நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சோ்ந்த 11 மீனவா்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார் நகர் மீனவ கிராமத்தை சேர்ந்த 11 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியது மட்டுமல்லாமல் அவர்கள் பிடித்த மீன்கள், ஜிபிஎஸ் கருவி, வலைகள் உள்ளிட்ட மீன்பிடி தளவாட பொருட்களை பிடுங்கி செல்வது வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில், நாகபட்டினத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற நம்பியார்நகர் கிராமத்தை சேர்ந்த சசி குமார், உதயகுமார், சிவ சங்கர், கிருபா, கமலேஷ், விக்னேஷ், விமல், சுகுமார், திருமுருகன், முருகன், அருண் உள்ளிட்ட 11 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூரமான தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. சந்திரபாபு என்பவருக்கு சொந்தமான படகிலும் சசிகுமார் என்பவருக்கு சொந்தமான படகிலும் 11 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். கோடியக்கரை தென் கிழக்கே மீன் பிடித்து கொண்டிருந்த போது இந்திய எல்லைக்குள் நுழைந்து இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர்.

அப்போது கடற்கொள்ளையர்கள் படகில் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியதில் சசிகுமார் கடுமையாக தாக்கப்பட்டார். அதே போல் சிவசங்கர் என்ற மீனவருக்கு இடதுகையில் மணிக்கட்டில் அாிவாள் வெட்டு ஏற்பட்டு நரம்பு துண்டிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் மருத்துவமனைக்கு அவர் மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். 10 மீனவர்கள் நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீனவர்களிடம் இருந்த வலைகள், மீன்பிடி தளவாடப்பொருட்கள், ஐஸ் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் பிடுங்கி சென்றனர்.
மேலும் ரூ.5 லட்சம் மதிப்புள்ள வலைகள், சுசுகி எஞ்சின்களை பறித்து சென்றனர். மீனவர்கள் உயிருக்கு பயந்து அவர்களது உடமைகளை கடற்கொள்ளையர்களிடம் கொடுத்துவிட்டு. தற்போது கரை திரும்பி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நடுக்கடலில் சுதந்தரமாக மீன்பிடிப்பதற்கு ஒன்றிய, மணிலா அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தாக்குதல் சம்பவங்கள் இனி தொடரக்கூடாது என்ற கோரிக்கையையும் நாகப்பட்டினம் மீனவர்கள் முன்வைத்துள்ளனர்.
முடிந்தது கதை! அமித்ஷா நினைச்சாலும் முடியாது! விஜய்க்கு இருக்கும் ஒரே ஆப்ஷன்! அய்யநாதன் நேர்காணல்!