spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடி மார்க்கெட் பகுதி ஆக்கிரமிப்பு அகற்றியதை பார்வையிட்ட காவல் ஆணையர்

ஆவடி மார்க்கெட் பகுதி ஆக்கிரமிப்பு அகற்றியதை பார்வையிட்ட காவல் ஆணையர்

-

- Advertisement -

ஆவடி மார்க்கெட் பகுதி ஆக்கிரமிப்பு அகற்றியதை பார்வையிட்ட காவல் ஆணையர்

ஆவடி மார்க்கெட் பகுதி சாலை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றம் செய்து சாலை விரிவாக்கம் செய்யப்பட்டதை காவல் ஆணையர் சங்கர் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து ஆவடி வணிகர் சங்க நிர்வாகிகள் காவல் ஆணையர் அவர்களுக்கு சால்வை மற்றும் சந்தன மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தங்களது நீண்ட கால கனவாக இருந்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிக் கொடுத்ததற்கு மகிழ்ச்சியும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

we-r-hiring

ஆவடி மார்க்கெட் பகுதி ஆக்கிரமிப்பு அகற்றியதை பார்வையிட்ட காவல் ஆணையர்

சாலையோரம் உள்ள வியாபாரிகளுக்கு சாலை எல்லைக்கோடு வரை மட்டுமே கடை இருக்க வேண்டும், எல்லைக்கோடுகளை தாண்டி கடைகளை நகர்த்த வேண்டாம், இப்பொழுது உள்ள நிலையிலே இனி எப்பொழுதும் கடைகளை வைத்துக் கொள்ளுங்கள் எனவும் ஆணையர் அறிவுரை கூறினார்.

ஆவடி மார்க்கெட் பகுதி ஆக்கிரமிப்பு அகற்றியதை பார்வையிட்ட காவல் ஆணையர்

எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் ஆவடி மார்க்கெட் பகுதி கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவாக்கம் செய்து, சாலை தற்போது பயன்படுத்துவதற்கு,  மகிழ்ச்சியாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து துணை ஆணையர் ஜெயலட்சுமி, ஆவடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜெயக்குமார் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

 

MUST READ