை கருத்துக்கணிப்பு காட்டுகிறது. துக்ளக் இதயா, அதிமுகவுக்கும் விஜய்க்குமான போட்டி என்பது யார் இரண்டாவது இடத்தை பிடிப்பது என்பதுதான் என்று சொல்கிறார். அப்போது, மூன்றாவது இடத்தில் இருந்த சீமான், அதைவிட கீழ் நிலைக்கு சென்றுவிடுவார். சீமானிடம் இருக்கும் வாக்குகளையும்,  விஜய் ஒரளவுக்கு எடுப்பார் என்றும் துக்ளக் இதயா சொல்கிறார். தற்போது இந்தியா டுடே – சீ ஓட்டர் கருத்துக்கணிப்பில் மற்ற கட்சிகள் 13 சதவீதம் உள்ள நிலையில், அதில் விஜய் அதிகமான வாக்குகளை பெறுவார். சீமான் குறைவான வாக்குகளையே பெறுவார் என்பது இந்த கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. தென் மாவட்டங்களில் உள்ள சிறுபான்மை மக்களின் வாக்குகள் திமுக கூட்டணிக்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அதேவேளையில் முக்குலத்தோர் மக்களின் ஆதரவு பெற்ற டிடிவி தினகரன் இன்னும் அதிகாரப்பூர்வமாக அதிமுக கூட்டணியில் இணையவில்லை. ஓபிஎஸ்க்கு கூட்டணியில் இடமில்லை என்றே எடப்பாடி சொல்லி விட்டார். எனவே பாஜக கூட்டணிக்கு வாக்குகள் குறைவதற்கான வாய்ப்புகள்தான் உள்ளது.

ஒரு கற்பனைக்காக தமிழ்நாட்டில் 4 முனை போட்டி என்பது இரு முனை போட்டியாக மாறினால், என்டிஏ கூட்டணிக்குள் விஜய், சீமான் போன்றவர்கள் வந்தால் அவர்கள் எதை கேட்டு வாக்குகளை பெற்றார்களோ அந்த வாக்குகள் வராது. சீமான் தன்னை இரண்டு திராவிட கட்சிகளுக்கும் மாற்று என்று அறிவித்துள்ள நிலையில், கூட்டணியில் சேர்ந்தால் சித்தாந்த ரீதியான வாக்குகள் அவருக்கு விழாது. விஜய், தனியாக கட்சி தொடங்கி ஆட்சியை பிடிக்கப் போகிறோம். திமுகவுக்கும், தவெகவுக்கும்தான்  போட்டி என்று சொல்லிவிட்டு பாஜக கூட்டணியில் சேர்ந்தால், பல்வேறு விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டி வரும். அதன் பிறகு அவருடைய அரசியல் வாழ்க்கை காலியாகிவிடும். இவர்கள் எல்லாம் சேர்ந்தால் வாக்கு சதவீதம் குறையதான் வாய்ப்பு உள்ளதே தவிர, வாக்கு சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு கிடையாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ