Homeசெய்திகள்க்ரைம்ஒரே வாரத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 16 போ் கைது

ஒரே வாரத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 16 போ் கைது

-

சென்னையில் குற்றங்களைக் குறைக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி, கடந்த ஜனவரி மாதம் தொடங்கி ஜூலை 28-ஆம் தேதி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 796 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

ஒரே வாரத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 16 போ் கைது

இதில் கொலை, கொலை முயற்சி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட 422 பேரும், திருட்டு, வழிப்பறி, பண மோசடி குற்றங்களில் ஈடுபட்ட 130 பேரும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட 178 பேரும், போதை பாக்கு விற்பனையில் ஈடுபட்ட 29 பேரும், பாலியல் தொழிலில் ஈடுபட்ட 16 பேரும், பெண்களை மானபங்கப்படுத்திய 5 பேரும், சைபா் குற்றத்தில் ஈடுபட்ட 5 பேரும், மதுபானம் விற்ற 7 பேரும், பொதுவிநியோக பொருள் கடத்திய 4 பேரும் என மொத்தம் 796 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

மேலும், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 22-ஆம் தேதியில் இருந்து 28-ஆம் தேதி வரையிலான 7 நாள்களில் 16 போ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ