மூதாட்டி கழுத்தறுத்து கொலை- 12 சவரன் தங்க நகை கொள்ளை
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கரும்புக்காட்டில் மூதாட்டி கழுத்து அறுத்து கொலை செய்துவிட்டு கழுத்தில் இருந்த12 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஓடப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பாவாயி. மூதாட்டியான இவர் கணவர் இறந்த நிலையில், தனியாக வசித்து வருகிறார். இன்று துடைப்பம் செய்வதற்காக தோட்டத்தில் உள்ள தென்னை ஓலை எடுக்க சென்றுள்ளார். இதையடுத்து நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில் கரும்புக்காட்டிற்கு சென்ற விவசாயி மூதாட்டி கழுத்து அறுத்து கொலை செய்த நிலையில், கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊர் மக்கள் பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிபாளையம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் மூதாட்டி பாவாயி கழுத்தில் இருந்த 12பவுன் தங்க நகைகள் மட்டும் கொள்ளை போனது தெரியவந்தது. இதை தொடர்ந்து மாவட்ட எஸ்பி கலைச்செல்வன் சம்பவ இடத்தில் நேரில் சோதனை செய்தார். அதன் பின்னர் மோப்பநாய் சீமா வரவழைக்கப்பட்டும் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் சடலம் கிடந்த இடத்தில் தடயங்களை சேகரித்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சீமாற் புள்ளு சேகரிக்க சென்ற மூதாட்டி கரும்பு காட்டில் கழுத்து அறுத்து கொலை செய்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.