Homeசெய்திகள்ஆவடிஆவடி மாநகராட்சியில் நடைபெறும் பணிகளை தட்சணாமூர்த்தி IAS ஆய்வு

ஆவடி மாநகராட்சியில் நடைபெறும் பணிகளை தட்சணாமூர்த்தி IAS ஆய்வு

-

ஆவடி மாநகராட்சியில் நடைபெறும் பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் மேலாண்மை இயக்குநர் தட்சணாமூர்த்தி IAS ஆய்வு மேற்கொண்டார்.

ஆவடி மாநகராட்சியில் நடைபெறும் பணிகளை தட்சணாமூர்த்தி IAS ஆய்வு

உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாகவும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் தொடர்பாகவும், தெரு விளக்குகள் பராமரிப்பு, குடிநீர் விநியோகம் குறித்தும் ஆய்வு கூட்டம் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.

அதற்கு முன்பு அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளை ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்யும் பணிகளை ஐஏஎஸ் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

ஆவடி மாநகராட்சியில் நடைபெறும் பணிகளை தட்சணாமூர்த்தி IAS ஆய்வு

அதன்படி இன்று ஆவடி மாநகராட்சியில் தட்சணாமூர்த்தி IAS, ஆவடி மாநகராட்சியில் நடைபெறும் அனைத்து பணிகளையும் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அதில் குறிப்பாக தூய்மை பணியாளர்கள் கள பணியில் உள்ளனரா? அவர்களின் வருகைப் பதிவேட்டை ஆய்வு செய்தார். பின்னர் ஆவடி வீட்டு வசதி வாரிய பகுதியில் உள்ள பசுமை உரக்குடிலில் மக்கும் குப்பைகளை செயலாக்கம் செய்து உரமாக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.

ஆவடி மாநகராட்சியில் நடைபெறும் பணிகளை தட்சணாமூர்த்தி IAS ஆய்வு

அதன் பின்னர் சேக்காடு பகுதியில் அமைந்துள்ள குப்பை கிடங்கில் தானியங்கி எடை மேடையில் வாகனங்கள் எடையிடுவது மற்றும் அதனுடைய இணையதளத்தில் எடை பதிவாதையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து வசந்தம் நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால்வாய் கட்டும் பணியினை ஆய்வு செய்தார்.

ஆய்வில் ஆவடி மாநகராட்சி ஆணையர் கந்தசாமி ஐ.ஏ.ஸ், மாநகராட்சி துணை ஆணையர்கள் சங்கரன், மாரிசெல்வி, மாநகர நல அலுவலர் ராஜேந்திரன், மாநகராட்சி பொறியாளர் ரவிசந்திரன், துப்புரவு அலுவலர்கள் மொஹிதின் ஆகியோர் உடன் இருந்தனர்.

MUST READ