அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ரெட்ட தல திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
படக்குழுவினருக்கு அசைவ விருந்து ஏற்பாடு செய்து துணை நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு உணவை பரிமாறினார் நடிகர் அருண் விஜய்!

திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் ரெட்ட தல திரைப்படம் உருவாகி வருகிறது. அருண் விஜய்க்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் மற்றும் சித்தி இதானி நடித்து வருகின்றனர் இதற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.
சென்னை பாண்டிச்சேரி கோவா உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் இன்று இறுதி கட்டமாக சென்னையில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்ததுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக பட குழுவினர் மற்றும் நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்கும் அசைவிருந்து ஏற்பாடு செய்து தானே பரிமாறியும் தனது மகிழ்ச்சியை நடிகர் அருண் விஜய் வெளிப்படுத்தியுள்ளார்.