நிலத்தகராறு விவகாரத்தில் திமுக தொழிற்சங்க நிர்வாகி காரில் கடத்தி சென்று கழுத்து நெறித்து கொலை. ஒருவர் கைது இருவருக்கு போலீஸ் வலைவீச்சு.அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 71) சென்னை மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர், சென்னை மாநகராட்சி திமுக தொழிற்சங்க பொதுச் செயலாளர் உள்ளார், இவரது உறவினர் ஒருவர் பாம்பேயில் உள்ள நிலையில் அவருக்கு சொந்தமான ஒரு கிரவுண்ட் நிலம் ஈசிஆர் உத்தண்டியில் உள்ளது. இந்த இடத்தை ஊரப்பாக்கத்தை சேர்ந்த ரவி என்பவர் போலி பத்திரங்கள் தயார் செய்து இடத்தைச் சுற்றி காம்பௌண்ட் சுவர் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து மோசடி செய்ய முற்பட்டுள்ளார்.
இந்த தகவல் பாம்பேயில் உள்ள இடத்தின் உரிமையாளருக்கு தெரிய வர உடனடியாக சென்னையில் உள்ள தனது உறவினரான குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளாா். தகவலின் பெயரில் குமார் நேரில் சென்று பார்த்த போது நில மோசடி நடப்பது கண்டு அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளாா். புகாரின் பேரில் காவல் நிலையத்தில் இரு தரப்பினரிடமும் விசாரணை நடந்துள்ளது. அப்போது இரு தரப்பும் தங்களது நிலத்திற்கான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர் அதில் குமாரின் உறவினர் உடைய ஆவணங்களே உண்மையானது என தெரியவந்துள்ளது.
இதனால் ரவி தரப்பில் குமார் மேல் கடும் கோபத்தில் இருந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி சென்னையில் உள்ள குமாரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ரவி, இடம் விஷியமாக சந்திக்க வேண்டும் தாம்பரம் வரும்படி கூறியுள்ளார் இதை நம்பிய முதியவர் குமார் 16ஆம் தேதி மதியம் தாம்பரம் வந்துள்ளார். தாம்பரம் வந்த பின்பு அவரது செல்போன் எண் சுவிட்ச் ஆப் ஆனதுடன் அவர் எங்கு சென்றார் என தெரியாத நிலையில் பல இடங்களில் தேடிய அவரது உறவினர்கள் இது குறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் அவருடைய மருமகன் மோகன் என்பவர் புகார் அளித்துள்ளாா்.
இதுகுறித்து தாம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். குமாரிடம் கடைசியாக பேசிய ரவியின் செல்போன் என்னை கொண்டு அவரை காவல் நிலையம் அழைத்து தீவிரமாக விசாரித்தனா். இந்நிலையில் குமாரை கழுத்தை நெறித்து கொலை செய்து செஞ்சி அருகே உடலை புதைத்தது தெரியவந்துள்ளது.
மேலும் காவல் துறை தரப்பில் கூறும் போது 16ஆம் தேதி ஆட்டோ மூலம் தாம்பரம் வந்த குமார் அங்கு காருடன் காத்திருந்த ரவி மற்றும் அவரது நண்பர்கள் இருவர் குமாரை நிலம் பார்ப்பதற்கு என சொல்லி திருப்போரூர் வரை செல்ல வேண்டும் எனக் கூறி காரில் அழைத்துக் கொண்டு சென்று உள்ளனர். காரில் ஊரப்பாக்கம் பகுதியை தாண்டியவுடன் ஈசிஆர் இடம் தொடர்பாக நீ ஏன் தலையிடுகிறாய் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆத்திரத்தில் கயிறால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்பு பினத்தை கொண்டு போய் செஞ்சி வனப்பகுதியில் புதைத்து விட்டு வந்துள்ளனர் என விசாரனையில் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து குற்றவாளி ரவியை கைது செய்த போலீசார் அவரது கூட்டாளிகள் இருவரை தேடி வருகின்றனர் மேலும் குற்றவாளியை செஞ்சி அழைத்து சென்று புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டி பிணத்தை அதிகாரி முன்னிலையில் தோண்டி எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே மாதம்தான் நடிகையுடன் குடும்பம் நடத்தினேன்… கைதில் தப்பிக்கும் கணவர்..!