Homeசெய்திகள்க்ரைம்சொத்துத் தகராறில் தந்தையை மண்வெட்டியால் வெட்டிக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை: சேலம் நீதிமன்றம் பரபரப்பு...

சொத்துத் தகராறில் தந்தையை மண்வெட்டியால் வெட்டிக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை: சேலம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

-

- Advertisement -

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சொத்தைப் பிரித்துக் கொடுக்க மறுத்த தந்தையை மண்வெட்டியால் வெட்டிக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து சேலம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.​சொத்துத் தகராறில் தந்தையை மண்வெட்டியால் வெட்டிக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை: சேலம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

​சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், வைகுந்தம் ஊராட்சிக்குட்பட்ட வேடிச்சிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சின்னபழனி. விவசாயக் கூலித் தொழிலாளியான இவருக்கு துரைசாமி, சுப்பிரமணி என இரு மகன்கள் இருந்தனர். இதில் மூத்த மகன் துரைசாமி கடந்த 2018-ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். ​இதனைத் தொடர்ந்து, சின்னபழனிக்குச் சொந்தமான சுமார் 3 ஏக்கர் நிலத்தைப் பாகம் பிரித்துத் தருமாறு இளைய மகன் சுப்பிரமணி தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், “மூத்த மகன் இறந்து ஒரு வருடம் கூட ஆகவில்லை, அதற்குள் என்ன அவசரம்?” என்று கூறி சின்னபழனி நிலத்தைப் பிரிக்க மறுத்துள்ளார்.

we-r-hiring

​​தந்தை நிலத்தைப் பிரித்துத் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த சுப்பிரமணி, கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம், தனது தந்தை சின்னபழனியை மண்வெட்டியால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். இதுகுறித்துத் தகவலறிந்த சங்ககிரி போலீசார், வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த சுப்பிரமணியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். ​​இது தொடர்பான வழக்கு சேலம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி இன்று (06-07-2026) பரபரப்பு தீர்ப்பை வழங்கினார். ​குற்றவாளி சுப்பிரமணிக்கு ஆயுள் தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், இந்த அபராதத் தொகையைக் கட்டத் தவறினால், கூடுதலாக 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். ​​இந்த வழக்கில் துரிதமாகவும் முறையாகவும் விசாரணை நடத்தி, குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்த சங்ககிரி காவல் துறையினரைச் சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SP) நேரில் பாராட்டியுள்ளார்.

சோழவரத்தில் துணிகர கொள்ளை – பூட்டிய வீட்டை உடைத்து 35 சவரன் நகை திருட்டு!

MUST READ