spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைடெல்லியில் செங்கோட்டையன்! இரண்டாவது மர்ம ஆட்டம் ஆரம்பம்! ப்ரியன் நேர்காணல்!

டெல்லியில் செங்கோட்டையன்! இரண்டாவது மர்ம ஆட்டம் ஆரம்பம்! ப்ரியன் நேர்காணல்!

-

- Advertisement -

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் அதனால் அதிமுகவில் பெரிய அளவில் தாக்கம் ஏற்படாது. அவருடன் ஓபிஎஸ், தினகரன் போன்றவர்கள் இணைந்தால்தான் அதிமுகவில் பிளவு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

செங்கோட்டையன் டெல்லி பயணம் குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- செங்கோட்டையன் இரண்டாவது முறையாக டெல்லிக்கு மர்ம பயணம் மேற்கொண்டிருக்கிறார். அண்மையில் செங்கோட்டையன் – எடப்பாடி பழனிசாமி இடையிலான பனிப்போர் வெடித்தது. கட்சியில் இருந்து பிரிந்துசென்றவர்களை 10 நாட்களுக்குள் சேர்க்க வேண்டும் என்று செங்கோட்டையன் கெடு விதித்தார். செங்கோட்டையனின் கோரிக்கையை ஏற்க மறுத்த எடப்பாடி பழனிசாமி, அவரை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கி நடவடிக்கை மேற்கொண்டார்.  அதற்கு காரணம் செங்கோட்டையனின் பின்னணியில் டெல்லி இருக்கிறது என்று எடப்பாடி கருதுகிறார். தற்போது டெல்லி சென்றுள்ள செங்கோட்டையன் நிர்மலா சீதாராமன் போன்ற தலைவர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது. அதிமுகவில் பலரும் அதிருப்தியில் உள்ளனர். ஆனால் சட்டமன்றத் தேர்தல் வர உள்ளதால் யாரும் வெளியே வர மாட்டார்கள். எடப்பாடி பழனிசாமியுடன் அமைப்பு ரீதியாக இருந்தால்தான் தேர்தலில் சீட் கிடைக்கும் என்பதால் யாரும் வெளியே வர விரும்பவில்லை. தேர்தலுக்கு பிறகு அதிமுக தோற்றால், அப்போது எடப்பாடியை எதிர்த்து புரட்சி செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் தேர்தலுக்கு முன்னதாக அப்படியான புரட்சிக்கு வாய்ப்பு இல்லை.

செங்கோட்டையன்

இந்த சூழலில், செங்கோட்டையனுக்கு, எடப்பாடியை எப்படி தன்னுடைய வழிக்கு கொண்டு வருவது என்பதற்கு பாஜகவின் ஆலோசனை தேவையாக இருக்கலாம். இந்த விவகாரத்தை நிர்மலா சீதாராமன் தான் கவனித்து வருகிறார். அதற்கு காரணம் நிர்மலா சீதாராமனுக்கு, அண்ணாமலையை பிடிக்காது. ஓபிஎஸ், தினகரன் போன்றவர்களுடன் அண்ணாமலை தொடர்பில் இருந்து வருகிறார்.  அதேபோல் செங்கோட்டையனையும் எடப்பாடிக்கு நேர் எதிராக நிறுத்த பாஜக முயற்சிக்கிறது. இதன் நோக்கம் என்பது சட்டமன்றத் தேர்தலில் அதிக சீட்டுகள் வாங்குவது மற்றும் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்பதாகும். அமித்ஷா, இதுவரை முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கவே இல்லை. இந்த நிலையில், நிர்மலா சீதாராமன், ஆர்எஸ்எஸ் தலைவர்களை சந்திப்பதற்காக செங்கோட்டையன் டெல்லி சென்றுள்ளார். ஹரிதுவார் என்று சொல்கிறார். நிச்சயமாக டெல்லியில் அவர் என்ன செய்வார் என்று எல்லோருக்கும் தெரியும். அதிமுக பலவீனமாக இருக்கிறபோதும், எடப்பாடி பழனிசாமி தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியுடன் உள்ளார். அது செங்கோட்டையனுக்கும் நன்றாகவே தெரியும். அப்படி இருந்தபோதும் அவர் வெளியில் வர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். தற்போது கலகத்தை தொடங்காவிட்டால் பின்னர் எப்போதும் தொடங்க முடியாது என்று தெரிந்துதான் அவர் தொடங்கியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
File Photo

மூத்த தலைவரான செங்கோட்டையன், அதிமுக ஒருங்கிணைப்பு விவகாரத்தில் சரியாக அடிக்கவில்லை என்பதுதான் என்னுடைய கருத்து. இந்த விவகாரத்தில் எடப்பாடியின் நிலைப்பாடு என்பது அனைவரும் அறிந்ததே. அதற்கு மாற்றாக எடப்பாடியின் சர்வாதிகார போக்கு குறித்தும், தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும் அவர் சொல்லி இருந்தால் தொண்டர்கள் யோசித்திருப்பார்கள். ஆனால் அவர் அதிமுக ஒருங்கிணைப்பு என்று மென்மையாக டீல் செய்துவிட்டார். ஆனால் எப்படி செய்தாலும் முடிவு ஒன்றுதான். அதற்கு பதிலாக செங்கோட்டையன் அடுத்த நாளே ஓபிஎஸ், தினகரன், சசிகலா போன்றவர்களை அழைத்து செய்தியாளர் சந்திப்பை நடத்தி, அடுத்தக்கட்டத்திற்கு சென்று இருக்க வேண்டும். அப்படி செய்தால் கட்சியில் பெரிய அளவு பிளவு ஏற்பட்டிருக்கிறது என்று தொண்டர்கள் சிந்திப்பார்கள். ஆனால் எடப்பாடிக்கு எதிராக இருப்பவர்களே, ஒற்றுமையாக இருக்கவில்லை. முதலில் அதிமுகவில் ஒற்றுமை வேண்டும் என்று சொல்கிற செங்கோட்டையன், ஓபிஎஸ், தினகரன், சசிகலா ஆகியோர் ஒன்றிணைய வேண்டும்.

ஓபிஎஸ்சுடன் இணைவதை தொண்டர்கள் எப்படி ஏற்று கொள்வார்கள்?டிடிவி தினகரன் பதில்

பாஜகவை பொறுத்தவரை இவர்களுக்கு பெரிய அளவுக்கு உதவுவார்களா என்று தெரியவில்லை. அவர்களை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி கட்சி வைத்துள்ளார். எனவே அவர் சொல்வதைதான் பாஜக கேட்பார்கள். எனவே இவர்கள் ஒற்றுமையை காட்டினால்தான் பாஜகவுக்கு நம்பிக்கை ஏற்படும். எடப்பாடி பழனிசாமி, சுற்றுபயணத்தில் கூட்டம் சேர்வதால் அவர் பலம் பெற்று விட்டதாக சொல்வது ஏற்புடையது அல்ல. அவர் எப்படி கூட்டம் சேர்க்கிறார் என்று பிரேமலதாவே சொன்னார்களே. நீண்ட நாட்களுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி சுற்றுபயணம் செல்கிறார். அது அதிமுக தொண்டர்களுக்கு உற்சாகம் அளிக்கின்ற ஒரு விஷயமாகும். ஆனால் கூட்டம் சேர்ப்பது எப்படி என்று எல்லோருக்கும் தெரியும்.  எடப்பாடி பழனிசாமி எப்போது பலம் பெற்றவர் என்றால்? அவரை நம்பி அதிமுக உடன் 4 கட்சிகள் கூட்டணிக்கு வர வேண்டும். அப்போதுதான் அவர் உண்மையாக பலம் பெற்றுள்ளார் என்று அர்த்தம். தற்போது  என்டிஏ கூட்டணியில் இருந்த ஓபிஎஸ், தினகரன் போன்றவர்களே  வெளியே போய்விட்டார்கள். இதனால் அவர்களுக்கான சமுதாய வாக்குகள் எடப்பாடிக்கு எதிராகவே விழும். அப்போது எடப்பாடி பழனிசாமி பலவீனமாக தான் போய் கொண்டிருக்கிறார்.

அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்குவேன் என்று சொன்னது செயற்கையான ஒரு விஷயமாகும். அதற்கு காரணம் அதிமுக – பாஜக கூட்டணிக்கு எதிரான வேலைகளை அண்ணாமலை செய்கிறார் என பாஜக மேலிடத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அதனால், அவரை மேலிடம் எச்சரித்து உள்ளது. எனவேதான் அமித்ஷா கூட்டிய கூட்டத்திற்கு அவர் போகவில்லை. அந்த கூட்டத்தில் பேசிய அமித்ஷா, அண்ணாமலைக்கு தேர்தலில் எம்எல்ஏ சீட் தரக்கூடாது. அவரை தமிழக அரசியலில் இருந்து வெளியேற்றி டெல்லியில் போட வேண்டும் என்றும் கூறியுள்ளார். அண்ணாமலைக்கு, தனது பதவியை பறித்த எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்கக் கூடாது என்பதுதான் திட்டம். ஆனால் பாஜக மேலிட அழுத்தம் காரணம் கூட்டணியை ஆதரித்து பேச வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையனை, நிச்சயமாக அண்ணாமலை தூண்டிவிட்டிருப்பார். அவர் உடனடியாக கலகம் செய்தார் என்றால் பாஜக மேலிடம் சும்மா இருக்காது. எனவே தேர்தல் நெருங்குகிறபோது எடப்பாடி முதலமைச்சர் ஆகாமல் இருப்பதற்கு என்ன என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வார். அண்ணாமலை மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி விட்டது. எனவே தமிழ்நாட்டை விட்டு அவரை நகர்த்த அமித்ஷா விரும்புகிறார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ