ஆவடி அடுத்த அயப்பாக்கம் ஊராட்சியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் தேசியக்கொடியின் மூவர்ணம் தீட்டிய குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி…
நாளொன்றுக்கு 68 லட்சம் லிட்டர் குடிநீர் தேவையை பூர்த்திசெய்ய கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு அயப்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நன்றி பாராட்டி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த அயப்பாக்கம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம்,கிராம ஊராட்சி வரவு செலவு தணிக்கை அறிக்கை , ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், கிராம நத்தம் நிலம் உள்ளவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குறிப்பாக வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் அயப்பாக்கம் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் கிராம பகுதிகளில் 30,000 குடியிருப்புகளில் சுமார் 1.5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு தற்பொழுது உள்ள குடிநீர் தேவையை கூடுதலாக பூர்த்தி செய்யும் வகையில் நாளொன்றுக்கு 68 லட்சம் லிட்டர் குடிநீரானது கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் தலா 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் தலா 24 லட்சம் கொள்ளளவு கொண்ட 2 கீழ்நிலை நீர் சேமிப்பு சம்ப் அமைக்க திட்டம்.இதன் மூலம் அயப்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில் சுமார் 1.5 லட்சம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.
இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஒப்புதல் அளித்ததற்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின், துறை சார்ந்த அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவருக்கும் நன்றி பாராட்டி ஒருமனதாக கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்றதலைவர் துரைவீரமணி நிறைவேற்றினார்.
இந்நிகழ்வில் அனைத்து துறை உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் அரசு துறையினர் மற்றும் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டனர் .