திமுக வடக்கு மண்டல பாக முகவர்கள் பயிற்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜோலார்பேட்டை புறப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே மண்டலவாடி பகுதியில் இன்று மாலை திமுக வடக்கு மண்டல பாக முகவர்கள் பயிற்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த பாக முகவர்கள் பயிற்சி மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பிருந்தாவன் விரைவு ரயில் மூலமாக திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை புறப்பட்டார்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ரயில் நிலையத்தில் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் ஐ.பரந்தாமன் உடன் திமுக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்று வழியனுப்பி வைத்தனர்.

குறிப்பாக, தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம்காட்டி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு எவ்வித பாதிப்பும் வரக் கூடாது என்பதற்காக 3 மாத கலைஞர் உரிமைத் தொகையாக 3 ஆயிரம் ரூபாய், கோடை சிறப்பு தொகை 2 ஆயிரம் ரூபாய் என 5 ஆயிரம் ரூபாய் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில் இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகையால் பலனடைந்த ஏராளமான மகளிர் சென்ட்ரல் ரயில் நிலைய நுழைவாயில் மற்றும் வழிநெடுக உற்சாக வரவேற்பளித்தனர்
இதனையடுத்து, ஜோலார்பேட்டை புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலை மார்க்கமாக மண்டலவாடி பகுதிக்கு சென்று இன்று மாலை நடைபெறும் திமுக பாக முகவர்கள் பயிற்சி மாநாட்டில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து, ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலையே சதாப்தி ரயிலில் பயணம் செய்து சென்னை திரும்புகிறார்.
திராவிட மாடல் தொடர மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


