தமிழ்நாடு அரசு நியமனம் செய்த சிறப்பு விசாரணை அமைப்பை முடக்குவதற்கு நடிகர் விஜய் தீவிரம் காட்டுவது ஏன் என்கிற பின்னணியை ஆய்வு செய்ய வேண்டும்.கரூரில் தவெக கூட்டத்தில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தில் உண்மை தன்மையை கண்டறிய தமிழக அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணை குழுவை (SIT) முடக்க நடிகர் விஜய் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாடு அரசின் நியமனம் செய்த சிறப்பு விசாரணை அமைப்பை முடக்குவதற்கு நடிகர் விஜய் தீவிரம் காட்டுவது ஏன் என்கிற பின்னணியை ஆய்வு செய்ய வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மற்றும் நடிகருமான விஜய், 2026 தேர்தலை மையப்படுத்தி மாநிலம் முழுவதும் பிரச்சாரத்தை மேற்கொண்டார். திருச்சியில் தொடங்கிய அவருடைய பிரச்சாரம் நாகப்பட்டினம், திருவாரூர், நாமக்கல் என்று நடந்த பிரச்சாரம் செப்டம்பர் – 17 மாலையில் கரூரில் நடந்த பரப்புரையில் 41 பேர் உயிரிழந்தனர். அப்பொழுது அந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்காமல் நடிகர் விஜய் சம்பவ இடத்தில் இருந்து வெளியேறி தனி விமானத்தில் சென்னைக்கு சென்று விட்டார்.

கரூரில் நடிகர் விஜய் நடத்திய கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கு ஆளும் திமுக அரசுதான் காரணம் என்று நடிகர் விஜய் தரப்பு குற்றம் சாட்டியது. இல்லை… இல்லை நடிகர் விஜய் தான் காரணம் என்று அரசு தரப்பிலும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து விசாரணையை தொடங்கியது. மேலும் இது தொடர்பாக தவெக சார்பில் உயர் நீதிமன்றத்திற்கு சென்றனர். அப்போது தவெக கட்சியையும், அந்த கட்சியின் தலைவர் நடிகர் விஜய்யையும் நீதிபதி கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் மதுரை ஐஜி தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை (SIT) நியமனம் செய்தார்.
உயர்நீதிமன்ற வழிகாட்டுதலுடன் தமிழக அரசு நியமனம் செய்த சிறப்பு விசாரணை குழுவை (SIT) தடை செய்ய வேண்டும் என்று நடிகர் விஜய் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
காரணம் என்ன?
தமிழ்நாடு அரசின் நியமனம் செய்த சிறப்பு விசாரணைக் குழு (SIT) விசாரணையில் கரூரில் பயன்படுத்தப்பட்ட 63 ட்ரோன்கள், ArriAlexa 35 போன்ற சினிமா படப்பிடிப்பு கேமராக்கள், ஜனநாயகன் படத்தில் கதாநாயகனுக்கு கூடும் பெருங்கூட்ட காட்சிகளுக்காக விஜய்யின் பிரச்சாரத்தின் போது பயன்படுத்தியது தெரிந்துவிடும். (விபத்து நடக்காமலிருந்தால் இதை அந்த படத்தில் சேர்த்திருப்பார்கள்)
மேலும் கரூரில் நடந்தது ஒரு விபத்துதான். இதில் எந்த சதியும் இல்லை என்று நிரூபணம் ஆகிவிட்டால், தன் குற்றத்தை மூடி மறைக்க தவெக செய்த பொய் பிரச்சாரம் தவிடு பொடியாகிவிடும். அதனால்தான் விஜய் சிறப்பு விசாரணைக் குழு (SIT) க்கு தடைவிதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார்.
மேலும் சிறப்பு விசாரணைக் குழு (SIT) விசாரணை மூன்று மாதங்களுக்குள் முடிந்து விடும். தவறு செய்தவர்கள் யார் யார் என்பது ஊர்ஜிதமாகிவிடும். ஆனால் பாஜக உதவியுடன் உச்சநீதிமன்றத்தில் சிறப்பு விசாரணைக் குழு (SIT) க்கு தடை வாங்கி, அதை CBI விசாரணைக்கு அனுப்பிவிட்டால்… தேர்தல் முடியும் வரை அந்த விசாரணை முடியாது, தனக்கும் எந்த களங்கமும் இருக்காது என்று நடிகர் விஜய் நினைக்கிறார்.
பாஜக என்ன நினைக்கிறது? இப்போது எடப்பாடி பழனிசாமியும் விஜய்யும் கூட்டணி வைக்கலாமா என்று நடத்தும் ரகசிய பேச்சு கசிந்து விட்டதால், அவர்கள் கூட்டணி வைத்து நம்மை கழட்டிவிடுவார்களோ என்ற அச்சம் பாஜகவிற்கு வந்துவிட்டது.
எடப்பாடியை மிரட்ட ஏகப்பட்ட வழக்குகள் இருக்கிறது. ஆனால் விஜய்யை மிரட்ட தற்போது எந்த ஆயுதமும் பாஜகவிடம் இல்லை. கரூர் ஒரு நல்ல சந்தர்ப்பம். இதை நழுவ விடக்கூடாது என்று நினைப்பதால்தான் அரசியல் வட்டாரத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்தவர் எடப்பாடி பழனிச்சாமி – எ.வ.வேலு காட்டம்