spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் - தயக்கத்துடன் ஏற்றுக் கொள்ளும் கலை - ரயன் ஹாலிடே

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – தயக்கத்துடன் ஏற்றுக் கொள்ளும் கலை – ரயன் ஹாலிடே

-

- Advertisement -

”தன்னை ஏற்றுக் கொள்பவர்களுக்குத் தலைவிதி வழிகாட்டுகிறது. எதிர்ப்பவர்களுக்கு அது இடைஞ்சல் ஏற்படுத்துகிறது” – கிளின்தெஸ்தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் - தயக்கத்துடன் ஏற்றுக் கொள்ளும் கலை - ரயன் ஹாலிடேமுன்னாள் அமெரிக்க அதிபர் தாமஸ் ஜெஃபர்சன் அமைதியானவர், கூச்ச சுபாவமுள்ளவர். அதோடு அவருக்கு வாய் குழறல் பிரச்சனையும் இருந்ததாவது தெரிகிறது. அவர் வாழ்ந்த காலகட்டத்தைச் சேர்ந்த சிறந்த மேடைப் பேச்சாளர்களோடு ஒப்பிடுகையில், அவர் ஒரு சுமாரான பேச்சாளராகத்தான் இருந்தார்.

ஆனால் அவருடைய இதயம் அவரை அரசியலை நோக்கிச் சுண்டியிழுத்தது. அவருக்கு முன்னால் இரண்டு தேர்ந்தெடுப்புகள் இருந்தன: அரசியலுக்குள் நுழைவது அல்லது அதை நிராகரிப்பது.

we-r-hiring

அவர் முதலாவதைத் தேர்ந்தெடுத்தார். மற்றவர்கள் மேடைப் பேச்சில் செலவழித்த ஆற்றலை அவர் எழுத்தில் கொட்டினார். தன்னுடைய எண்ணங்களைத் தன்னால் எழுத்தில் தெளிவாக வடிக்க முடிந்ததை அவர் கண்டுகொண்டார். எழுத்து அவருடைய மிகப் பெரிய பலமாக விளங்கியது. அமெரிக்காவின் அரசியல் சாசனம் எழுதப்பட வேண்டியிருந்தபோது, அப்போதிருந்த தலைவர்கள் அதற்கு அவரைத்தான் நாடினர். வரலாற்றின் மிக முக்கியமான ஆவணம் ஒன்றை எழுதுகின்ற ஓர் அரிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

ஜெஃபர்சன் அரசியலில் இருந்தபோதிலும் ஒரு பெரிய மேடைப் பேச்சாளராக விளங்கவில்லை. ஆனால் அதற்காக அவருடைய புகழ் எந்த அளவும் குன்றிவிடவில்லை.

அது எடிசனுக்கும் ஹெலன் கெல்லருக்கும் பொருந்தும். எடிசனுக்குக் கிட்டத்தட்ட முழுதாகக் காது கேட்காது. ஹெலன் கெல்லருக்குக் காதும் கேட்காது, கண்ணும் தெரியாது. அவர்கள் இருவரும் தங்களுடைய இந்தக் குறைபாட்டுக்காக மனக்கசப்பு அடையவில்லை. மாறாக, அவர்கள் தங்களுடைய குறைபாடுகளை ஏற்றுக் கொண்டனர். தங்களுடைய எதார்த்தத்திற்கு ஏற்பத் தங்களைப் பொருத்திக் கொள்வதற்காக அவர்கள் இருவரும் ஆற்றல்மிக்க வேறு புலனுணர்வுகளை வளர்த்துக் கொண்டனர்.

வாழ்க்கையில் ஏற்படுகின்ற நெருக்கடிகள் உண்மையில் நல்ல விஷயங்களே – குறிப்பாக அவற்றை நாம் ஏற்றுக் கொண்டு அவற்றால் வழிநடத்தப்பட அனுமதிக்கின்றபோது! அவை நமக்குக் கொடுக்கின்ற அழுத்தங்களின் காரணமாக நாம் புதிய திறன்களை வளர்த்துக் கொள்கிறோம். அச்சிக்கல் ஏற்பட்டிருக்காவிட்டால், கண்டிப்பாக நாம் அதை முயன்றுகூடப் பார்த்திருக்க மாட்டோம். வாழ்க்கையில் எல்லாம் கிடைத்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அது நம்முடைய கைகளில் இல்லை.

நமக்குத் தெரிந்த யாராவது ஒருவர் போக்குவரத்துச் சமிக்கை விளக்குகள் குறித்துக் கோபப்பட்டால், அவர் ஒரு பைத்தியம் என்று நாம் முடிவு கட்டுவோம், இல்லையா?

ஆனால், வாழ்க்கை துல்லியமாக நமக்கு இதைத்தான் செய்து கொண்டிருக்கிறது. இந்த இடத்தில் நீங்கள் நிற்க வேண்டும் என்று அது உங்களை எச்சரிக்கிறது, அல்லது உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகின்ற மாற்று வழி ஒன்றில் செல்லுமாறு உங்களுக்கு ஆணையிடுகிறது. நீங்கள் இதற்காக அதனிடம் கத்த முடியாது. அதன் கட்டளையை அமைதியாக ஏற்றுக் கொள்வதைத் தவிர நமக்கு வேறு வழி கிடையாது.

அதற்காக, நாம் நம்முடைய இலட்சிய இலக்கை அடைவதை அது தடுத்து நிறுத்த நாம் அனுமதிக்க போவதில்லை. அங்கு ஆனால் சென்றடைகின்ற பாதையையும் விதத்தையும் அதற்கு நாம் எடுத்துச் கொள்கின்ற நேரத்தையும் அது மாற்றுகிறது.

நீங்கள் விரும்புவதற்கு நேர்மாறான ஓர் உத்தரவை உங்களுடைய மருத்துவர் உங்களுக்கு இடுகிறார் என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அதை ஏற்றுக் கொள்வீர்கள், அப்படித்தானே? அதை நீங்கள் விரும்பத் தேவையில்லை, அந்த சிகிச்சையை நீங்கள் இரசிக்கத் தேவையில்லை. ஆனால் அதைத் தவிர்ப்பது என்பது நீங்கள் குணமாவதைத் தடுக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

எவை உங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றன, எவை உங்களுடைய கட்டுப்பாட்டில் இல்லை என்பது குறித்தப் புரிதல் உங்களுக்கு ஏற்பட்டதும் உங்கள் முன் ஒரே ஒரு தேர்ந்தெடுப்புதான் இருக்கும். ஏற்றுக் கொள்வதுதான் அது.

நீங்கள் அடித்தப் பந்து சரியாகப் போகவில்லை.

நீங்கள் முதலீடு செய்திருந்த பங்கின் விலை தரையைத் தொட்டுவிட்டது.

உங்களுக்கு வந்து சேர வேண்டிய சரக்கு, மோசமான வானிலை காரணமாக வந்து சேரவில்லை.

இவை எதனாலும் எதுவும் குடி முழுகிப் போகாது.

நீங்கள் ஒன்றில் வல்லவராக ஆக வேண்டும் என்பதற்காக அதை நீங்கள் விரும்ப வேண்டும் என்று அவசியமில்லை. நம்முடைய பிரச்சனையின் காரணி நம்முடைய கட்டுப்பாட்டு எல்லைக்கு வெளியே இருந்தால், அதை ஏற்றுக் கொண்டு முன்னே செல்வதுதான் நல்லது. இந்த மனப்போக்கை, ‘தயக்கத்துடன் ஏற்றுக் கொள்ளும் கலை’ என்று ஸ்டோயிசிசத் தத்துவவியலாளர்கள் கூறுகின்றனர்.

இங்கு ஒரு விஷயத்தை நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். தயக்கத்துடன் ஏற்றுக் கொள்வது என்பது அதிலிருந்து ஒட்டுமொத்தமாக விலகுவது அல்ல. விஷயங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று பேசுவது எளிது. ஆனால் எதார்த்தத்தை ஏற்றுக் கொள்வதற்குத் துணிவும் வேண்டும், அடக்கமும் வேண்டும்.

நமக்கு நடக்கின்ற அனைத்துப் புற நிகழ்வுகளும் நமக்கு நன்மை பயப்பவையாகவே விளங்கக்கூடும். ஏனெனில், அவற்றைத் தலைகீழாகத் திருப்பிப் போட்டு, அவற்றை நமக்குச் சாதகமாக நம்மால் பயன்படுத்திக் கொள்ள முடியும். வேறு எந்த வழியிலும் நாம் கற்றுக் கொள்ளத் தயங்குகின்ற ஒரு படிப்பினையை அவற்றால் நமக்குக் கற்றுக் கொடுக்க முடியும்.

அசாதாரணமான மதிப்பைப் பெறுவதற்கு நாம் அசாதாரணமான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். நாம் பொதுவாக எவை இருந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் நினைக்கிறோம். ஆனால் நிலைமை இதைவிட மோசமாக இருக்கக்கூடும் என்று நாம் ஒருபோதும் நினைத்துப் பார்ப்பதில்லை.

ஆனால் நிலைமை மோசமாக இருப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. இப்படி உங்களுக்கு நடைபெற வேண்டாம். ஆனால், எடுத்துக்காட்டாக, அடுத்த முறை நீங்கள் பணத்தை இழந்தால், அதற்கு பதிலாக நீங்கள் ஒரு நண்பனை இழந்திருக்கக்கூடும் என்று நினைத்துக் கொள்ளுங்கள். அடுத்த முறை நீங்கள் உங்களுடைய வேலையை இழந்தால், அதற்கு பதிலாக நீங்கள் ஒரு கையை இழந்திருக்கக்கூடும் என்று நினைத்துக் கொள்ளுங்கள். அடுத்த முறை நீங்கள் உங்களுடைய வீட்டை இழந்தால், அதற்கு பதிலாக நீங்கள் எல்லாவற்றையும் இழந்திருக்கக்கூடும் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

நம்மிடமிருந்து எடுக்கப்பட்டவற்றைப் பற்றித்தான் நாம் ஓலமிடுகிறோம். ஆனால் நம்மிடம் இருப்பவற்றை நாம் ஒருபோதும் நினைத்துப் பார்ப்பதில்லை.

அடுத்த நொடியில் உலகின் ஒரு மூலையிலிருந்து மறு மூலைக்கு ஆவணங்களையும் புகைப்படங்களையும் அனுப்புகின்ற கலையை நாம் கைவரப் பெற்றுள்ளதால், இயற்கையை நம் முன் மண்டியிட வைத்து விட்டோம் என்று நாம் தவறாகக் கணித்துவிடுகிறோம்.

மக்களுடைய சிந்தனை எப்போதும் இப்படி ஓடிக் கொண்டிருக்கவில்லை. பழங்காலத்தில் மக்கள் தலைவிதி என்ற வார்த்தையை நம்மைவிட அடிக்கடிப் பயன்படுத்தி வந்தனர். ஏனெனில், இந்த உலகம் எந்த அளவுக்கு விரைவாக மாறக்கூடியது, எவ்வளவு சீரற்றது என்பதை அவர்கள் நம்மைவிட நன்றாகவே உணர்ந்திருந்தனர். சில நிகழ்வுகள் கடவுளின் ஆணையால் நடந்ததாக அவர்கள் கருதினர். தலைவிதி நம்முடைய ஒப்புதலின்றி நம்முடைய வாழ்க்கையைத் தீர்மானித்துக் கொண்டிருந்தது.

பெரும்பாலான கடிதங்கள், “கடவுளின் விருப்பம் இருக்கும்பட்சத்தில்!” என்ற வாசகத்தோடு நிறைவடைந்தன. ஏனெனில், நாளைக்கு என்ன நடக்கும் என்பதை யாரறிவார்?தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் - தயக்கத்துடன் ஏற்றுக் கொள்ளும் கலை - ரயன் ஹாலிடேதன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அமெரிக்க சுதந்திரப் போருக்குக் கொடுத்த ஜார்ஜ் வாஷிங்டன். இறுதியில், “இனி எல்லாம் ஆண்டவன் கைகளில் இருக்கிறது!” என்று கூறிவிட்டார். அதேபோல, நேசப் படைகள் சிசிலிக்குப் படையெடுத்த நாளுக்கு முந்தைய நாள், போர்முனையிலிருந்து அவர் தன் மனைவிக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். “நாங்கள் நினைத்திருந்த அனைத்தையும் செய்தாகிவிட்டது. துருப்புகள் தயார் நிலையில் இருக்கின்றன. எல்லோரும் தங்களால் முடிந்த அளவு சிறப்பாகச் செயல்படத் துடித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் போரின் முடிவு கடவுளின் கைகளில் இருக்கிறது.” இந்த மாபெரும் மனிதர்கள் தங்களுடைய திட்டத்தை நுணுக்கமாகச் செதுக்குவதற்குப் பெயர் பெற்றவர்கள். தங்களுடைய வேலையை வேறு எவரிடமும் ஒப்படைக்கத் துணியாதவர்கள். ஆனால் இறுதியில், என்ன நடக்குமோ அதுதான் நடக்கும் என்பதை அவர்கள் புரிந்து வைத்திருந்தனர்.

இதை நம் வாழ்விலும் நாம் ஏற்றுக் கொள்வது நல்லது. நம்முடைய திட்டத்தை ஏதோ ஒன்று அல்லது யாரோ ஒருவர் மாற்றக்கூடும். அது நாமாக இருக்க மாட்டோம்.

கீழ்க்கண்ட மேற்கோள்களை நீங்கள் கண்டிப்பாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள்:

மனிதன் திட்டமிடுகிறான், ஆண்டவன் அதை மாற்றுகிறான்.

எல்லாம் தலைவிதிப்படிதான் நடக்கும்.

இயற்கை அனுமதிக்கும் பட்சத்தில்.

மர்ஃபியின் விதிப்படி நடக்கும்.

இவை அனைத்தும் ஒரே விஷயத்தைத்தான் வெவ்வேறு வார்த்தைகளில் கூறுகின்றன. பழங்காலத்திற்கும் இப்போதைக்கும் இடையே பெரிதாக ஒன்றும் மாறியிருக்கவில்லை. ஆனால் அவர்கள் நம்மைவிட எல்லாவற்றையும் கூடுதலாக உணர்ந்திருந்தனர்.

வாழ்க்கையை ஒரு விளையாட்டாக நாம் உருவகப்படுத்தினால், இது பகடையாட்டத்தை அல்லது சீட்டு விளையாட்டைப் போன்றது. உங்களுக்கு விழுகின்ற எண்ணை வைத்துக் கொண்டு அல்லது உங்களுக்குக் கிடைக்கின்ற சீட்டுகளை வைத்துக் கொண்டு நீங்கள் ஆட்டத்தை ஆட வேண்டும்.

ஏனெனில்,

என்ன நடந்தாலும் அதைக் கையாள்கின்ற அளவு உறுதியானவர் நீங்கள்.

அது குறித்து நீங்கள் தலைகீழாக நின்றாலும் உங்களால் எதுவும் செய்ய முடியாது.

நடக்கின்ற விஷயங்கள் உங்களுடைய இலட்சியப் பாதையில் குறுக்கிடுகின்ற சிறு தடங்கல்கள் மட்டுமே.

நாம் பட்டும் படாமலும் இருக்கிறோம், அவ்வளவுதான். அது பலவீனமல்ல.

“இயற்கையை வெற்றி கொள்ள வேண்டுமென்றால், நாம் அதற்குப் பணிந்து போக வேண்டும்,” என்ற ஃபிரான்சிஸ் பேகனின் கூற்று இங்கு பொருத்தமாக இருக்கும்.

MUST READ