இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.
சென்னை: இன்றைய (அக் 13) ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம். வாரத்தின் முதல் நாளே தலைசுற்ற வைக்கும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை. கிராமிற்கு ரூ.25 அதிகரித்து 1 கிராம் தங்கம் ரூ.11,525க்கும், சவரனுக்கு ரூ.200 அதிகரித்து 1 சவரன் தங்கம் ரூ.92,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளிக்கு இன்னும் ஓரு வார காலமே இருக்ககூடிய கூழலில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.

வெள்ளி விலை வரலாறு காணாத உச்சம் தொட்டுள்ளது. இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.195க்கும் விற்பனையாகிறது. பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.5000 அதிகரித்து ரூ.1,95,000க்கும் விற்பனையாகிறது. தங்கத்திற்கு மாற்றாக வெள்ளியில் பலரும் முதலீடு, ஆபரணங்கள் வாங்கத் தொடங்கியுள்ளனர். அக்டோபர் ஒன்றாம் தேதி ரூ.161ற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் வெள்ளி இன்று ரூ.195க்கு விற்பனையாகிறது.
கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கு சிபிஐ க்கு மாற்றம் – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு