Homeசெய்திகள்ஆவடிஆவடி : 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல்

ஆவடி : 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல்

-

ஆவடி : 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல்

நேற்று மாலை பெய்த மழையால் ஆவடி அருகே 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல்.திடிர் போக்குவரத்து நெரிசலினால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

சென்னை திருத்தணி நெடுஞ்சாலையில் ஆவடி அருகே திருமுல்லைவாயில் தொடங்கி முருகப்பா பாலிடெக்னிக் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஆவடி : 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல்

திடீரென ஏற்பட்ட இந்த போக்குவரத்து நெரிசலினால் வாகனங்கள் ஆமை போல் நகர்ந்து செல்லும் சூழல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளானார்.மேலும் இன்று நேற்று ஆவடி சுற்றுவட்டப் பகுதியில் கன மழை பெய்ததால் சாலையில் நீர் தேங்கி காணப்பட்டது. மழையின் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையின் இருபுறங்களிலும் நின்று செல்லக்கூடிய சூழல் ஏற்பட்டது. அது மட்டும் இல்லாமல் இந்த நெடுஞ்சாலையில் தனியார் கேஸ் நிறுவனம் சாலையில் பள்ளம் தோண்டி பைப் புதைக்கும் பணியை செய்து வருகிறது. மறுபுறம் உயர் மின்னழுத்த கேபிள்கள் புதைக்கும் பணி நடைபெறுகிறது. இதனால் நெடுஞ்சாலை பகுதி குறுகிய நிலையில் உள்ளது.மேலும் பைப் புதைக்க தோண்டப்பட்ட பள்ளங்கள் மீண்டும் சரிவர மூடாததால் ஆங்காங்கே பள்ளங்களில் நீர் தேங்கி சேரும் சகதியுமாய் காணப்படுகிறது.

வார இறுதிக்கு வந்துட்டோம் … ஷாப்பிங் பண்ணலாமா?  இன்றைய நிலவரம் என்ன?

இந்நிலையில் திடீரென மழை நின்றவுடன் அனைத்து வாகன ஓட்டிகளும் ஒன்று சேர சாலையில் பயணித்ததால் திடீரென இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக ஆவடி போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் தகவல் அளித்தனர்.நீண்ட நேர போக்குவரத்து நெரிசலை காவலர்கள் துரிதமாக செயல்பட்டு வாகனங்களை சரிவர வழி நடத்தியதால் போக்குவரத்து நெரிசலானது நீண்ட நேரம் பின் சுமுக நிலைக்கு திரும்பியது.

MUST READ