spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஒத்து ஊதும் எடப்பாடி! ஒட்ட நறுக்கிய ஸ்டாலின்! பயந்து ஓடிய சங்கி கூட்டம்! அய்யநாதன் நேர்காணல்!

ஒத்து ஊதும் எடப்பாடி! ஒட்ட நறுக்கிய ஸ்டாலின்! பயந்து ஓடிய சங்கி கூட்டம்! அய்யநாதன் நேர்காணல்!

-

- Advertisement -

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக எதிர்வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து உண்மைகளையும் சொல்லி, பாஜக – ஆர்எஸ்எஸ் கூட்டத்தை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது :- திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் ஒரு விஷயத்தை விட்டு விடுகிறார். ஒரு முற்போக்கு ஜனநாயக அரசியல் உங்களுக்கு தேவையா? அது வளர்ச்சிக்கு உதவிடும். ஒரு பிற்போக்குத்தனமான மதவாத அரசியல் வேண்டுமா? அது ரத்தக்களறிக்கு இட்டுச்செல்லும். இதில் எது உங்களுக்கு வேண்டும்? என முதலமைச்சர் கேட்கிறார். மதுரை மக்கள் விரும்புவது உயர் சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவமனை, மெட்ரோ ரயில் போக்குவரத்து, தொழில் முன்னேற்றம் இவை தான் என்றும் முதலமைச்சர் சொல்கிறார்.

மறுபுறம் உள்ள மற்றொரு வாய்ப்பை மோடி, பாஜக – ஆர்எஸ்எஸ் கூட்டம் சொல்கிறது. திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுகிறோம் என கடவுளின் பெயரால் வன்முறையை தமிழ்நாட்டில் விதைப்பதற்கான முயற்சி நடைபெறுகிறது. இதை முறியடிக்க  வேண்டிய ஒரு கட்டாயம் தான் தமிழக அரசு நடத்தி வருகிற சட்ட ரீதியான போராட்டம். இது தான் முதலமைச்சர் கூறியுள்ள கருத்தின் உள்ளீடான அர்த்தம்.

திருப்பரங்குன்றத்தில் தர்கா எதிரே இருக்கும் தூணில் தீபம் ஏற்றப்பட்டதாக வரலாறு இருக்கிறதா? திருப்பரங்குன்றத்தில் வாழ்கிற யாராவது ஒருவர் சொல்லட்டும். மலை மீது இந்த ஆண்டில் தீபம் ஏற்றப்பட்டது என்று. ராமரவிகுமார் என்பவர் வழக்கு தொடர்கிறார். அப்போது நீங்கள் என்ன சொல்ல வேண்டும். அந்த இடத்தில் இருக்கும் தூண் தீபத்தூணா? இல்லையா? என்று தமிழ்நாடு தொல்லியல் துறையிடம் கேட்டிருக்க வேண்டும். அயோத்தி வழக்கிலேயே ராமர் கோயில் இருந்ததா? இல்லையா? என்பதற்கு இந்திய தொல்லியல் துறையின் அறிக்கையை தான் ஆதாரமாக நீதிபதிகள் எடுத்துக் கொண்டார்கள்.

அப்போது, அது தீபத்தூணா? என்று உறுதி செய்ய வேண்டிய நபர் நீங்கள் அல்ல. இந்திய தொல்லியல் துறைதான் அதற்கான அதிகாரம் படைத்த நபர் ஆவார். மூன்று முறை உத்தரவிட்டும் அரசு நிறைவேற்றவில்லை என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சொல்கிறார். அந்த தீபத்தூணில் எப்போது தீபம் ஏற்றப்பட்டது?. எப்போது தீபம் ஏற்றுவது நிறுத்தப்பட்டது? என்கிற விவரத்தை அவர் முதலில் சொல்லட்டும்? அப்படி ஆதாரம் இல்லாத ஒன்றுக்கு எப்படி நீதிபதி அனுமதி அளித்தார்?

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தீபத்தூணில் தீபம் ஏற்ற விடாமல் தடுத்ததன் மூலம் தமிழ்நாடு அரசு சமூக நல்லிணக்கத்தை சரியாக வைத்திருக்க முடியுமா? கேள்வி எழுப்பியுள்ளனர். நீதிபதிகள் அர்த்தத்துடன் தான் பேசுகிறார்களா? அடிப்படையில் அப்படி தீபத் தூணில் தீபம் ஏற்றப்பட்டதா? நடக்காத ஒரு இடத்தில் ஒருவர் நடத்துவதற்காக ஒருவர் போகிறார் என்றால், அதன் உள்நோக்கம் உங்களுக்கு புரியவில்லையா? மத நல்லிணக்கம் ஏற்கனவே அங்கே இருக்கிறது. இவர்கள் அதை சீர்குலைப்பதற்காக வந்தவர்கள்.

தமிழ்நாட்டை நாசம் செய்வதற்காக ஆர்எஸ்எஸ்-காரர்கள் வருகிறார்கள். நீங்கள் எல்லாம் அவர்களுக்கு ஒத்து ஊதுகிறீர்கள். அந்த இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உரிமை கொண்டாட ராம ரவிகுமார் யார்? அதற்கு அனுமதி வழங்க நீங்கள் யார்? ஜி.ஆர்.சுவாமிநாதனை தவிர வேறு எந்த நீதிபதியிடம் சென்றிருந்தாலும் அவர்கள் நான் கேட்கும் அடிப்படையான கேள்விகளை மனுதாரர் ராமரவிகுமாரிடம கேட்டிருப்பார்கள். ஆர்.எஸ்.எஸ்-காரர் என்று வெளிப்படையாக தெரியும் ஒருவரிடம் வழக்கு சென்றால் என்ன ஆகும்? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசு எடுத்த நடவடிக்கை மிகவும் சரியானது.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முழுமையாக திருப்பரங்குன்றம் வழக்கின் தீர்ப்பை ஆதரிப்பதாக சொல்கிறார். இதன் மூலம் ஜெயலலிதாவிடம் இருக்கும் தைரியம், துணிச்சலை தன்னிடம் எதிர்பார்க்காதீர்கள் என்று அவர் சொல்கிறார். அவருக்கு திராவிடம், ஆரியம் போன்று எதுவும் தெரியாது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணியை எதிர்த்து யாருக்கு வாக்களித்தாலும், அது பாஜகவுக்கு வாக்களிப்பதாக தான் அர்த்தம். அதை எடப்பாடி பழனிசாமி நிரூபிக்கிறார். அதிமுக, ஓபிஎஸ், தினகரன், விஜய் என யாருக்கு வாக்களித்தாலும் அது பாஜகவுக்கு போடுகிற வாக்குதான். தமிழ்நாட்டை நாசமாக்குகிற வாக்குதான். பாஜகவால் திமுகவை வீழ்த்த முடியாது. அதனால் விஜயை இறக்கி விட்டிருக்கிறார்கள். காரணம் அவரால், இளைஞர்களை கெடுக்க முடியும்.

நாடாளுமன்ற மக்களவையில் திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தன் ஒரு முக்கியமான விஷயத்தை எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பொறுப்புடைய மாநில அரசு இருக்கும்போது, ஒரு நீதிபதி சிஎஸ்ஐஎப் வீரர்களை அழைத்துச்சென்று தீபம் ஏற்றச் சொல்வது, மாநில உரிமைகளை மீறுவதோடு, மத்திய – மாநில காவல்துறைகளுக்கு மோதலை உண்டு பண்ணும் ஆபத்தானது என்று சொல்கிறார். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு அந்த கவலை இல்லை. ஆனால், சச்சிதானத்திற்கு அந்த சமூக பொறுப்பு இருக்கிறது.

அதையே தான், பெ.சண்முகம் பேசினார். அதையே தான் சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன், விசிக தலைவர் திருமாவளவன் போன்றவர்களும் சொல்லியுள்ளனர். அதுதான் உண்மை. ஜி.ஆர்.சுவாமிநாதன் தன்னுடைய சித்தாந்தத்தை வெளிப்படையாக காட்டிக் கொண்டவர். அவர் இருப்பதால் தான் இந்த பிரச்சினையே வந்தது. ஒரு மதவாத சக்தி நீதிமன்றத்தில் இருக்கக் கூடாது. அதன் காரணமாக தான் ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக் கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று சொல்கிறார்.

மற்றொன்று இந்த விவகாரத்தில் எந்த இடத்திலும் வரலாறோ, உரிமையோ, உண்மையோ இல்லை என்பதை எதிர்வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் மு.க.ஸ்டாலின், கரூர் விவகாரத்தில் சொன்னது போன்று விவரமாக சொல்ல வேண்டும். முதலமைச்சர் வெளிப்படையாக பேசி, தமிழ்நாட்டு மக்களிடம் அவர்களை அம்பலபடுத்த வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ