தூய்மை பணியாளராக வேலை செய்து வரும் வரலட்சுமி மின்சாரம் தாக்கி இன்று பலியானாா். இது அரசின் அலட்சியத்தால் நிகழ்ந்துள்ளது என அறப்போா் இயக்கம் தொிவித்துள்ளது. கண்ணகி நகர் பகுதியை சார்ந்த தூய்மை பணியாளராக வேலை செய்து வரும் திருமதி.வரலட்சுமி அவர்கள் வேலைக்கு செல்லும்போது மழை நீரில் உள்ள கேபிள் மீது காலை வைத்ததால் மின்சாரம் தாக்கி இன்று காலை 4.50 மணி அளவில் உயிர் இழந்தார். இவருக்கு 12 வயதில் பெண் குழந்தையும் 10 வயதில் ஆண் குழந்தையும் உள்ளார்கள். வீட்டில் சம்பாதிக்கும் ஒரே நபர் இவா் தான்.
கண்ணகி நகர் 11வது குறுக்கு தெருவில் மின்சார கேபிள்கள் சாலை மேல் செல்வதாகவும் அபாயகரமாக உள்ளதாகவும் அங்கு இருக்கும் மக்கள் பலமுறை மின்சார வாரியத்திற்கு புகார் அளித்ததாக தெரிவிக்கின்றனர். அரசின் அலட்சியத்தால் இன்னும் எத்தனை உயிர்கள் போகுமோ. கண்ணகி நகர், எழில் நகர், பெரும்பாக்கம் போன்ற பகுதிகளில் மின்சார கேபிள்கள் அபாயகரமாக பல இடங்களில் உள்ளது என்று அறப்போர் இயக்கம் ஏற்கெனவே புகார் அளித்தும் நடவடிக்கைகள் இல்லை.

சமூக நீதி வெறும் பேச்சில் இருந்தால் பத்தாது. செயலில் சிறதாவது இருக்க வேண்டும். இந்த அலட்சியத்திற்கு காரணமான மின்சார வாரிய அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாடு வாரிய அதிகாரிகள் மீது உடனடியாக நடிவடிக்கை எடுக்க வேண்டும். ஈடு செய்ய முடியாத இந்த நஷ்டத்திற்கு அரசின் அலட்சியத்தால் ஆளாகி இருக்கும் அந்த குடும்பத்திற்கு ரூ 1 கோடி தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும். மேலும் அந்த குழந்தைகளின் கல்லூரி செலவுகளை அரசுகளே ஏற்றுக்கொள்ள வேண்டும் என அறப்போர் இயக்க வெளியிட்டுள்ளது.
சொதப்பிய தவெக மாநாடு! விஜய்க்கு பிரேமலதா எச்சரிக்கை! ஆதவ் ஏற்படுத்திய டேமேஜ்!