டெஹ்ரான் மருத்துவமனையில் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த நபர் சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக இந்தியர்களை ஈரானுக்கு கடத்தியுள்ளார்.கேரள மாநிலத்தவர் கைதுவின் திருச்சூரில் உள்ள வாலாபாட்டைச் (Valapad) சேர்ந்தவர் சபித் நாசர் (30). சபித் நாசர் ஈரானுக்கு இந்தியர்களை கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த வாரம் கொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கடத்தியவர்களின் உறுப்புகளை பெறுவதற்காக, டெஹ்ரானில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியமர்த்தப்பட்டதாக புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
“இந்த மோசடியின் ஒரு பகுதியாக எத்தனை பேர் ஏமாற்றப்பட்டனர் என்பதை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். அவர் ஹைதராபாத்தில் இருந்து ஈரானுக்கு இரண்டு நபர்களை அனுப்பி உள்ளதாகவும், அவர்களின் சிறுநீரகங்களை பெற்றதாகவும் தெரியவருகிறது.

உடல் உறுப்புகளை விற்க முன் வரும் இவர்கள் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். பண நேருக்கடியில் இருப்பவர்ளை தேர்வு செய்து அவர்களிடம் வெறும் ரூ. 5 லட்சம் பணமும் , விமான டிக்கெட்டுகளும் தந்து, இடைத்தரகர்கள் மூலம் பெரும் தொகையைப் பெற்றுள்ளனர், ”என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஊதியம் பெற்று உடல் உறுப்பு தானம் செய்வது சட்டப்பூர்வமானது என நம்ப வைத்து இவர்களை சபித் ஏமாற்றியதாக போலீசார் கூறுகின்றனர். ” இந்த மோசடியில் வேறுயாரும் சம்பந்த பட்டுள்ளாரா என்பதையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.
காவல்துறையின் கூற்றுப்படி, சபித் டெஹ்ரானில் உள்ள ஒரு மருத்துவமனையில் 2019 முதல் உறுப்பு மாற்று சிகிச்சை பிரிவில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். அவர் மாத சம்பளம் ரூ 40,000. டெஹ்ரானுக்குச் செல்வதற்கு முன், சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ படித்தவர்.முதன் முதலில் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஃபேஸ்புக் நன்பர் ஒருவர் உதவியுடன் ஜூலை 2019 -ல் இலங்கைக்கு சென்று ரூ 5 லட்சத்திற்கு தனது சொந்த சிறுநீரகத்தை தானம் செய்யதுள்ளார் என்பதும் விசாரனையில் தெரியவந்துள்ளது.
தற்போது அவர் தனது குடும்பத்தினரைப் பார்ப்பதற்காக கேரளா வந்துள்ளார். அவரை புலனாய்வுப் பணியகத்தின் கண்காணிப்பின் உதவியுடன் , கொச்சி சர்வதேச விமான நிலையத்தின் குடியேற்ற அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தி கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
திங்கட்கிழமை (மே 20), நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். போலீஸார் அவரை செவ்வாய்க்கிழமை (மே 21) காவலில் எடுத்து விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர்.