spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைகரூர் கூட்ட நெரிசல் வழக்கு : தீர்ப்பு யாருக்கு பின்னடைவு? மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : தீர்ப்பு யாருக்கு பின்னடைவு? மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் விளக்கம்!

-

- Advertisement -

கரூர் கூட்டநெரிசல் வழக்கை இந்த தருணத்தில் சிபிஐக்கு விசாரணைக்கு மாற்றி இருப்பது சிறந்த தீர்ப்பு அல்ல என்று மூத்த நீதிபதி கே.எம்.விஜய் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

கரூர் கூட்டநெரிசல் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்து மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் பிரபல தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:- கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் 41 பேர் மரணமடைந்தது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் அடிப்படையில் வழக்கு விசாரணையே இன்னும் தொடங்கவில்லை. ஒரு வழக்கை விசாரித்தவர்கள் ஒரு சார்புடன் நடந்துகொள்கிறார்கள் என்றால், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றலாம். கரூர் கூட்டநெரிசல் வழக்கை இந்த தருணத்தில் சிபிஐக்கு வழங்கியது சிறந்த தீர்ப்பு அல்ல. அதற்கு காரணம் இது விசாரிக்க எஸ்.ஐ.டி அமைக்கப்பட்டு, அவர்கள் இன்னும் விசாரணையை தொடங்கவே இல்லை.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 7வது அட்டவணையில் இரண்டாவது மாநிலப் பட்டியலில் முதல் வரிசையில் இருப்பது பப்ளிக் ஆர்டர். இந்த வழக்கு முழுக்க முழுக்க பப்ளிக் ஆர்டர் தொடர்புடையதாகும். அதனுடைய முழு அதிகாரம் மாநில அரசுக்குதான் இருக்கிறது. இரண்டாவது இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமாரின் தலையீடு இல்லாமலேயே மாநில அரசு தாமாகவே ஒரு எஸ்.ஐ.டி அமைத்திருக்க முடியும். நீதிபதி செந்தில்குமார் வழக்கில் வந்தது மற்றும் அவருடைய சில கருத்துக்கள் தான் வேறு மாதிரி திரிக்கப்பட்டு உள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் – உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ்

கரூர் கூட்டநெரிசல் மரணங்கள் தொடர்பான வழக்கை மூன்று பேர் அடங்கிய குழு கண்காணிக்கும் என்பது சற்று மிகையான நடவடிக்கை என்று என்ன தோன்றுகிறது. ஏன் அதற்கு அவசியம் இல்லை என்றால்? இந்த வழக்கு இன்னும் தொடங்கவேப் படவில்லை. யாரும் தற்போது விசாரித்து வரும் எஸ்.ஐ.டி வழக்கை சரியாக விசாரிக்க வில்லை என்று புகார் தெரிவிக்கவில்லை. சிபிஐ விசாராணைக்கு அனுமதி எப்போது அனுமதி வழங்கப்படும் என்றால்? மிகவும் அரிதினும் அரிதான வழக்குகளில், மாநில அரசு ஒருதலைபட்சமாக நடந்துகொள்ளும் என்று கருதும்பட்சத்தில், அதற்கான குறைந்தபட்ச முகாந்திரங்கள் இருக்குமெனில் ஒரு நிவாரணமாக சிபிஐ விசாரணைக்கு வழங்கப்படும். ஆனால் கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் எதுவும் நடைபெறாத நிலையில், சிபிஐ விசாரணைக்கு வழங்கியுள்ளனர்.

என்னை பொருத்தவரை தமிழக அரசின் நடவடிக்கைகளில் 2 விஷயங்களை தவிர்த்து இருக்கலாம். இந்த விவகாரத்தில் அருணா ஜெகதீசன் ஆணையம் என்பது அவசியமே இல்லை. ஒரு விசாரணை நடைபெறுகிறது என்றால் அது காவல்துறையாக மட்டுமே இருக்க முடியும். அது எஸ்.ஐ.டி ஆகவோ, அல்லது விசாரணை அதிகாரியாகவோ இருக்கலாம். இரண்டாவது காவல்துறை விசாரணைக்கும், ஆணையத்தின் விசாரணைக்கும் முரண்பாடு ஏற்பட்டால், அது அவசியமற்ற பிரச்சினையை ஏற்படுத்தும். அடுத்தபடியாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமாரிடம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. எனனை பொருத்தவரை ஒன்றுமில்லாத விஷயத்திற்கு சற்று அகல கால் வைத்துவிட்டார்களோ என்று தோன்றுகிறது.

கரூர் கூட்டநெரிசல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தொடரப்பட்ட மனுக்களை, சம்பந்தப்பட்ட நபர்கள் தாக்கல் செய்யவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இது மிகவும் தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயமாகும். கரூர் சம்பவத்தை கிரிமினல் வழக்காக நீதிபதி செந்தில்குமார் எடுத்தது எப்படி என்று ஏற்கனவே நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர். சென்னை, மும்பை, டெல்லி என்று ஒவ்வொரு ஊரிலும் ரிட் மனுவுக்கு என்று விதிமுறைகள் மாறும். அது உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தெரியாமல் இருக்கலாம். ரிட்மனு கிரிமினல் என்பது ஒரு பெரிய பிரச்சினை அல்ல.

அதேநேரத்தில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் 2 நீதிபதிகள் அமர்வில் இது தொடர்பான மனு இருக்கிறபோது, அதனை நீதிபதி செந்தில்குமார் தவிர்த்து இருக்கலாம். சென்னை உயர்நீதிமன்றம் எஸ்.ஐ.டி அமைக்காவிட்டால், தமிழக அரசே இந்த விவகாரத்தில் எஸ்.ஐ.டி அமைத்திருக்கலாம். அதற்கு அரசுக்கு முழுமையான அதிகாரங்கள் உள்ளன, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ