
‘இந்தியா’ கூட்டணி தற்போது பலவீனமாக உள்ளதாக காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன்!
மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள ‘இந்தியா’ கூட்டணி குறித்து ஜம்மு- காஷ்மீரில் உள்ள குப்வாரா செய்தியாளர்களிடம் பேசிய உமர் அப்துல்லா, இந்தியா கூட்டணிக்குள் ஒரு சில பிரச்சனைகள் நிலவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், இந்த கூட்டணி பலவீனமாக இருப்பதாகவும் அவர் கூறினார். தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதில் ஒருசில கட்சிகளிடையே பிரச்சனை நீடிப்பதாகவும், குறிப்பாக, சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சிகள் உத்தரப்பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுவதாகச் சுட்டிக்காட்டினார்.
மாரடைப்பால் மரணம்- மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை!
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு மீண்டும் ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தி, ஒருங்கிணைந்து செயல்படுவோம் எனவும் உமர் அப்துல்லா விளக்கம் அளித்துள்ளார்.