spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரை48 சீட்டில் மறுதேர்தல்? ராகுலுடன் பேசிய சந்திரபாபு! பத்திரிகையாளர் ப்ரியன் நேர்காணல்!

48 சீட்டில் மறுதேர்தல்? ராகுலுடன் பேசிய சந்திரபாபு! பத்திரிகையாளர் ப்ரியன் நேர்காணல்!

-

- Advertisement -

மத்திய அமைச்சர் அனுராக் தாகூருக்கு, தேர்தல் ஆணையம் டிஜிட்டல் தரவுகளை வழங்கியதன் மூலம் அவர்கள் எதிர்க்கட்சி தலைவர்களின் தொகுதிகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டி இருக்கிறார். ஆனால் ராகுல்காந்திக்கு அதனை தேர்தல் ஆணையம் வழங்க மறுப்பது ஏன்? என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

we-r-hiring

பீகார் வாக்காளர் பட்டியல் முறைகேடுகளை கண்டித்து ராகுல்காந்தி யாத்திரை செல்வது குறித்தும், பாஜக எதிர்க்கட்சி தலைவர்கள் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:- தேர்தல் ஆணைய முறைகேடுகள் தொடர்பாக ராகுல்காந்தி மகாதேவபுரா தொகுதியில் 6 மாதங்கள் ஆய்வு மேற்கொண்டு வெளிப்படுத்தி உண்மைகள் நாட்டை உலுக்கியுள்ளது. பெங்களுரு தொகுதியில் பெரும்பான்மையான மக்கள் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டி வாக்களித்தனர். ஆனால் அவர்களின் விருப்பம் வெற்றிபெறவில்லை. காரணம் அங்கு ஒரு லட்சம் வாக்குகள் முறைகேடாக சேர்க்கப்பட்டதாகும். மக்களின் உண்மையான ஜனநாயக நோக்கம் அங்கே தோற்றுபோய்விட்டது. அதைதான் ராகுல்காந்தி வாக்கு திருட்டு என்று சொல்கிறார்.

இதேபோல் நாடு முழுவதும் 48 தொகுதிகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெறுகிறது. இதை  உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழுவை நியமித்து சர்பார்க்க வேண்டும். ஆனால் தேர்தல் ஆணையம் பாஜகவை தூண்டிவிடுகிறார்கள். அனுராக் தாக்கூர் மூலம் 6 முதல் 7 எதிர்க்கட்சி தலைவர்களின் தொகுதிகளில் போலி வாக்காளர் உள்ளதாக சொல்கிறார்கள். ராகுல்காந்திக்கு முறைகேடுகளை கண்டுபிடிக்க 6 மாத காலம் ஆகியுள்ளது. ஆனால் அனுராக் தாக்கூருக்கு எப்படி 10 நாளிலேயே கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது. அப்போது, உங்களுக்கு தேர்தல் ஆணையம் டிஜிட்டல் தரவுகளை வழங்கியுள்ளதா? ஆனால் காங்கிரஸ் கேட்டால் டிஜிட்டல் தரவுகளை வழங்க மறுக்கிறது. வீடியோ பதிவுகளை கேட்டால் வழங்க மறுக்கிறது. இது எந்த வகையில் நியாயம்? இதன் மூலம் பாஜகவும், தேர்தல் ஆணையமும் கூட்டுக்களவாணிகள் என்பது தெரிகிறது.

அனுராக் தாக்கூர் சொல்வது உண்மையாக வைத்துக்கொண்டாலும் கூட, அவருக்கு டிஜிட்டல் தரவுகளை வழங்காவிட்டால் அதை கண்டுபிடித்திருக்க முடியாது.  எதிர்க்கட்சி தலைவர்கள் தொகுதிகளில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக பாஜக கருதினால் தாராளமாக விசாரிக்கலாம். அதேபோல், ராகுல்காந்தி சொல்கிற தொகுதிகளையும் எடுத்துக்கொண்டு விசாரியுங்கள். எங்கெங்கு என்ன என்ன பிரச்சனைகள் வந்துள்ளன? நடைமுறை சிக்கல் வந்துள்ளதா? அல்லது அரசியல் கட்சிகள் தலையீடு செய்துள்ளனவா? என்று பார்க்கலாம். ஆனால் கடந்த தேர்தலில் வாக்களித்தவர்களுக்கு என்ன மதிப்பு உள்ளது. அப்போது அந்த தேர்தலையே செல்லாது என்று அறிவித்துவிடுங்கள். தேர்தலை ரத்து செய்துவிட்டு புதிதாக தேர்தல் நடத்துங்கள். சந்தேகப்படும் தொகுதிகளில் நீங்கள் விசாரணை வையுங்கள்.

கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை அதிகரிப்பு!
Photo: PIB-

ஒடிசாவில் சட்டமன்றம், நாடாளுமன்றத்திற்கு ஒன்றாக தேர்தல் நடைபெற்றது. ஆனால் அங்கு மொத்தமுள்ள வாக்காளர்களைவிட பதிவாகிய வாக்குகள் மிகவும் அதிகமாகும். அதேபோல் 5 மணி முதல் 6 மணி வரை பதிவான வாக்குகள் மிகவும் அதிகமாகும்.  சில தொகுதிகளில் 30 சதவீதம் வரை அதிகமாகும். கேரளாவில் சுரேஷ்கோபி  தொகுதியில் வாக்குப்பதிவு அதிகம். ஒட்டுமொத்த தேர்தல் அமைப்பும் மோசடியாக போய்க்கொண்டிருக்கிறது. வாக்காளர் பட்டியல் முறைகேட்டை திருத்தாவிட்டால், ஜனநாயகம் என்கிற பெயரில் தேர்தல் நடத்துவதற்கு அர்த்தமே கிடையாது. பழைய தேர்தல்களில் எங்கெங்கே முறைகேடுகள் உள்ளதோ, அங்கே தேர்தலை ரத்து செய்துவிட்டு புதிதாக தேர்தல் நடத்த வேண்டும். அந்த விழிப்புணர்வை ஏற்படுத்ததான்  ராகுல்காந்தி நடைபயணம் செல்கிறார். அதை தடுக்கும் விதமாக தான் எதிர்க்கட்சி தலைவர்கள் மீதான குற்றச்சாட்டை பாஜக முன்வைக்கிறது.

எதையும் மதவாதம், பிளவுவாதமாக பேசுவது தான் பாஜகவின் வழக்கமாக உள்ளது. ராகுல்காந்தி, ஸ்டாலின், அபிஷேக் பானர்ஜி போன்றவர்களுக்கு மதச்சாயம் பூசுவதன் மூலம் ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுகளை முடக்க நினைக்கிறார்கள். பாஜகவின் கடைசி ஆயுதம் மதம்தான். தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடியின் வெறுப்பு பேச்சுகளை, தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்தது. வாக்குப்பதிவில் முறைகேடு என்று சொன்னால் நீங்கள் மதத்தை கொண்டுவருவது ஏன்? பீகாரில் முஸ்லீம்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் தான் வாக்காளர்கள் அதிகளவில் நீக்கப்பட்டிருப்பதாக இந்துவில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. அப்போது செய்வது என்ன விதமான அரசியல்? வாக்கு திருட்டு விவகாரத்தை காங்கிரஸ் மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். வெளிப்படைத்தன்மை இந்த தேர்தல் ஜனநாயகத்தில், எல்லாவற்றையும் சுத்தப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. 5 கோடி பேரை நீக்கினால்தான் தாங்கள் உள்ளே வருவோம் என்பதுபோல உச்சநீதிமன்றம் சொல்கிறது. ஒருவரை நீக்கினாலும் தவறுதான். SIR போன்ற மோசமான நடவடிக்கைகள் நீக்கப்பட வேண்டும்.

தேர்தல் ஆணையமும், பாஜகவும் ஒன்றாக பிறந்த இரட்டைக்குழந்தைகள் தான். காரணம் தேர்தல் ஆணையரின் நியமனமே அப்படிதான் உள்ளது. பிரதமர், மத்திய அமைச்சர் மற்றும்  எதிர்க்கட்சி தலைவர் இருக்கிறார்கள். பெரும்பான்மையாக உள்ளவர்கள் தானே தேர்தல் ஆணையரை தேர்வு செய்வார்கள். அவர்களால் தேர்வு செய்யப்படும் நபர் எப்படி இருப்பார்? பிரதமரின் சுற்றுபயண விவரத்தின் அடிப்படையில் தான் தேர்தல் அட்டவணையையே தயாரிக்கிறார்கள். மக்கள் விழிப்புணர்வு அடையாவிட்டால் இந்த பிரச்சினைக்கு விடிவே கிடையாது. மக்களை விழிப்படைய செய்ய வேண்டியது எதிர்க்கட்சிகளின் வேலையாகும். உலகின் மிகப்பெரிய ஜனநாயகமான இந்தியாவுக்கு இது மிகவும் முக்கியமான கால கட்டமாகும். இந்த நேரத்தில் நாம் சரிசெய்ய தவறிவிட்டால், வாழ்நாள் தவறாகிவிடும்.

தேர்தல் ஆணையம் விமர்சனங்களுக்கு உட்பட்ட அமைப்புதான். முறைகேடுகள் நடைபெற்றால் அதை கண்டிக்கும் உரிமை நமக்கு இருக்கிறது. நாட்டில் தேர்தல் ஜனநாயகமே தாக்குதலுக்கு உள்ளாகிறபோது நீதிமன்றங்கள் இன்னும் விழிப்போடு இருக்க வேண்டும். இதில் எந்தவித சமரசமும் கூடாது. வாக்காளர்களுக்கு குடியுரிமை உள்ளதா? இல்லையா? என்று பார்ப்பாது தேர்தல் ஆணையத்தின் வேலை அல்ல. அது உள்துறை அமைச்சகத்தின் வேலையாகும். 1987க்கு முன்பு உள்ள ஆவணங்களை கேட்டால் மக்கள் எங்கே செல்வார்கள். ராகுல்காந்தி இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளார். அவர் இதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ