Homeசெய்திகள்இந்தியாஅரியானா, ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

அரியானா, ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

-

அரியானா, ஜம்மு – காஷ்மீர் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. கடந்த 2019ம் ஆண்டு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் நடைபெற்ற இந்த தேர்தலில் பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். 3 கட்ட தேர்தலில் 63.45 சதவீத வாக்குகள் பதிவாகின.

இத்தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்தும், பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி தனித்தும் போட்டியிட்டன. இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கர்நாடகத் தேர்தல் முடிவுகள்: கட்சிகள் பெற்ற வாக்கு விவரங்கள்!
File Photo

இதேபோல்  90 தொகுதிகளை கொண்ட அரியானா சட்டப்பேரவை ஒரே கட்டமாக கடந்த 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இத் தேர்தலில், 67.90 சதவீத வாக்குகள் பதிவாகின. இதில் காங்கிரஸ், பாஜக மற்றும் ஜேஜேபி ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. இந்த நிலையில் அரியானா சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணும் பணி சற்று முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து, காலை 8.30 மணிக்கு வாக்குப் பெட்டிகள் பிரிக்கப்பட்டு வாக்கு எண்ணும் பணி நடைபெறும்.

காஷ்மீர் மற்றும் அரியானா ஆகிய இரு மாநிலங்களிலும் காலை 11 மணிக்கு யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்கிற முடிவுகள் தெரியவரும். சற்று முன்பு வரை அரியானாவில் காங்கிரசும், காஷ்மீரில் காங்கிரஸ் – தேசிய மாநாட்டு கட்சி கூட்டணியும் முன்னிலை  வகிக்கின்றன.

MUST READ