spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்மொத்த மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிரடி சோதனை!

மொத்த மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிரடி சோதனை!

-

- Advertisement -

பழங்கள் தரமாக இல்லாத பட்சத்தில் கடை உரிமம் உடனடியாக ரத்து செய்வதுடன் அபராதமும் விதிக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.மொத்த மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிரடி சோதனை!ரசாயனத்தால் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை விற்பனை செய்தால் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது. தமிழகத்தில் மாம்பழ சீசன் களைகட்ட தொடங்கி உள்ளது. இந்த நிலையில், சில்லறை மற்றும் மொத்த விற்பனை கடை, குடோன்களில் ரசாயனத்தால் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை இருக்கிறதா? என்பதை கண்டறிவதற்கு சோதனை செய்ய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், சீனாவிலிருந்து வரக்கூடிய ரசாயன பவுடர் மற்றும் ஸ்பீரே உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்ட சுழலில் அத்தகைய பொருட்களின் விற்பனையையும் கண்காணிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சமீப நாட்களாக பங்கனப்பள்ளி, செந்தூரா போன்ற மாம்பழங்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டு வரும் நிலையில், செயற்கை முறையில் ரசாயனம் கலந்து பழங்களை பழுக்கவைப்பது தொடர்பாக புகார்கள் எழுந்து வரக்கூடிய சூழலில் இத்தகைய சோதனையை தீவிரப்படுத்துமாறு உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உணவுப்பாதுகாப்புத்துறையின் தர சட்டத்தின்படி பழங்கள் தரமாக இல்லாத பட்சத்தில் கடை உரிமம் உடனடியாக ரத்து செய்வதுடன் அபராதமும் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தது.

பால் சந்தையை யாராலும் ஆக்கிரமிக்க முடியாது – பால்வளத்துறை அமைச்சர்

we-r-hiring

 

MUST READ