Homeசெய்திகள்இந்தியாதொடர்ந்து ஆறு முறை பட்ஜெட் தாக்கல் செய்த பெருமையை பெறுகிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தொடர்ந்து ஆறு முறை பட்ஜெட் தாக்கல் செய்த பெருமையை பெறுகிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

-

- Advertisement -

 

"புற்றுநோய் மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு"- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி!
Photo: Union Minister Nirmala Sitaraman

முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கு பிறகு தொடர்ந்து ஆறு முறை பட்ஜெட் தாக்கல் செய்த பெருமையை இந்த முறை பெறுகிறார் மத்திய நிதியமையச்சர் நிர்மலா சீதாராமன்.

லாலுவின் புதிய வியூகம்- பீகார் அரசியலில் பரபரப்பு!

கடந்த 2019- ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து முழுமையான ஐந்து பட்ஜெட்டுகளைத் தாக்கல் செய்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரும் பிப்ரவரி 01- ஆம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லீ, ப.சிதம்பரம், யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் இதுவரை 5 முழு பட்ஜெட்டுகளைத் தாக்கல் செய்துள்ளனர்.

முன்னதாக, முன்னாள் பிரதமர் மொராஜி தேசாய் 10 முழு பட்ஜெட்டுகளைத் தாக்கல் செய்து அதிக மத்திய பட்ஜெட்டுகளைத் தாக்கல் செய்தவர் என்ற பெருமையைப் பெற்றவர். இதில் ஐந்து முழு பட்ஜெட்டுகள் 1959- 1964 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஒரு இடைக்கால பட்ஜெட்டைத் தொடர்ந்து தாக்கல் செய்திருந்தார்.

அதன் பிறகு, தற்போதையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தான் ஐந்து முழுமையான பட்ஜெட்டுகளையும், ஒரு இடைக்கால பட்ஜெட்டையும் தொடர்ந்து தாக்கல் செய்யும் பெருமையைப் பெறுகிறார். வரும் ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், புதிய அரசு பொறுப்பேற்கும் வரையிலான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.

ஜூன் மாதம் புதிய அரசு பதவியேற்ற பின், ஜூலை மாதத்தில் 2024- 2025 நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். மோடி தலைமையிலான அரசு கடந்த 2014- ஆம் ஆண்டு பதவியேற்ற பின் அருண் ஜெட்லி 2014, 2015 முதல் 2018, 2019 வரை ஐந்து பட்ஜெட்டுகளைத் தாக்கல் செய்தார்.

“இந்தியா கூட்டணியில் நீடிக்கிறோம்”- ஐக்கிய ஜனதா தளம் திட்டவட்டம்!

2017- ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி 01- ஆம் தேதி மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும் முறையைக் கொண்டு வந்தார். அருண் ஜெட்லி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போது, 2019- ல் கூடுதல் பொறுப்பு வகித்த பியூஸ் கோயல் தாக்கல் செய்தார்.

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, 1970- 1971 நிதியாண்டில் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அவருக்கு பிறகு மத்திய நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற பெண் என்ற பெருமை நிர்மலா சீதாராமனுக்கு உள்ளது.

MUST READ