Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்!

ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்!

-

ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்!

பொதுவாக காய்ச்சல், ஜலதோஷம் ஏற்படும் சமயத்தில் ஆவி பிடிப்பது மிகவும் நல்லது. அதே சமயம் வெறும் தண்ணீரை சுடவைத்து ஆவி பிடிப்பதை விட அதில் நொச்சி இலைகள், துளசி இலைகள் ஆகியவற்றை சேர்த்து ஆவி பிடிப்பதனால் தீராத தலைவலியும் ஜலதோஷமும் குணமாகும். அதே சமயம் ஆவி பிடிப்பது முகத்தில் உள்ள அழுக்குகளையும் விரைவில் நீக்கிவிடுமாம். நம் முகத்தில் கரும்புள்ளி, வெண்புள்ளி இருப்பின் ஆவி பிடிப்பதன் மூலம் அதனை உடனடியாக சரி செய்யலாம். வாரத்திற்கு ஒருமுறை ஆவி பிடிப்பதனால் நம் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேறி புதிய சரும செல்கள் வளர்ச்சி அடையும். அதாவது நம் முகத்தில் முகப்பருக்கள் ஏதேனும் இருந்தால் அதனால் முகத்தில் துளைகள் காணப்படும். எனவே அது போன்ற துறைகளில் இருக்கும் அழுக்குகளை நீக்க ஆவி பிடிப்பது சிறந்தது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! மேலும் இது சருமத்தை மென்மையாகவும் பொலிவாகவும் வைத்திருக்க உதவும். அத்துடன் சருமத்தின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் வழிவகை செய்கிறது. அடுத்ததாக ஆவி பிடிப்பதனால் சைனஸ் பிரச்சனைகளும் குறைய வாய்ப்பிருக்கிறது. எனவே வாரத்திற்கு ஒருமுறையாவது சூடான நீரில் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான மஞ்சள் சேர்த்து ஐந்து முதல் பத்து நிமிடங்கள் மட்டும் ஆவி பிடித்தால் பலவிதமான நன்மைகள் உண்டாகின்றன. ஆவி பிடித்தபின் சுத்தமான காட்டன் துணியினால் முகத்தை துடைத்து விடுவது நல்லது. எனவே என்றும் இளமையாக இருக்க நினைப்பவர்கள் அடிக்கடி ஆவி பிடிப்பது நல்ல ரிசல்ட்டை தரும்.

MUST READ